உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்மியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெர்மியோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2-பெர்மியான் துகள்களின் நேர்எதிர் சமச்சீர் (Anti symmetric) அலைவடிவம்.

பெர்மியான் (Fermion) என்பது அணு துகள்களில் ஒரு வகை ஆகும். இதன் பண்புகள் பெர்மி-டிராக் புள்ளிவிவரங்கள் கொண்டு விளக்கப்படுகின்றன. இத்துகள்களின் கோண உந்தம் 1/2 மடங்குகளாக இருக்கும். அதாவது 1/2, 3/2...என்று இருக்கும். இவ்வாறு ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்களைப் பின்பற்றுவதன் காரணமாக ஃபெர்மியன் என்று அழைக்கப்படுகிறது. லெப்டான்களின் வர்க்கத்தில் துகள்கள் (எ.கா., எதிர்மின்னி [இலத்திரன்], மூயன்கள், பேரியான் வர்க்கத்தில் துகள்கள் (எ.கா., நொதுமி [நியூத்திரன்), நேர்மின்னி, லாம்ப்டா துகள்கள்) முதலிய துகள்கள் பெர்மியான் வர்க்கத்தில் சேர்க்கிறது.

பெர்மியான் துகள்கள் பவுலி தவிர்ப்புத் தத்துவம் கோட்பாட்டிற்குக் கீழ்ப்படிகின்றன. அதன்படி ஒரு குவாண்டம் நிலை கொண்டு இருப்பதன் மூலம் இது அணுவின் அமைப்பை உருவாக்குகிறது. அதாவது ஒரே இடத்தில் எல்லா எதிர்மின் துகளும் இல்லாமல் அடுத்தடுத்த சுற்றுப்புறங்களில் இருக்கும்படி செய்கிறது. இது அணுவில் உள்ள எதிர்மின்னிகளின் கட்டமைப்பை உருவாக்குகிறது. இதன் காரணமாக அணுக்கள் ஓர் அடர்த்தியான நிலைக்குச் கொண்டுசெல்வதிலிருந்து தடுத்து, அதிகமான வெற்றிடத்தைக் கொண்டதாக இருக்கிறது.[1]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopaedia Britannica. "Fermion". Britannica. Encyclopaedia Britannica, Inc. Retrieved 20 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்மியான்&oldid=4189292" இலிருந்து மீள்விக்கப்பட்டது