ஒளியாண்டு
SI அலகுகள் | |
---|---|
9.461×1015 மீ | 9.461×1012 கிமீ |
வானியல் அலகுகள் | |
63.24×103 வாஅ | 1 ஒஆ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
31.04×1015 அடி | 5.879×1012 மை |
ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள வானியல் அலகு ஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு.
வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல;
ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்
வரைவிலக்கணம்
[தொகு]ஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் ஒவ்வொன்றும் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட நாட்கள் 365.25 உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்:
ஒளித்துகளாகிய ஓர் ஒளியன் (photon), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது.
ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 1015 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும்.
ஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும்.
சில துணுக்குத் தகவல்கள்
[தொகு]- சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8.32 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது, ஒரு வானியல் அலகை (சூரியனுக்கும் பூமிக்கும் இடையான தூரம்), ஒளி பயணிப்பதற்கு ஏறத்தாழ 499 விநாடிகள் (8.32 நிமிடங்கள்) எடுத்துக் கொள்கிறது.[1]
- மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது.
- பூமிக்கு மிக அண்மையிலுள்ள (சூரியனன்றி) விண்மீனான புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
- பால் வழி என்றழைக்கப்படும், விண்மீன் திரளின் (நாள்மீன்பேரடை) குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும்.
- நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரத்தின் (ஆரையின்) நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது.
ஒளியாண்டுகளில் தூரங்கள்
[தொகு]அளவீடு (ஒளியாண்டுகளில்) | அளவு | உதாரணம் |
---|---|---|
10−9 | 40.4×10−9 ly | நிலாவிலிருந்து தெறிப்படைந்த சூரிய ஒளி புவியை அடைய 1.2 தொடக்கம் 1.3 செக்கன்கள் எடுக்கின்றது. (350000 தொடக்கம் 400000 கிலோமீட்டர் தூரம் ஒளி பயணிக்கின்றது). |
10−6 | 15.8×10−6 ly | ஒரு வானியல் அலகு (புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரம்). இத்தூரத்தை ஒளி 499 நொடிகளில் (8.32 நிமிடங்கள்) கடக்கின்றது. |
127×10−6 ly | ஹியூஜென்சு விண்கலம் சனியின் துணைக்காளான டைட்டனில் தரையிறங்கி, 1.2 பில்லியன் கிமீ தூரத்தில் உள்ள புவிக்கு படிமங்களை அனுப்பியது. | |
10−3 | 1.95×10−3 ly | புவியிலிருந்து மிக அதிக தூரத்திலுள்ள செய்ம்மதியான வொயேஜர் 1 புவியிலிருந்து 17 ஒளி மணித்தியலங்கள் தூரத்தில் உள்ளது as of December 2012[update]. இச்செய்ம்மதி இதன் தற்போதைய வேகமான 17 km/s (38000 mph) இல் தொடர்ந்து செல்லுமானால் புவியிலிருந்து ஒரு ஒளியாண்டு தூரத்தையடைய இன்னமும் 17500 வருடங்கள் எடுக்கும். நாசா அறிவியலாளர்கள் ஜூன் 15, 2012, கூறிய கருத்துப்படி வொயேஜர் 1 செய்ம்மதி 2015க்குள் சூரியக் குடும்பத்தை விட்டு விலகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
100 | 1.6×100 ly | ஓர்ட் முகில் எனப்படும் வானியல் பொருட் கூட்டம் அண்ணளவாக இரண்டு ஒளியாண்டுகள் விட்டமுடையது. |
2.0×100 ly | சூரிய ஈர்ப்பு ஆதிக்கத்தின் உச்ச வரம்பு 125000 AU). | |
4.22×100 ly | சூரியனுக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமான புரொக்ஸிமா சென்டாரி கிட்டத்தட்ட 4.22 ஒளியாண்டுகள் தூரத்திலுள்ளது. | |
8.60×100 ly | சூரியனை விட இரண்டு மடங்கு பெரியதும் 25 மடங்கு பிரகாசமானதுமான இரவு நேரத்தில் தெரியும் மிகப் பிரக்காசமான நட்சத்திரமான் சிரியஸ் அமைந்துள்ள தூரம். இது எமக்கு அருகிலிருப்பதால் இதனை விடப் பிரகாசமான நட்சத்திரங்களைக் காட்டிலும் பிரகாசமாகத் தென்படுகின்றது. | |
11.90×100 ly | வாழ்க்கைத் தகமையுடைய கிரகம் எனக் கருதப்படும் சூரியக் குடும்பத்தை சாராத HD 10700 e கிரகம் அமைந்துள்ள தூரம். இது புவியை விட 6.6 மடங்கு பெரியதுடன் அதன் 'சூரியனின்' வாழ்தகமைப் பிரதேசத்தின் மத்தியிலுள்ளது. | |
20.5×100 ly | வாழ்க்கைத் தகமையுடைய கிரகம் எனக் கருதப்படும் முதலில் கண்டறியப்பட்ட சூரியக் குடும்பத்தை சாராத கிளீசு 581 ஜி கோள் அமைந்துள்ள தூரம். இது புவியை விட மூன்று அல்லது நான்கு மடங்கு பெரியதுடன், கிளீஸ் 581 நட்சத்திரத்தின் வாழ்தகமைப் பிரதேசத்தின் மத்தியிலுள்ளது. | |
310×100 ly | சிரியஸுக்கு அடுத்ததாக மிகப் புவியிலிருந்து அவதானிக்கும் போது மிகப்பிரகாசமான நட்சத்திரமான கனோபஸ் அமைதுள்ள தூரம். இது உண்மையில் சூரியனை விட 15000 மடங்கு பிரகாசமானதெனக் கருதப்படுகின்றது. | |
103 | 26×103 ly | பால்வெளி மண்டலத்தின் மையம் கிட்டத்தட்ட 26000 ஒளியாண்டுகள் தூரத்திலுள்ளது. |
100×103 ly | பால்வெளியின் விட்டம் கிட்டத்தட்ட 100000 ஒளியாண்டுகளாகும். | |
165×103 ly | மனிதனாலறியப்பட்ட மிகப் பிரகாசமான விண்மீனான R136a1 அமைந்துள்ள தூரம். இது சூரியனை விட 8.7 மில்லியன் மடங்கு பிரகாசமானது. | |
106 | 2.5×106 ly | அந்திரொமேடா பேரடை அமைந்துள்ள தூரம். |
3×106 ly | வெற்றுக் கண்ணுக்குப் புலப்படும் மிகத் தொலைவான விண்பொருளான டிரையான்கியூலம் விண்மீன் மண்டலம் அமைந்துள்ள தூரம் | |
59×106 ly | மிக அருகிலுள்ள விண்மீன் மண்டலத் திரளான விர்கோ கொத்து விண்மீன்கூட்டம் கிட்டத்தட்ட 59 மெகா ஒளியாண்டுகள் தூரத்திலுள்ளது. | |
150×106 – 250×106 ly | பெரிய அட்ராக்டர் 150 தொடக்கம் 250 மெகா மெகா ஒளியாண்டுகள் தூரத்திலுள்ளது. | |
109 | 1.2×109 ly | ஸ்லோன் பெருஞ்சுவர் (பெருஞ்சுவர் அல்ல) கிட்டத்தட்ட ஒரு கிகா ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. |
2.4×109 ly | மிகப் பிரகாசமான துடிப்பண்டம் 3C 273 அமைந்துள்ள தூரம். | |
45.7×109 ly | புலப்படும் அண்டத்தின் ஆரை |
தொடர்புடைய அலகுகள்
[தொகு]ஒளியாண்டுடன் தொடர்புபட்ட பல அலகுகள் இன்றுவழக்கத்தில் உள்ளன. உதாரணமாக வானியலில் பயன்படுத்தப்படும் ஒளி வினாடியானது 299792458 மீற்றர்கள் அல்லது ஒரு ஒளியாண்டின் 1⁄31557600 பகுதியாகும்
உசாத்துணைகள்
[தொகு]- ↑ IERS Conventions (2003) பரணிடப்பட்டது 2014-04-19 at the வந்தவழி இயந்திரம், Chapter 1, Table 1-1.