உள்ளடக்கத்துக்குச் செல்

முள்ளு சீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முள் சீத்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முள்ளு சீதா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. muricata
இருசொற் பெயரீடு
Annona muricata
கரோலஸ் லின்னேயஸ்[1]
வேறு பெயர்கள்

முள்ளு சீதா (Graviola அல்லது Soursop) பசுமைமாறாத அகண்ட இலை, பூக்கும் சிறுமரமாகும்.மெக்சிகோ, கூபா, நடு அமெரிக்கா, கரிபியன் மற்றும் வடதென் அமெரிக்கா: கொலொம்பியா, பிரேசில், பெரு, மற்றும் வெனிசுவேலா ஆகியவை இம்மரத்தின் தாயகமாகும். வெப்ப மண்டலப் பகுதியருகேயுள்ள சஹாரா நாடுகளும் இதன் தாயகமாகக் கருதப்படுகிறது. மேலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் தற்போது வளர்கிறது. இம்மரம் சீதாப்பழத்தின் குடும்பமான அனோனேசியே ஆகும். இதன் தாவரவியல் பெயர் அனோனா முயுரிகேட்டா. இதன் பழங்கள் செம்புற்றுப்பழம் மற்றும் அன்னாசிப் பழம் போன்றவற்றின் புளிப்புத் தன்மை சேர்ந்த சுவையுடையது. இப்பழமானது புளிப்பு மற்றும் சற்று இனிப்பு கலந்த சுவையும் இருப்பதால் புளிப்புபழம் என்று அழைக்கப்படுகிறது. பசுமைமாறா மரம் மிதமான தட்பவெப்பநிலைகளிலும் வறண்ட சூழ்நிலையிலும் நன்கு வளரும். பனியை தாங்கி வளராது[2] ஒரு பழமானது தோராயமாக 4 கிலோ எடை கொண்டது.

மருத்துவக் குணம்

[தொகு]

முள்சீத்தாவின் இலைச்சாறானது பாக்டீரியாக்களின் மூலம் பரவும் நிமோனியா, டையோரியா நோய்களையும் சிறுநீரக குழாய், குடல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annona muricata information from NPGS/GRIN". www.ars-grin.gov. Archived from the original on 2008-11-03. பார்க்கப்பட்ட நாள் 2008-03-03.
  2. "Annona muricata L., Annonaceae". Institute of Pacific Islands Forestry: Pacific Island Ecosystems at Risk (PIER). 2008-01-05. Archived from the original on 12 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளு_சீதா&oldid=4046529" இலிருந்து மீள்விக்கப்பட்டது