ஒயிட் ஃபெர்ன்ஸ் என்ற புனைபெயர் கொண்ட நியூசிலாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி (New Zealand women's national cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஐ.சி.சி பெண்கள் வாகையாளர் (சர்வதேச பெண்கள் துடுப்பாட்டத்தில் மிக உயர்ந்த நிலை) போட்டியிடும் எட்டு அணிகளில் ஒன்றான இந்த அணியை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் வாழ்நாள் உறுப்பினரான நியூசிலாந்துத் துடுப்பாட்ட வாரியம் நிர்வகிக்கிறது.
நியூசிலாந்து 1935 இல் இங்கிலாந்துக்குஎதிராக தேர்வுப் போட்டியில் அறிமுகமானது, அந்த மட்டத்தில் விளையாடும் மூன்றாவது அணியாக ஆனது. ஆஸ்திரேலியாமற்றும் இங்கிலாந்துடன், பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பையின் பத்து பதிப்புகளிலும் பங்கேற்ற மூன்று அணிகளில் நியூசிலாந்தும் ஒன்றாகும். இந்த அணி நான்கு முறை இறுதிப் போட்டிக்கு தகுதியானது . இதில், 2000 இல் வென்றது 1993, 1997 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.