மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்

மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் அல்லது மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில் என்பது தமிழ் நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில். கி.பி. 590 முதல் கி.பி. 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். வட தமிழ் நாட்டின் முதல் குடைவரைக் கோயில் மற்றும் தமிழ்நாட்டு குடைவரைகளில் ஆண்டு குறிப்பிடப்பட்ட பழமையான கற்கோயில்[1][2] என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.
இக்கோயிலில் பிரம்மன், விட்டுணு, சிவன் ஆகியோருக்கு மூன்று தனித்தனி சன்னதிகள் அமைக்கபட்டுள்ளன. ஆனால் தற்போது திருமேனிகள் ஏதும் இல்லை. குடைவரையின் வாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன.

இக்குடைவரையில் காணப்பட்ட முதலாம் மகேந்திரவர்மனின்[3] வடமொழிக் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு வாசகம்:
- EtadanishTamadrumamalOhamasudham vichitra chitEna nirmA pitanrupENabrahmEsharaviShNulakSitAyanam
தேவநகரி எழுத்து வடிவத்தில் மொழிபெயர்க்கபட்ட கல்வெட்டு:
- अतद्निष्टकंद्रुं(मलो)-
- हमसुधं (विचित्रचि)त्तेन
- निम्मर्पितन्न्रपे(ण) ब्रह्मो –
- श्वरविष्णुल(क्षि)तायनं
தமிழ் மொழிபெயர்ப்பு:
- "பிரம்மன், சிவன், விட்டுணு ஆகியோருக்கு அருப்பணிக்கப்பட்ட கோயில் இரும்பு, மரம், செங்கல், சுதை போன்றவற்றை பயன்படுத்தாமல் விசித்திரச்சித்தனால் குடையப்பட்டது".
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]படக்காட்சியகம்
[தொகு]-
மண்டகப்பட்டு கோவிலின் தரை வடைபடம்
-
சமுசுகிருத கலவெட்டு
-
கலவெட்டின் இருபரிமாண பதிப்பு
-
முக்யா மற்றும் அர்த்த மண்டபங்கள்
-
மூன்று சிற்றாலயங்கலில் ஒன்று.
-
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் முழுத்தோற்றம்.
-
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் படிக்கட்டுகள்.
-
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் வலதுபுற துவார பாலர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sastri, p 690
- ↑ Karen Pechilis Prentiss (2000). The Embodiment of Bhakti. Oxford University Press. pp. 81–82. ISBN 978-0-19-535190-3.
- ↑ N. S. Ramaswami (1971). Indian Monuments. Abhinav Publications. p. 18. ISBN 978-0-89684-091-1.