உள்ளடக்கத்துக்குச் செல்

பழமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பழமொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பழமொழிகள் ஒரு சமுதாயத்தின் பழமையான சிந்தனையும், அறிவுச் சொத்தும், நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளும் ஆகும்.[1] பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்தச் சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவுகின்றன.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பழமொழிக்கு என்றே ஒரு தனி நூலாக பழமொழி நானூறு உள்ளது. அந்த நூலில் 400 பழமொழிகள் உள்ளன. தமிழின் பண்டைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் (பொரு:479) பழமொழிகள் பற்றிய வரைமுறையாக "ஏதேனும் ஒரு சமூகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்குத் துணையாக வரக்கூடிய (அல்லது பயன்படுத்தக் கூடிய) ஆழ்ந்த அறிவினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் பழமையான மொழி பழமொழி எனலாம்." என்று விளக்குகிறது.[2] பழமொழிகள் பொய்ப்பதில்லை என்று அகநானூறு (அகம்.101) குறிப்பிடுகிறது.[3]

இணைப்பு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. முனைவர் இரா.சாவித்திரி தமிழாய்வு இணையக் கல்விக் கழகம்
  2. "Tamil Virtual University". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  3. "Agananooru". www.tamilvu.org. Archived from the original on 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழமொழி&oldid=3718627" இலிருந்து மீள்விக்கப்பட்டது