உள்ளடக்கத்துக்குச் செல்

விண்டோசுத் துருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்டோஸ் துருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விண்டோசுத் துருவி

மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
Details
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 95இலிருந்து
முன்வந்ததுவிண்டோஸ் 3.1எக்சுவின் கோப்பு மேலாளர்
Related components
துவங்கு மெனு

விண்டோஸ் கோப்பு உலவி (ஆங்கிலம்: Windows Explorer) என்பது விண்டோஸ் 95இலிருந்து அமைக்கப்பட்ட மைக்ரோசாப்ட் விண்டோசு இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்டு வரும் கோப்பு முகாமை முறைமையின் வரைவியல் முகமாகும்.[1] விண்டோசுத் துருவி இன்றியும் கணினியைக் கட்டுப்படுத்த முடியும் (உதாரணமாக, கட்டளை செயலழைப்பு மென்பொருளின் மூலம் கணினியைக் கட்டுப்படுத்த முடியும்.). விண்டோஸ் துருவி தனி வட்டு சியில் (அல்லது கணினியில் விண்டோசு நிறுவப்பட்டிருக்கும் செலுத்தியில்) Windows என்ற கோப்புறையினுள் காணப்படும்.[2]

திறக்கும் விதம்

[தொகு]

முகப்புத் திரையில் உள்ள கணினிப் படவுரு மீது இரு தடவைகள் சொடுக்குவதன் மூலம் அல்லது விசைப்பலகையின் விண்டோஸ் சாவியையும் பேரெழுத்து இயையும் ஒரே சமயத்தில் அழுத்துவதன் மூலம் அல்லது இயக்கு... கட்டளையில் explorer.exe என்று தட்டச்சிட்டு இயக்குவதன் மூலம் அல்லது தொடக்க மெனுவில் என் கணினி என்பதைச் சொடுக்குவதன் மூலம் அல்லது துவங்கு மெனுவில் அனைத்து நிரல்கள் என்ற தெரிவினுள் சென்று, துணைக்கருவிகள் என்ற தெரிவிலுள்ள Windows Explorer என்பதைச் சொடுக்குவதன் மூலம் விண்டோஸ் துருவியைத் திறக்க முடியும்.[3][4]

கருவிப் பட்டைகள்

[தொகு]

விண்டோசு எக்சு. பி. இயங்குதளத்தில் விண்டோஸ் துருவி மென்பொருளில் மூன்று கருவிப் பட்டைகள் காணப்படும். அவையாவன:-

  • நிலையான பொத்தான்கள்
  • முகவரிப் பட்டி
  • இணைப்புகள்[5]

நிலையான பொத்தான்கள்

[தொகு]

நிலையான பொத்தான்கள் கருவிப் பட்டையில் பின்னால், முன்னால், மேலே, தேடல், கோப்புறைகள், காட்சிகள் போன்ற பொத்தான்கள் காணப்படும்.[6] இதில் உள்ள கருவிகளை மாற்றுவதற்கு, காட்சி என்பதைச் சொடுக்க வரும் பட்டியில் கருவிப்பட்டிகள் என்ற தெரிவினுள் சென்று விருப்பமாக்கல்... என்பதில் சொடுக்கி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.[7]

முகவரிப் பட்டி

[தொகு]

முகவரிப் பட்டியின் மூலம் கணினியில் உள்ள கோப்புறைகளுக்குள் பிரவேசிக்க முடியும்.[8] அதே போல, முகவரிப் பட்டியில் வலைக் கடப்பிடங்களின் உரலிகளைத் தட்டச்சுச் செய்து வலைக் கடப்பிடங்களைப் பார்வையிட முடியும்.[9] இந்தப் பட்டியைக் கட்டளைக் கோடாகவும் கட்டளை விழிப்பூட்டு மென்பொருளுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

இணைப்புகள்

[தொகு]

இக்கருவிப் பட்டையில் பயனர் அடிக்கடி செல்லும் வலைப் பக்கங்களின் உரலிகளைச் சேமித்து அவற்றுக்குச் சுலபமாகச் செல்ல முடியும்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. விண்டோசு 95-ஓர் அறிமுகம் (ஆங்கில மொழியில்)
  2. explorer.exe என்றால் என்ன? explorer.exe உளவு நிரல் அல்லது ஒரு நச்சு நிரலா (ஆங்கில மொழியில்)?
  3. விண்டோஸ் துருவியை எப்படித் திறப்பது (ஆங்கில மொழியில்)
  4. ["ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)]
  5. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] பணிசெயல் முறைமை (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. கருவிப்பட்டைகள் (ஆங்கில மொழியில்)
  7. ["நியமக் கருவிப் பட்டை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21. நியமக் கருவிப் பட்டை (ஆங்கில மொழியில்)]
  8. ["விண்டோசு விஸ்டா (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-08. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21. விண்டோசு விஸ்டா (ஆங்கில மொழியில்)]
  9. விண்டோஸ் துருவி முகவரிப் பட்டி (ஆங்கில மொழியில்)
  10. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எப்படி இணைப்புகள் கருவிப்பட்டையை விருப்பமாக்குவது (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசுத்_துருவி&oldid=3591958" இலிருந்து மீள்விக்கப்பட்டது