சாம்பல் தலை தாழைக்கோழி
நீலத்தாழைக்கோழி அல்லது சேமன் கோழி | |
---|---|
ஆண் | |
பெண் இரண்டும், வேம்பநாட்டு ஏரி, கேரளம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. porphyrio
|
இருசொற் பெயரீடு | |
Porphyrio porphyrio L, 1758 |
சாம்பல் தலை தாழைக்கோழி அல்லது மயில்கால் கோழி அல்லது சேமன்கோழி (Western swamphen) என்பது கோழியை ஒத்த உருவத்தை உடைய பறவையாகும். இது மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து தெற்கு சீனா மற்றும் வடக்கு தாய்லாந்து வரை உள்ள சதுப்பு நிலங்களில் உள்ள இனமாகும். இது நீலத் தாழைக் கோழியின் கிளையினமாகக் கருதப்பட்டது, ஆனால் 2015 இல் தனி இனம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இன்று நீலத் தாழைக் கோழி ஒரு மிகையினமாகக் கருதப்படுகிறது. மேலும் இதன் ஆறு கிளையினக் குழுக்களில் ஒவ்வொன்றும் தனி இனங்களாக கருதப்படுகின்றன.[1]
1990 களின் பிற்பகுதியில், புளோரிடாவின் பெம்ப்ரோக் பைன்சில் உள்ள பறவை வளர்ப்பிடத்தில் இருந்து தப்பித்தன் காரணமாக, சாம்பல் தலை தாழைக்கோழி வட அமெரிக்காவிற்கு அறிமுகமானது. மாநில வனவிலங்கு உயிரியலாளர்கள் இந்தப் பறவைகளை அழிக்க முயன்றனர், ஆனால் இவை பெருகிவிட்டன. இப்போது தெற்கு புளோரிடாவின் பல பகுதிகளில் இவை காணப்படுகின்றன. பறவையியல் அதிகாரிகள் இந்தப் பறவைகள் வாழும் முக்கியப் பகுதியாக புளோரிடாவின் அவிஃபானா மாறும் என்று கருதுகின்றனர்.[2] இது பிப்ரவரி 2013 இல் அமெரிக்க பறவைகள் சங்கத்தின் சரிபார்ப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.[3]
வகைபிரித்தல்
[தொகு]போர்பிரியோ பேரினத்தைச் சேர்ந்த 15 இனங்களில் சாம்பல் தலை தாழைக்கோழி ஒன்றாகும். இது 2015 ஆம் ஆண்டு வரை நீலத் தாழைக்கோழியின் கிளையினமாக வகைப்படுத்தப்பட்டது. அப்போது ஊதா தாழைக்கோழி இனங்கள் குழு ஆறு இனங்களாக பிரிக்கப்பட்டது.
துணையினங்கள்
[தொகு]- P. p. poliocephalus- Latham, 1801: பரிந்துரைக்கபட்ட துணையினங்கள் இந்தியா ( அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட) மற்றும் இலங்கையில் இருந்து தெற்கு சீனா மற்றும் வடக்கு தாய்லாந்து வரை காணப்படுகிறது.
- P. p. seistanicus- Zarudny and Härms, 1911: ஈராக்கு மற்றும் தெற்கு ஈரானில் இருந்து பாக்கித்தான், ஆப்கானித்தான், மற்றும் வடமேற்கு இந்தியா வரை காணப்படுகிறது. புளோரிடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பறவைகள் உள்ளன.
- P. p. caspius- Hartert, 1917 : காசுப்பியன் கடல், வடமேற்கு ஈரான், துருக்கிக்கு அருகில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2015 taxonomy update for Indian birds | eBird India". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.
- ↑ Pranty, Bill, Kim Schnitzius, Kevin Schnitzius, and Helen W. Lovell. 2000. Discovery, distribution, and origin of the purple swamphen (Porphyrio porphyrio) in Florida.' Florida Field Naturalist 28: 1–11.
- ↑ Floyd, Ted (13 Feb 2013). "#977, Purple Swamphen!". American Birding Association. பார்க்கப்பட்ட நாள் 13 Feb 2013.