விக்ரமாதித்தியன்
விக்கிரமாதித்தியன் | |
---|---|
சக்கரவர்த்தி சாம்ராட் | |
உஜ்ஜைனிலுள்ள விக்கிரமாத்தித்தியனின் தற்கால உருவம். |
விக்கிரமாதித்தியன் (Vikramaditya, (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: Vikramāditya) என்பவர் நூற்றுக்கணக்கான மரபுக்கதைகளில் பேசப்பட்ட ஒரு அரசராவார்.[1][2][3] பல கதைகள் இவரை உஜ்ஜயினி (பாடலிபுத்திரம் அல்லது பைத்தான் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசராக விவரிக்கின்றன. பல இந்து அரசர்கள் "விக்கிரமாதித்தியன்" என்ற பெயரைக் கொண்டுள்ளனர். குறிப்பாக குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் சாம்ராட் ஹேம் சந்திர விக்ரமாதித்யா ('ஹெமு'என பலராலும் அறியப்பட்டவர்). வெகுசனக் கலாச்சாரத்தின்படி இவர், சகர்களைத் தோற்கடித்து விக்ரம் நாட்காட்டி காலத்தை பொ.ஊ.மு. 57 இல் துவக்கினார். இவரை வரலாற்றுப் பாத்திரமாக நம்புவர்கள் அவரை பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதுகின்றனர்.
பெயரும் சொற்பிறப்பியலும்
[தொகு]"விக்கிரமாதித்தியன்" என்றால் "வீரத்தின் சூரியன்" (விக்கிரமன் - "வீரம்"; ஆதித்தியன்" - "சூரியன்) எனப் பொருள்படும். இவர் விக்கிரமன், பிக்ரமஜித்தன், விக்கிரமார்க்கன் எனவும் அறியப்படுகிறார். சில கதைகள் இவரை மிலேச்சர்களிடமிருந்து இந்தியாவை மீட்டவராக இவரைச் சித்தரிக்கின்றன. பெரும்பான்மைக் கதைகள் இந்த மிலேச்சர்களை, சகர்களென அடையாளப்படுத்தப்படுகின்றனர்; மேலும் அரசர் "சகரி" (சகர்களின் எதிரி) என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.[4]
தமிழ் மரபுக்கதைகள்
[தொகு]இடைக்காலத் தமிழ் மரபுக்கதை ஒன்றில் விக்கிரமாதித்தியனின் உடலில் உலகளாவிய பேரரசருக்குரிய 32 அடையாளங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் அம்மன் திரிபுரசுந்தரிக்கு பேரரசர் 32 அம்சங்களும் பொருந்திய அரசரைப் பலிகொடுத்தால் தனக்குத் தேவையான இரசவாதப் பாதரசம் கிடைக்குமென ஒரு அந்தணர் விக்கிரமாதித்தியனிடம் வேண்டுகிறார். விக்கிரமாதித்தியனும் தன்னைப் பலிகொடுத்த சித்தமானார். ஆனால் அம்மன் பலியைத் தடுத்து அவனது விருப்பத்தை நிறைவேற்றுகிறாள்.[5]
மற்றொரு கதையில் விக்கிரமாதித்தியன் நவகண்டப் பலிபூசையை மேற்கொள்கிறான். இப்பூசையின்படி, உடலை எட்டுத் துண்டுகளாக்கி எட்டு இடங்களில் குடிகொண்டுள்ள எட்டு பைரவர்களுக்கும் தலையை அம்மனுக்கும் பலியிட வேண்டும். இப்பூசையின் பலனாக அம்மன் மனித பலி கேட்பதை நிறுத்த வேண்டும் என அம்மனிடம் விக்கிரமாதித்தியன் வேண்டிக்கொள்கிறான்.[5]
சோழ பூர்வ பட்டயம் எனும் சோழர் காலப் பழந்தமிழ்ச் சுவடியில் மூவேந்தர்களின் தோற்றம் குறித்த ஒரு கதை காணப்படுகிறது. இக்கதையின்படி, சாலிவாகனன் (போஜன்) என்பவன் ஒரு சமண அரசன். இவன் சிவன், விஷ்ணுவை வணங்குபவர்களையெல்லாம் கொல்கிறான். இதைத் தடுத்து, சாலிவாகனனை வெற்றி கொள்வதற்காக, வீர சோழன், உலா சேரன், வஜ்ரங்க பாண்டியன் என்ற மூன்று அரசர்களைத் தோற்றுவிக்கிறார். இந்த மூன்று அரசர்களும் பல வீரதீரச் அனுபவங்களைப் பெறுகின்றனர். சந்தனுவிலிருந்து விக்கிரமாதித்தியன் காலம்வரையிலான கல்வெட்டுகள் முதல் புதையல்களை அடைவதுவரையான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். இறுதியாக 1443 இல் (உறுதியற்ற காலம்; கலியுகத் துவக்கமாக இருக்கலாம்) சாலிவாகனனைத் தோற்கடிக்கின்றனர்.[6]
தாக்கம்
[தொகு]அமர் சித்திரக் கதை என்ற சிறுவர் புத்தகத்தில் விக்கிரமாதித்தியன் குறித்த பல கதைகள் இடம்பெற்றுள்ளன.[7] பல இந்தியத் திரைப்படங்கள் விக்கிரமாதித்திய அரசரைக் கொண்டு பல்வேறு ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன.[8] தூர்தர்ஷன் உள்ளிட்ட தொலைகாட்சிகளில் விக்கிரமாதித்தியன் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயின.[9]
இந்தியக் கடற்படை வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்றுக்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா எனப் பெயரிடப்பட்டுள்ளன.[10] 2016 ஆம் ஆண்டு திசம்பர் 22 அன்று சாம்ராட் விக்கிரமாதித்தியாவை சிறப்பிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறையால் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.[11] விக்கிரமாதித்தியன் கதையை, வரலாற்றுப் புதின ஆசிரியர் சட்ருஜீத் நாத் "விக்கிரமாதித்தியன் வீரகதைகள்" என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.[12]
நூலடைவுகள்
[தொகு]- A. K. Warder (1992). "XLVI: The Vikramaditya Legend". Indian Kāvya Literature: The art of storytelling. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0615-3.
- D. C. Sircar (1969). Ancient Malwa And The Vikramaditya Tradition. Munshiram Manoharlal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8121503488. Archived from the original on 17 June 2016. பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2023.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help); More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - Hans T. Bakker (1984). Ayodhya. Institute of Indian Studies, University of Groningen. இணையக் கணினி நூலக மைய எண் 769116023.
- Kailash Chand Jain (1991). Lord Mahāvīra and His Times. மோதிலால் பனர்சிதாசு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0805-8.
குறிப்பு
[தொகு]- ↑ Gopal, Ram (1984). Kālidāsa: His Art and Culture (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 15. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
- ↑ Reddy, Sheshalatha (15 October 2013). Mapping the Nation: An Anthology of Indian Poetry in English, 18701920 (in ஆங்கிலம்). Anthem Press. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78308-075-5. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
- ↑ Agrawal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0592-7. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
The assumption of the title Vikramaditya37 by Chandragupta II, has been responsible for confusing his name with the legendary founder of the Vikrama samvat of B.C. 57 in spite of the fact that ever since the discovery, in 1884, of the Mandasor stone inscription of the Guild of silk-weavers bearing dates 493 and 529 it has been established that the era which commenced in 57 B.C. was founded by the Malavasand dates from the time of the foundation of the Malava republic. The identification of the legendary king Vikramaditya of Ujjaini has been discussed at length by various scholars for a long time.
- ↑ D. C. Sircar 1969, ப. 115.
- ↑ 5.0 5.1 Alf Hiltebeitel (2009). Rethinking India's Oral and Classical Epics. University of Chicago Press. pp. 436–437. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226340555.
- ↑ William Cooke Taylor (1838). Examination and Analysis of the Mackenzie Manuscripts Deposited in the Madras College Library. Asiatic Society. pp. 49–55.
- ↑ Sharada Nāyak; Mala Singh (1973). Children's Books on India: An Annotated Bibliography. Educational Resources Center. p. 78.
- ↑ Screen World Publication's 75 Glorious Years of Indian Cinema: Complete Filmography of All Films (silent & Hindi) Produced Between 1913-1988. Screen World Publication. 1988.
- ↑ Priyanka Bhadani (12 September 2014). "Fantasy World". Indian Express. http://indianexpress.com/article/entertainment/screen/fantasy-world/.
- ↑ PM Narendra Modi dedicates largest warship INS Vikramaditya to the nation, pitches for self-reliance
- ↑ "Postage Stamps 2016, Government of India". Archived from the original on 2022-07-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ A new face to Indian mythology