உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பதிப்புரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:CR இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


விக்கிப்பீடியா அமெரிக்க மாநிலமான ஃபுளோரிடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள விக்கிமீடியா அறக்கட்டளையால் நிருவகிக்கப்படுகிறது. எனவே அமெரிக்கப் பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டு வருகிறது.

பதிப்புரிமை

[தொகு]

விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும் ஆக்கங்கள் பதிப்புரிமைக்கு உட்பட்டவை. குனூ தளையறு ஆவண உரிமம் (GNU) / கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் 3.0 (CC BY SA 3.0) ஆகிய பதிப்புரிமங்கள் விக்கிமீடியா ஆக்கங்களுக்குப் பொருந்தும். சுருக்கமாக இவற்றை பின்வருமாறு விளக்கலாம்:

  • விக்கிமீடியாத் திட்ட உள்ளடக்கங்கள் பிறர் எடுத்துப் பயன்படுத்தவும், மாற்றவும், விநியோக்கவும், விற்பனை செய்யவும், வர்த்தக ரீதியில் பயன்படுத்தவும் உரிமை பெற்றுள்ளன.
  • அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் விக்கிமீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

உள்ளடக்கங்களை சேர்ப்போர் கவனிக்க வேண்டியன

[தொகு]
  • பிற தளங்களில் வெளியான ஆக்கங்களை - படங்கள், உரை, கட்டுரை, சின்னங்கள், படைப்புகள் - போன்றவற்றை ஆக்கியவரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி விக்கிப்பீடியாவில் பதிவேற்ற இயலாது.
  • இணையதளங்களிலும் நூல்களிலும் கிடைக்கும் படங்கள் இலவசப் படங்களல்ல. அனைத்து படைப்புகளுக்கும் பதிப்புரிமை உண்டு. வலைத்தளங்களில், வலைப்பதிவுகளில், ஊடகங்களில் வெளியாகும் படங்களை விக்கிப்பீடியாவில் பதிவேற்ற இயலாது. இது பதிப்புரிமை மீறும் செயலாகும். பிறர் செய்கிறார்கள், இங்கு செய்தால் என்ன; கல்விக்காகத் தானே செய்கிறோம், நல்ல நோக்குடன் தானே செய்கிறோம் போன்ற வாதங்களுக்கு இங்கு இடமில்லை.
  • பதிப்புரிமை பெற்ற படங்களை எடுத்து ஃபோட்டோஷாப் போன்ற வரைகலை மென்பொருட்கள் மூலம் சில மாற்றங்கள் செய்து அதனை “சொந்த ஆக்கம்” என பதிவேற்ற இயலாது. மூலப் படத்தின் பதிப்புரிமம், இம்மாற்றங்களால் அற்றுப் போவதில்லை.
  • மூலத்தை மேற்கோளாகச் சுட்டியிருந்தாலும் அதிலிருந்து வரிகளை அப்படியே படியெடுத்து விக்கிக் கட்டுரைகளில் இணைக்க இயலாது. மேற்கோளின் செய்தியை உள்வாங்கி அதனைக் கட்டுரையாளர் தனது சொந்த வார்த்தைகளில் எழுதவேண்டும்.
  • பதிவேற்றப்படும் படங்களும் கோப்புகளும் பதிவேற்றுபவர் சொந்தமாக ஆக்கியவையாக இருக்க வேண்டும். படம் என்றால் அவரே எடுத்திருக்க வேண்டும். பிறர் ஆக்கியவற்றைச் சற்று மாற்றிவிட்டு அதனைத் தனது ஆக்கமாகக் கருதி தரவேற்றக் கூடாது.
  • பதிப்புரிமை காலாவதியான படங்களைப் பதிவேற்றலாம். பதிப்புரிமை காலம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. எ.கா. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஓர் ஆக்கம் வெளியாகி 60 ஆண்டுகள் கழித்து அதன் உரிமம் காலாவதியாகும். இவ்வாறு காலாவதியான படங்களை விக்கித் திட்டங்களில் பதிவேற்றலாம். ஆனால் பதிப்புரிமை காலாவதியாகி விட்டது என்று ஐயத்துக்கு இடமின்றி நிறுவும் பொறுப்பு பதிவேற்றுபவரையே சேரும்.
  • ஆக்குனர் யாரென அறியப்படாத படங்கள், ஆக்கங்கள் ஆகியவற்றுக்கும் பதிப்புரிமை உண்டு. பொதுவான ஒரு காட்சி என்பதையும், பிறரால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் காரணமாகச் சுட்டி படங்களை இங்கு பதிவேற்ற இயலாது. எ.கா. இந்து, கிறித்தவ, புத்த சமயங்கள் தொடர்பான படங்கள் (கடவுள்கள்) போன்றவை ஓவியர் யாரெனத் தெரியாமல் நடைமுறையில் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவ்வாறு விக்கித் திட்டங்களில் செய்ய இயலாது.
  • பிறரது படைப்புகளை விக்கிப்பீடியாவில் இணைக்க அவரது எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். எப்படி இதைச் செய்வது, அதற்கான வழிமுறைகள் இப்பக்கத்தில் - Requesting copyright permission தரப்பட்டுள்ளன.
  • படங்களைப் பதிவேற்றுபவர் கட்டாயமாக சேர்க்க வேண்டியவை 1)படத்தின் ஆக்குனர் யார் 2)பதிப்புரிமை என்ன 3) மூலம் என்ன என்பனவாகும்.
  • மேற்குறிப்பிட்ட விதிகளை மீறி பதிவேற்றப்படும் படங்களோ சேர்க்கப்படும் கட்டுரைகளோ படங்களோ எந்நேரத்திலும் நீக்கப்படலாம். ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட பகுதி பதிப்புரிமை மீறி படியெடுத்து சேர்க்கப்பட்டிருந்தாலும், அக்கட்டுரை முழுமையாகவும் நீக்கப்படலாம்.

விதிவிலக்குகள்

[தொகு]

மேற்குறிப்பிட்ட விதிகளுக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. அமெரிக்க பதிப்புரிமை விதிகள், கல்வி நோக்குக்காக “ நியாயப் பயன்பாடு” (Fair use) என்றொரு விதிவிலக்கினை அளிக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பின்வரும் பதிப்புரிமை பெற்ற படங்களைப் பதிவேற்றலாம்:

  • உயிருடன் இல்லாதவர்களின் படங்கள்
  • வரலாற்றுச் சிறப்புமிக்க படங்கள்.
  • ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விசயத்தைப் படம் கொண்டு விளக்கமுடியுமெனில் அப்படம்.
  • நூல் அட்டைகள், குறுவட்டு அட்டைகள், சுவரொட்டிகள், நாணயங்கள், அஞ்சல் தலைகள், பணத்தாள்கள் ஆகியவற்றின் குறைந்த தெளிதிறன் படங்கள்

ஆனால் இவ்விதிவிலக்கு உள்ளதே என்பதைப் பயன்படுத்தி பதிப்புரிமை விதிகளைப் புறந்தள்ள இயலாது. ஒரு கட்டுரையில் மூன்று அல்லது நான்கு நியாயப் பயன்பாட்டுப் படிமங்களுக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் பயன்படுத்தக்கூடிய பதிப்புரிமையற்ற படிமங்கள் கிடைக்குமெனில், நியாயப்பயன்பாட்டுப் படிமம் நீக்கப்படும். (எடுத்துக் காட்டாக, ஒருவரது கட்டுரையில் அவரது உருவத்தை சித்தரிக்க ஒரு பதிப்புரிமையற்ற படிமம் இருக்குமெனில் நியாயப் பயன்பாட்டுக் காரணம் கொண்டு வேறெந்த படத்தையும் அவர் உருவத்தை சித்தரிக்கப் பயன்படுத்த இயலாது)

மேலும் நியாயப் பயன்பாட்டுக்காக பதிவேற்றப்படும் ஒவ்வொரு படத்திற்கும், தெளிவான நியாயப் பயன்பாட்டுக் காரணம் தரப்பட வேண்டும்.

மேலும் பார்க்க

[தொகு]