ஹல்டிகாட்
ஹல்டிகாட் (Haldighati), மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில், ராஜ்சமந்து மாவட்டத்தையும், பாலி மாவட்டத்தையும் இணைக்கும் கணவாய் பகுதியாகும்.
ஹல்டிகாட் கணவாய் உதய்பூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பெயர்க் காரணம்
[தொகு]இப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிற மண்னால் ஹல்டிகாட் எனப் பெயர் பெற்றது. இந்தி மொழியில் ஹல்டி என்பதற்கு மஞ்சள் எனப் பொருளாகும்.[1]
வரலாறு
[தொகு]ஹல்டிகாட் மலைக்கணவாய் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இப்பகுதியில் மேவார் மன்னர் மகாராணா பிரதாப் படைகளுக்கும், மான் சிங் தலைமையிலான முகலாயப் பேரரசுப் படைகளுக்கும் 1,576-இல் கடுமையான போர் நடைபெற்றது.
நினைவுச் சின்னங்கள்
[தொகு]ஹல்டிகாட் போரில் மகாராணா பிரதாபின் குதிரையான சேத்தக் முக்கியப் பங்காற்றியது. போரில் பலத்த காயம் அடைந்த சேத்தக் குதிரை 21 சூன் 1576-இல் இறந்தது. மகாராணா பிரதாப் சேத்தக் குதிரைக்கு மரியாதை செய்விக்கும் முகமாக தனியாக கல்லறையில் அடக்கம் செய்து நினைவுச் சின்னம் அமைத்தார். 2009-இல் இந்திய அரசு மகாராணா பிரதாப்பின் ஒலி - ஒளியுடன் கூடிய அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது. [2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Haldighati".
- ↑ www.haldighati.com, பார்க்கப்பட்ட நாள் January 19, 2010
வெளி இணைப்புகள்
[தொகு]- Excerpts from the great poem “Haldighati”, along with historical notes பரணிடப்பட்டது 2012-05-16 at the வந்தவழி இயந்திரம்