உள்ளடக்கத்துக்குச் செல்

பிஜப்பூர் சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பீஜப்பூர் சுல்தானகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிஜப்பூர் சுல்தானகம்
அடில் ஷா வம்சம்
1490–1686
தக்காணத்தில் பிஜப்பூர் சுல்தானகம்
தக்காணத்தில் பிஜப்பூர் சுல்தானகம்
தலைநகரம்பிஜப்பூர்
பேசப்படும் மொழிகள்பாரசீகம்(அலுவல் மொழி )[1]
உருது
சமயம்
சியா இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
வரலாறு 
• தொடக்கம்
1490 1490
• 1686
1686
நாணயம்மொஹர்
முந்தையது
பின்னையது
[[பாமினி சுல்தானகம்]]
[[முகலாயப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள் இந்தியா

பிஜப்பூர் சுல்தானகம் (Bijapur Sultanate), தென்னிந்தியாவின் தக்காணப் பகுதியில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் பிஜப்பூர் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, தற்கால வடக்கு கர்நாடகா , தெற்கு மகாராட்டிராப் பகுதிகளை 1490 முதல் 1686 முடிய ஆண்ட சியா இசுலாமிய சுல்தான்கள் ஆவார். பிஜப்பூர் சுல்தானகத்தை 1490ல் நிறுவியவர் அடில் ஷா ஆவார். [2]

தலிகோட்டா சண்டை

[தொகு]

26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும் பிஜப்பூர் சுல்தான் முதலாம் அடில் ஷா உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே தலைகோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]
  • 1490ல் பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சியின் போது, பிஜப்பூர் பிரதேசத்தின் ஆளுநராக பணியாற்றிய யூசுப் அடில் ஷா என்ற பாரசீக சியா இசுலாமியர், தன்னை பிஜப்பூர் சுல்தானாக அறிவித்துக் கொண்டார்.
  • 1510 ஆம் ஆண்டில் கோவாவைக் கைப்பற்ற, போர்த்துகீசியர்கள் மீது பிஜப்பூர் சுல்தானகம் படையெடுத்தது. அடுத்த ஆண்டில் பிஜப்பூர் படையினர் போர்த்துகேயர்களிடம் தோற்றனர்.
  • 17ம் ஆண்டின் முற்பகுதியில் மராத்தியா சிவாஜியின் கொரில்லாப் படைகளால் பிஜப்பூர் சுல்தானகம் அவ்வப்போது தாக்கப்பட்டது.

பிஜப்பூர் சுல்தான்கள்

[தொகு]
பிஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷாவின் கல்லறை, கோல் கும்பாஸ், பிஜப்பூர், கர்நாடகா
  1. யூசுப் அடில் ஷா - 1490–1510
  2. இஸ்மாயில் அடில் ஷா - 1510–1534
  3. மல்லு அடில் ஷா = 1534
  4. முதலாம் இப்ராகிம் அதில் - 1534–1558
  5. முதலாம் அடில் ஷா - 1558–1579[3]
  6. இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா - 1580–1627
  7. முகமது அடில் ஷா - 1627–1657
  8. இரண்டாம் அடீல் ஷா - 1657–1672
  9. சிக்கந்தர் அடில் ஷா - 1672–1686

இதனையும் காணக

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Spooner & Hanaway 2012, ப. 317.
  2. Adil Shahi dynasty
  3. Footnote in Page 2 of Translator's preface in the book Tohfut-ul-mujahideen: An Historical Work in the Arabic Language written by Zayn al-Dīn b. ʿAbd al-ʿAzīz al- Malībārī (Translated into English by Lt. M.J. Rowlandson)

வெளி இணைப்புகள்

[தொகு]

[[

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜப்பூர்_சுல்தானகம்&oldid=3816152" இலிருந்து மீள்விக்கப்பட்டது