உள்ளடக்கத்துக்குச் செல்

திருநெல்வேலி (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தின்னவேலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருநெல்வேலி

திருநெல்வேலி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாண மாவட்டம்
அமைவிடம் 9°41′19″N 80°01′40″E / 9.6886°N 80.0277°E / 9.6886; 80.0277
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

திருநெல்வேலி (Thirunelveli), இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் பகுதியில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இது நல்லூர் பிரதேச சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. வடக்கே கோண்டாவிலும், கிழக்கே கல்வியங்காடு மற்றும் நல்லூரும், தெற்கே கந்தர்மடமும், மேற்கே கொக்குவிலும் திருநெல்வேலியின் எல்லைகளாக அமைந்துள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி திருநெல்வேலியை ஊடறுத்துச் செல்கின்ற பிரதான வீதிகளில் ஒன்றான பலாலி வீதி, திருநெல்வேலி ஊடான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகும். 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இங்கேயே அமைந்துள்ளது.[2]

கிராம சேவையாளர் பிரிவுகள்

[தொகு]
  1. J/110 திருநெல்வேலி மேற்கு
  2. J/111 திருநெல்வேலி மத்திதெற்கு
  3. J/112 திருநெல்வேலி தென்கிழக்கு
  4. J/113 திருநெல்வேலி வடகிழக்கு
  5. J/114 திருநெல்வேலி மத்திவடக்கு[3]

கோயில்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

9°44′3.59″N 80°0′33.52″E / 9.7343306°N 80.0093111°E / 9.7343306; 80.0093111

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநெல்வேலி_(இலங்கை)&oldid=3913074" இலிருந்து மீள்விக்கப்பட்டது