உள்ளடக்கத்துக்குச் செல்

ஊக்லி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹூக்லி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஊக்லி ஆற்றங்கரையில் படகுகளும் ஆட்களும், 1915 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம்.
பராக்பூருக்கும், சேராம்பூருக்கும் இடையில் ஊக்லி ஆற்றில் செல்லும் ஒரு படகு, 2006 ஆண்டில் எடுக்கப்பட்ட படம்.

ஊக்லி ஆறு அல்லது பாகிரதி-ஊக்லி என்பது ஏறத்தாழ 260 கிமீ நீளமுள்ள கங்கை ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இந்த ஆறு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது; அம்மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்திலுள்ள ஃபராக்கா பராசு (Farakka Barrage) என்னும் இடத்தில் கங்கையில் இருந்து பிரிகிறது. முன்னர் ஊக்லி என்று அழைக்கப்பட்ட, ஊக்லி-சின்சுரா நகரம் இந்த ஆற்றங்கரையிலேயே உள்ளது. ஊக்லி என்னும் பெயர் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது தெளிவில்லை. நகரத்தின் பெயரிலிருந்து ஆற்றின் பெயர் வந்ததா அல்லது ஆற்றின் பெயரைத் தழுவி நகரத்துக்குப் பெயர் சூட்டப்பட்டதா என்பது தெரியவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊக்லி_ஆறு&oldid=3846577" இலிருந்து மீள்விக்கப்பட்டது