பக்கவாத்தியம்
Appearance
(பக்க வாத்தியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு இசை நிகழ்ச்சியில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள், பக்கவாத்தியம் என்றழைக்கப்படும்.
கருநாடக இசையில் பக்கவாத்தியம்
[தொகு]வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்
[தொகு]பாடலுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம், வயலின், கஞ்சிரா, கடம், மோர்சிங் போன்றவை வாசிக்கப்படுகின்றன. கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் பாடகருக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.
குழு எண் | குழு அமைப்பு |
---|---|
1 | பாடகர், மிருதங்கம், வயலின் |
2 | பாடகர், மிருதங்கம், வயலின், கஞ்சிரா |
3 | பாடகர், மிருதங்கம், வயலின், கடம் |
4 | பாடகர், மிருதங்கம், வயலின், மோர்சிங் |
வாத்தியத் தனி இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்
[தொகு]வாத்தியத் தனி இசைக்கு, வாசிக்கப்படும் முக்கிய இசைக்கருவியைப் பொருத்து பக்கவாத்தியங்கள் தெரிவு செய்யப்படும். கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.
முக்கிய இசைக்கருவி | பக்கவாத்தியங்கள் | ஆதாரம் |
---|---|---|
வயலின் | மிருதங்கம், கடம் | |
வயலின் | மிருதங்கம், கஞ்சிரா | |
புல்லாங்குழல் | மிருதங்கம், கடம் | |
புல்லாங்குழல் | மிருதங்கம், கஞ்சிரா | |
மேண்டலின் | மிருதங்கம், வயலின், கடம் | |
மேண்டலின் (இரட்டை) | மிருதங்கம், கடம் | [1] |
சாக்சபோன் | வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங் | |
வீணை | மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங் | |
சித்ரவீணை | மிருதங்கம், வயலின், கடம் | [2] |