உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டார் செரி பெகாவான்

ஆள்கூறுகள்: 4°53′25″N 114°56′32″E / 4.89028°N 114.94222°E / 4.89028; 114.94222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பண்டர் செரி பெகவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பண்டார் செரி பெகாவான்
Bandar Seri Begawan
بندر سري بڬاوان
புரூணை
தலைநகரம்
மேலிருந்து வலதுபுறமாக: உமர் அலி சைபுடின் பள்ளிவாசல், கம்போங் அயர், தி மால் கடோங், அசனுல் போல்கியா பள்ளிவாசல், கடோங் வணிகப் பகுதி
அடைபெயர்(கள்):
The Venice of the East
பண்டார் செரி பெகாவான் is located in மலேசியா
பண்டார் செரி பெகாவான்
      பண்டார் செரி பெகாவான்       புரூணை
ஆள்கூறுகள்: 4°53′25″N 114°56′32″E / 4.89028°N 114.94222°E / 4.89028; 114.94222
நாடு புரூணை
மாவட்டம்புரூணை முவாரா
புரூணை சுல்தானகம்7 – 18-ஆம் நூற்றாண்டு
ஐக்கிய இராச்சியம்19-ஆம் நூற்றாண்டு
ஐக்கிய இராச்சியம்1906
புரூணை சுல்தானகம்1909
சுகாதார வாரியம்1921
நகராட்சி1935
அரசு
 • நிர்வாகம்பண்டார் செரி பெகாவான் நகராட்சித் துறை
பரப்பளவு
 • மொத்தம்100.36 km2 (38.75 sq mi)
மக்கள்தொகை
 • மதிப்பீடு 
(2007)
1,00,700
நேர வலயம்ஒசநே+8 (புரூணை நேரம்)
இடக் குறியீடு+673 2
இணையதளம்www.municipal-bsb.gov.bn

பண்டார் செரி பெகாவான் (ஆங்கிலம்: Bandar Seri Begawan; மலாய்: Bandar Brunei; ஜாவி: بندر سري بڬاوان; banda səˌri bəˈɡawan) என்பது புரூணை சுல்தானகத்தின் தலைநகரம் ஆகும். இதுவே அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[2]

2010-ஆம் ஆண்டில் பண்டார் செரி பெகாவான் மக்கள் தொகை 140,000. இருப்பினும் பண்டார் செரி பெகாவான் நகரத்தைச் சூழ்ந்த புறநகர்ப் பகுதியிலும் சேர்ந்து 276,608 பேர் வசிக்கின்றனர். பண்டார் செரி பெகாவான் நகரம்; புரூணை - முவாரா மாவட்டத்தின்]] (Brunei-Muara District) ஒரு பகுதியாகும்.

புரூணை நாட்டின் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் முவாரா மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். பண்டார் செரி பெகாவான் நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற மையம்; மற்றும் நாட்டின் ஒரே நகரமாகவும் விளங்குகிறது. புரூணை அரசாங்கத்தின் இருப்பிடமாகவும், வணிக கலாசார மையமாகவும் திகழ்கிறது.[3]

புரூணையின் 28-ஆவது சுல்தானாகப் பொறுப்பு வகிக்கும் தற்போதைய சுல்தான் அசனல் போல்கியாவின் (Sultan Hassanal Bolkiah) தந்தையார் மூன்றாம் சுல்தான் உமர் அலி சைபுடியன் (Sultan Omar Ali Saifuddien III) நினைவாக 1970-ஆம் ஆண்டில் மறுபெயரிடப்படும் வரை புரூணை நகரம் (Brunei Town) என்றே அறியப்பட்டது.[4]

வரலாறு

[தொகு]

புரூணையில் முதல் மனிதக் குடியேற்றம் ஆறாம்; ஏழாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்துள்ளது. தற்போதைய மலாய் வணிக மையம் மற்றும் பண்டார் செரி பெகாவான் நகரின் இடத்திற்கு அருகில் இருக்கும் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றைக் கொண்டு அதனை உறுதிப்படுத்தலாம்.

புரூணை ஆற்றின் (Brunei River) கரைகளில் எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. புரூணை ஆற்றின் கம்போங் ஆயரில் (Kampong Ayer) உள்ள குடியேற்றங்களைப் போன்றே, தற்போதைய புரூணை அருங்காட்சியகத்தின் (Brunei Museum) எதிர் கரையில் அந்தக் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது.[5]

சுல்தானக ஆட்சி

[தொகு]

15-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான புரூணை பேரரசு (Bruneian Empire) காலத்தில், பிலிப்பீன்சின் தெற்குப் பகுதி மற்றும் அதன் தலைநகரான மணிலா உட்பட போர்னியோவின் ஒரு பகுதியை புரூணை சுல்தானகம் (Brunei Sultanate) ஆட்சி செய்துள்ளது.[6]

புரூணை நகரப் பகுதிக்கு அருகிலுள்ள நீர்நிலைக் குடியேற்றம் (Water Settlement) புரூணை சுல்தானகத்தின் மூன்றாவது மையமாக மாறியது. எசுப்பானியர்கள், இடச்சுக்காரர்கள் மற்றும் பிரித்தானியர்கள் போன்ற மேற்கத்தியர்களின் வருகையின் காரணமாக 18-ஆம் நூற்றாண்டில் சுல்தானக ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. அப்போது மக்கள் தொகை 20,000 என உச்சத்தில் இருந்து படிப்படியாகக் குறைந்தது.[7][8]

புவியியல்

[தொகு]

இந்நகரம் புரூணை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. வெப்பவலய மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ள இந்நகரில் வருடத்தின் முழுப்பகுதியும் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகின்றது.

சகோதர நகரம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Venice of the East". People.cn. பார்க்கப்பட்ட நாள் 2021-06-11.
  2. "Jabatan Bandaran Bandar Seri Begawan, Kementerian Hal Ehwal Dalam Negeri – Maklumat Bandaran". www.municipal-bsb.gov.bn. Archived from the original on 2 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
  3. "Bandar Seri Begawan". Answers.com.
  4. "Built environment: Public works are providing a stream of contracts, while reforms and economic diversification pave the way for further growth | Brunei Darussalam 2013 | Oxford Business Group". oxfordbusinessgroup.com. Archived from the original on 14 July 2022. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
  5. Roman Adrian Cybriwsky (23 May 2013). Capital Cities around the World: An Encyclopedia of Geography, History, and Culture: An Encyclopedia of Geography, History, and Culture. ABC-CLIO. pp. 32–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-248-9.
  6. Nigel Hicks (2007). The Philippines. New Holland Publishers. pp. 34–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84537-663-5.
  7. Shirleen Cambridge (5 October 2014). Ultimate Handbook Guide to Bandar Seri Begawan : (Brunei) Travel Guide. MicJames. pp. 8–. GGKEY:16PGAE1LKCQ.
  8. Jatswan S. Sidhu (22 December 2009). Historical Dictionary of Brunei Darussalam. Scarecrow Press. pp. 32–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7078-9.
  9. Daljit Singh; Pushpa Thambipillai (10 May 2012). Southeast Asian Affairs 2012. Institute of Southeast Asian Studies. pp. 98–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4380-23-2.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_செரி_பெகாவான்&oldid=4138049" இலிருந்து மீள்விக்கப்பட்டது