தீவுக்கூட்டம்
தீவுக்கூட்டம் (archipelago) என்பது தீவுகளின் தொகுப்பு. ஒரே பூகோள இடத்தில் அமைந்துள்ள தனித்தனித் தீவுகளை மொத்தமாக குறிக்கப் பயன்படும் ஒரு பதமாகும்.
பொதுவாக தீவுக்கூட்டங்கள் ஒரு பெரிய நிலப்பரப்பை சூழ்ந்ததாகயிருக்கும். உதாரணத்திற்கு:- ஸ்காட்லாந்து நாட்டைச்சுற்றி சுமார் 700 தீவுகள் அமைந்துள்ளன. தீவுக்கூட்டத்தால் உருவான முக்கிய ஐந்து நவீன நாடுகளில் இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் முதலியவை குறிப்பிடத்தக்கதாகும். பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேசியா அகும்.[1]. பெரும்பாலான தீவுக்கூட்டஙகள் பின்லாந்தில் உள்ள ஆர்சிபெலகோ கடல் பகுதியில் உள்ளது. தீவுக்கூட்டங்கள் முக்கியமாக எரிமலைகளால் உருவாக்கப்பட்டுகிறது மற்றும் மண்ணரிமானத்தாலும், மண்படிவதாலும், மண்திட்டுக்களாலும் உருவாக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indonesia". The World Factbook. Central Intelligence Agency. 2008-12-04. Archived from the original on 2008-12-10. பார்க்கப்பட்ட நாள் 2008-12-07.