மா வான் தீவு
மா வான் தீவு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||
மா வான் தீவின் வான்வழிப் புகைப்படம். இச்சிறியத் தீவின் மேற்பகுதி தங் லங் சௌ ஆகும். லண்டௌ இணைப்புச் சாலை மற்றும் பூங்காத் தீவின் அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் தெளிவாகத் தெரிகின்றன. | |||||||||||
சீன எழுத்துமுறை | 馬灣 | ||||||||||
|
மா வான் (Ma Wan) என்பது ஆங்காங் நாட்டின் ஒரு தீவு ஆகும். லாண்டௌ தீவிற்கும் திசிங் யி தீவிற்கும் இடையில் இத்தீவு அமைந்துள்ளது. மா வான் தீ வின் பரப்பளவு 0.97 சதுர கிலோமீட்டர் அதாவது மொத்தமாக 240 ஏக்கர்களாகும்.[1] துசுவன் வான் மாவட்டம், மாவட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தீவினையும் நிர்வகிக்கிறது.[2]
லண்டௌ இணைப்புச் சாலை மா வான் தீவு வழியாகச் செல்கிறது. 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ஆங்காங் அரசாங்கத்தின் ரோசாத் தோப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ஆங்காங் சர்வதேச விமான நிலையத்தையும் நகர மையத்தையும் இணைப்பதற்காக இந்த இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையின் வளர்சியால் தீவில் பல அபிவிருத்தித் திட்டங்கள் உருவாகின. இன்று மா வான் தீவின் பெரும்பகுதியை பூங்காத் தீவு அடுக்குமாடித் தொகுப்பு வீடுகள் ஆக்ரமித்துள்ளன. இத்தொகுப்பு வீடுகளை அடுத்து இணைப்பாக மா வான் பூங்கா என்ற வணிக நோக்கு உல்லாசப் பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவின் ஒரு பகுதி முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு சூலையில் தொடங்கப்பட்டது.[3]
புவியியல்
[தொகு]மா வான் தீவின் பரப்பளவு 0.97 சதுர கிலோ மீட்டர் அல்லது 0.37[1] சதுர மைல்களாகும். இத்தீவின் தென்கிழக்கில் 226 அடி உயரமுள்ள தாய் லெங் தௌ என்ற மலை உயரப்பகுதி உள்ளது. மா வானை மற்ற முக்கியத் தீவுகளில் இருந்து இரண்டு கால்வாய்கள் பிரிக்கின்றன.[4]
- கிழக்கில் உள்ள மா வான் கால்வாய் சிங் யி தீவை இத்தீவில் இருந்து பிரிக்கிறது. இக்கால்வாயின் குறுக்காக சிங் மா பாலம் செல்கிறது.
- மா வான் தீவின் தென்மேற்கில் உள்ள காப் சுயி முன் கால்வாய் இத்தீவை லண்டௌ தீவின் சிங் சௌ சாய் தீபகற்பத்தில் இருந்து பிரிக்கிறது. இக்கால்வாயின் குறுக்காக காப் சுயி முன் பாலம் செல்கிறது.
- புதிய நிலப்பகுதியின் ஒரு பகுதியான சுன் வான் மாவட்டத்தின் சிங் லங் தௌ நகரின் எதிர்பக்கத்தில் இத்தீவின் வடக்கு கடற்கரை அமைந்திருக்கிறது.
- தங் லங் சௌ தீவினை நோக்கியவாறு இத்தீவின் தெற்குப் பகுதி உள்ளது..
நிலவியல்
[தொகு]மா வான் தீவின் மேற்பரப்பில் உள்ள பாறைகள் பெரும்பாலும் இம் தின் சாய் உருவாக்கத்தினாலான எரிமலைப் பாறைகளாகும். இந்தக் கரடுமுரடான சாம்பல் படிகப்பாறையில் எரிமலைக் கற்கள் காணப்படுகின்றன. தீவின் தொலை தூர வடக்கில் சில அடுக்குகளில் எரிமலைச் சாம்பல் காணப்படுகிறது. கரும் பாறைக் கனிமங்களில், பையோடைட் மற்றும் ஆம்பிபோல் கனிமங்கள் நிறைந்துள்ளன. பாறைக் கனிமங்களில் குவார்ட்சு, பிளாசியோகிளாசு பெல்சுபார் கனிமங்கள் காணப்படுகின்றன. மற்ற கனிமங்களில் அபடைட், மேக்னடைட், மோனசைட் மற்றும் சிர்கோன் முதலிய கனிமங்கள் காணப்படுகின்றன.[5]
மா வான் கிரானைட் நல்ல பொடித்தூளாக உள்ளது. இதில் அக்னிப்பாறை வகையான சிலிக்கேட் கனிமங்கள் மற்றும் பெரும்படிகங்களான பெல்சுபார் கனிமங்கள் காணப்படுகின்றன. குவார்ட்சு, இருவகை பெல்சுபார் கனிமங்கள் முதலியன இதில் காணப்படும் முக்கியக் கனிமங்களாகும். கிஅக்குக் கடற்கரையின் தெற்குப் பகுதியில் கிடைக்கும் கருப்புப் பாறை பெரும்பாலும் பையோடைட், புளோரைட் மற்றும் அலானைட் கனிமங்களைக் கொண்டிருக்கிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hong Kong Geographic Data, Lands Department, February 2011
- ↑ District council electoral boundaries: Tsuen Wan District, Electoral Affairs Commission, July 2003
- ↑ Town Planning Paper "Administration's paper on Ma Wan Park" (Press release) [CB(1)2195/07-08(01)], 18 July 2008
- ↑ R.J. Sewell & J. W.C. James, Geology of North Lantau Island and Ma Wan பரணிடப்பட்டது 2015-12-31 at the வந்தவழி இயந்திரம் (Chapter 1), Geotechnical Engineering Office, Civil Engineering Department, Hong Kong, November 1995
- ↑ "Sedimentary and Volcanic Rocks" (PDF). Geology of North Lantau Island and Ma Wan. 1995. pp. 21–23. Archived from the original (PDF) on 14 டிசம்பர் 2014. Retrieved 10 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|authors=
ignored (help) - ↑ "Intrusive Igneous Rocks" (PDF). Geology of North Lantau Island and Ma Wan. 1995. p. 27. Archived from the original (PDF) on 14 டிசம்பர் 2014. Retrieved 10 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|authors=
ignored (help)
புற இணைப்புகள்
[தொகு]- Location: Google maps, Wikimapia
- Photos of Ma Wan's abandoned town
- Ma Wan Blog featuring photos and information on Park Island
- "The road to salvation", a brief history of Ma Wan
- R.J. Sewell & J. W.C. James, Geology of North Lantau Island and Ma Wan பரணிடப்பட்டது 2012-03-18 at the வந்தவழி இயந்திரம், Geotechnical Engineering Office, Civil Engineering Department, Hong Kong, November 1995