மெய்க்கீர்த்தி
Appearance
(மெய்கீர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மெய்க்கீர்த்தி என்பது கல்வெட்டு ஒன்று எழுதப்படும் காலத்தில் ஆட்சியில் உள்ள அரசனின் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டின் பகுதியாகும். கல்வெட்டுக்கள் முன்னரே தமிழ்நாட்டு மன்னர்களால் ஆக்கப்பட்டாலும் அவற்றில் விரிவான மெய்க்கீர்த்திகள் இருக்கவில்லை. சோழ மன்னன் முதலாம் இராசராசன் காலத்திலேயே கல்வெட்டுக்களில் விரிவான மெய்க்கீர்த்திகள் இடம்பெறலாயின.[1][2][3]
முதலாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி
[தொகு]எடுத்துக்காட்டாக முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி ஒன்றை இங்குக் காண்போம்.
- ஸ்வஸ்தி ஸ்ரீ
- திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
- தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
- காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி
- வேங்கை நாடுங் கங்க பாடியும்
- தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
- குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
- முரட்டெழிற் சிங்கள ரீழ மண்டலமும்
- இரட்ட பாடி யேழரை யிலக்கமும்
- முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்
- தெண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
- னெழில்வள ரூழியு ளெலலா யாண்டுந்
- தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
- தேசுகொள் கோராச கேசரி வர்மரான
- உடையார் ஸ்ரீராச ராச தேவர்க்கு யாண்டு...
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kalvettayvu by M Lavanya, Varalaaru.com
- ↑ Raja Raja Meikeerthi from Ponniyinselvan.in
- ↑ Kamalakkannan, S. "Valanchulivanar, varalaaru aivum aivu varlarum". varalaaru.com. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.