உள்ளடக்கத்துக்குச் செல்

மூக்குப்பொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூக்குப் பொடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மூக்குப் பொடியை உறிஞ்சுவதால் தும்மல் ஏற்படுதல்

மூக்குப்பொடி (snuff) என்பது போதை தரும் புகையிலை கலந்த பொடி. இது சுண்ணாம்பு, புகையிலை, நெய் மற்றும் சில வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட கலவை. இதை உபயோகிப்போர் இப்பொடியைத் தங்கள் விரல்களுக்கிடையில் வைத்து மூக்கின் வழியாக மூச்சுப்பாதையில் இதை நன்கு உள்ளிழுப்பர்.

இப் பழக்கத்தைப் பொடி போடுதல் என்பர். பொடியைத் தயாரிப்போர் வாழை மட்டையிலோ (பொடிமட்டை) சிறிய தகர டப்பாவிலோ (பொடி டப்பா) இதை அடைத்து விற்பர்.

இந்தியாவில் மூக்குப்பொடி தயாரிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன.

புகையிலை உள்ள பொருளான மூக்குப் பொடி உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. வாய்ப் புற்றுநோய், குரல்வளைப் புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்க வல்லது.[1]

பழமொழி

[தொகு]

ஓசி பொடிதனை நாசியில் இட்டால் காசிக்கு போனாலும் கருமம் தீராது

பொடிக்கவி

[தொகு]
கரும்பொடி மாவஞ்ச வெறிகைப்பொடி சில்வெற்பர்
தருங்கொம் பொடிசை தெய்வத்தையல் - விரும்புபுய
வான்பொடியா நின்ற கதிர்மானு மயிலோ எனையாள்
தேன்பொடியார் பூம்பதந் தந்தே
ஊசிக் கழகு முனைமுறி யாமை; உயர்ந்த பர
தேசிக் கழகுஇந் திரியம் அடக்கல்; திரள்நகில்சேர்
வேசிக்கழகு தன் மேனி மினுக்கல்; மிகப்பெருத்த
நாசிக்கழகு பொடியென்று சொல்லுவர் நாவலரே
கொடியணி மாடம்ஓங்கிக் குலவுசீர் ஆனைக்காவில்
படியினில் உள்ளார் செய்த பாக்கியம் அனையான் செங்கைத்
தொடியினர் மதனன் சோமசுந்தரன் கடையில் செய்த
பொடியினைப் போடாமூக்குப் புண்ணியம் செய்யா மூக்கே

மாம்பழக்கவிச்சிங்க நாவலர்[2] [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மூக்கு பொடியா...? போச்.... மூச்..." நக்கீரன். 01-12-2008. Archived from the original on 19 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. https://groups.google.com/group/mintamil/msg/40f888e9756c23fd?hl=hu&
  3. https://groups.google.com/forum/#!msg/mintamil/F8lAaq-T7dQ/_SNsdemI-EAJ

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்குப்பொடி&oldid=3578096" இலிருந்து மீள்விக்கப்பட்டது