புறம்போக்கு நிலம்
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு நிலம் எனக் குறிக்கப்படுகின்றன. இப்புறம்போக்கு நிலங்கள் தனியாரல்லாத மாநில அரசிற்கு சொந்தமானது ஆகும்.
நிலமற்ற ஏழைகளுக்கு அரசு இது போன்ற புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டிக் கொள்வதற்கும், கல்வி நிலையம் கட்டுவதற்கும், தொழில் செய்வதற்கும் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கும் பட்டா போன்ற சான்றிதழ்களை அரசு வழங்குகிறது. மேலும் தனியார்களுக்கு புறம்போக்கு நிலங்களை பொதுப்பயன்பாட்டிற்காக அரசு நீண்டகால குத்தகைக்கும் விடுகிறது.
சொல்விளக்கம்
[தொகு]தமிழ்நாட்டில் நிலப் பயன்பாடு தொடர்பான பதிவுகளில் சோழர்கள் காலத்திலிருந்தே புறம்போக்கு என்கிற சொல் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. இந்த இடங்கள் ‘புறம்+போக்கு’, அதாவதுசிறுநீர் அல்லது மலம் கழிப்பதற்காக அமைக்கபட்ட பொது பயன்பாட்டிர்கான திறந்தவெளி நிலம். அரசனோ - அரசோ, புறம்போக்குப் பகுதிகளில் இருந்து எந்த வரியையும் எதிர்பார்க்க முடியாது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நித்தியானந்த் ஜெயராமன் (24 செப்டம்பர் 2016). "புறம்போக்கு என்கிற 'பாதுகாப்பு'". கட்டுரை. தி இந்து. Retrieved 24 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)