உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய பஞ்சாபில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஞ்சாபின் சுற்றுலா மையங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமிருதசரசின் பொற்கோயில் பஞ்சாபிலுள்ள முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்
பொற்கோவிலின் இரவுக் காட்சி
கிராட்பூர் ஷாகிப்
பட்டியாலாவிலுள்ள மோத்திபாக் அரண்மனை

பஞ்சாபு மாநிலம் தனது உணவு, பண்பாடு, வரலாறு, இசைக்காக புகழ்பெற்ற மாநிலமாகும். இந்த மாநிலத்தில் தொலைத்தொடர்பு வசதிகளும் போக்குவரத்தும் சிறப்பாக உள்ளது. பஞ்சாபின் முதன்மை நகரங்களாக அமிருதசரசு, ஜலந்தர், பட்டியாலா, பட்டான்கோட், லூதியானா உள்ளன. பஞ்சாபின் பொதுப் போக்குவரத்து சுற்றுலா மையங்களுக்கு எளிதில் செல்லும் விதத்தில் செயல்படுகிறது. பழங்கால அரண்மனைகள் , பழங்கால போர்க்களங்கள், ஆன்மீக ஸ்தலங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாய் அமைந்துள்ளது. இங்கு சீக்கியம், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தவர் வசிக்கின்றனர். மெய்யான பஞ்சாபிப் பண்பாட்டை அறிய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இம்மாநில சிற்றூர்களில் தங்கி அழகான இந்திய இல்லங்களையும் பண்ணைகளையும் கோயில்களையும் கண்டு களிக்கலாம். லோன்லி பிளானட்டின் 2008ஆம் ஆண்டு நீலப்பட்டியலில் பொற்கோவிலை உலகின் ஆன்மீகச் சுற்றுலாவிடங்களில் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இங்கு நாளும் 100,000 சமயப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர். அமிருதசரசில் பல ஐந்து நட்சத்திர தங்குவிடுதிகள் உள்ளன.[1][2][3]

வாகா எல்லை

[தொகு]

வாகா (பஞ்சாபி (குர்முகி): ਵਾਹਗਾ, Hindi: वाघा, Urdu: واہگہ) என்ற சிற்றூர் பெரும் தலைநெடுஞ்சாலையில் இந்தியப் பஞ்சாபின் அமிருதசரசிற்கும் பாக்கித்தானியப் பஞ்சாபின் இலாகூருக்கும் இடையே பாக்கித்தானிற்கும் இந்தியாவிற்குமான எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சரக்குமாற்று முனையமும் தொடருந்து நிலையமும் உள்ளன.

இலாகூரிலிருந்து 24 கிமீ (15 மை) தொலைவிலும் அமிருதசரசிலிருந்து 32 கிமீ (20 மை) தொலைவிலும் அமைந்துள்ளது. அண்மித்த இந்தியச் சிற்றூர் அட்டாரி 3கிமீ (1.9)மைல்களில் உள்ளது.

இங்கு நடக்கும் விரிவான எல்லைச் சடங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது. கதிரவன் மறைவிற்கு இரண்டு மணி நேரம் முன்பாக ஒவ்வொருநாளும் எல்லை வாயிலில் உள்ள கொடிக்கம்பத்திலிருந்து அவரவர் நாட்டுத் தேசியக் கொடிகள் இறக்கப்படுகின்றன.

கோட்டைகள் மற்றும் அரண்மனைகள்

[தொகு]
  • அமிர்த‌ச‌ர‌ஸ் த‌ங்க‌க்கோவில்
  • கோபிந்த்கார்க் கோட்டை
  • ஃபாரிட்காட் கோட்டை
  • க்யூலா முபார‌க்
  • ப‌ஹ‌துர்காக் கோட்டை
  • ஆன‌ந்த்பூர் ஷாகிப் கோட்டை
  • ஃபில்லாவூர் கோட்டை
  • ஷாபூர் காண்டி கோட்டை
  • ம‌க‌ராஜா ர‌ஜ்சித் சிங் கோடைகால‌ அர‌ண்ம‌னை
  • கேஷ்கார்க் கோட்டை
  • பாய‌ல் கோட்டை

முகலாயக் கட்டிடக்கலை

[தொகு]
  • ஆம் காஸ் பாஹ்
  • சிராய் நூர்ம‌ஹால்
  • தோரா முக‌ல் சிராய்
  • ஷாம்பு முக‌ல் சிராய்
  • சிராய் ல‌ஷ்க‌ரி கான்
  • காஷ் மினார்

ஆன்மீக ஸ்தலங்கள்

[தொகு]
  • அமிர்தசரஸ் தங்கக்கோவில்
  • ஸ்ரீ பாவோலி ஷாகிப் கோயிண்ட்வால் குருத்வாரா
  • காதுர் ஷாகிப்
  • பாபா பாகாலா
  • தேரா பாபா நான‌க்
  • பீர் ஷாகிப் குருத்வாரா
  • கிராட்பூர் ஷாகிப்
  • பதேகார்க் ஷாகிப் குருத்வாரா
  • ஜோதி ஸ்வரூப் குருத்வாரா
  • தாகட் ஸ்ரீ கீஷ்கார்க் ஷாகிப்
  • தாகட் ஸ்ரீ டாம்டமா ஷாகிப்
  • துக் நிர்வாண் ஷாகிப் குருத்வாரா
  • மெக்தியானா ஷாகிப்
  • பரிவார் விச்சோரா
  • ஸ்ரீ டான் டாரன் ஷாகிப் குருத்வாரா
  • மஞ்சி ஷாகிப் குருத்வாரா
  • கரம்சார் ராரா ஷாகிப் குருத்வாரா
  • நெளலாகா ஷாகிப் குருத்வாரா
  • அசால் ஷாகிப் குருத்வாரா
  • காந்த் ஷாகிப் குருத்வாரா
  • தேரா ஷாகிப் குருத்வாரா

கோயில்கள்

[தொகு]
  • தேவி தாலப் மந்திர்
  • ராம் திராத் கோவில்
  • துர்கையானா கோவில்
  • காளி தேவி கோவில்
  • அசலேஷ்வர் கோவில்
  • காளி த்வாரா கோவில்

பூங்காக்கள்

[தொகு]
  • ஜாலியன்வாலாபாக்
  • பன்சார் பூங்கா
  • ஷாகீத் ஃபாஹட்
  • ராம் பாஹ் பூங்கா
  • ஷாலிமர் பூங்கா
  • பாராடாரி பூங்கா
  • போதி பாஹ் அரண்மனை
  • ராக் பூங்கா
  • ரோஜா பூங்கா
  • ஷாந்திகுஞ்ஜ் பூங்கா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Polgreen, Lydia (2010-08-29). "A Sikh Temple Where All May Eat, and Pitch In" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2010/08/30/world/asia/30india.html. 
  2. "Yahoo Search - Web Search".
  3. "Revisiting projects: Bricks of Gobindgarh Fort start pouring out history". 19 February 2017.