உள்ளடக்கத்துக்குச் செல்

தலையூர் காளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தலையூர் காளி மன்னன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தலையூர் காளி என்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன்.[சான்று தேவை] இவன் ஒட்டு மொத்த வேட்டுவக் கவுண்டர் தலைவனாக அறியப்படுகிறான். மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன். மேலும் சிறந்த வீரன் என போற்றப்படுபவர். இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

காளி தலையநாட்டு பட்டக்காரர் வம்சாவளி எனக் குறிப்பிடுவர். இன்றும் தலையநாட்டு பட்டக்காரர் மரபு பின்பற்றப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

தலையூரை தலைநகராக கொண்டு ஆண்ட வேட்டுவ கவுண்டர் இன மன்னனின் மகன் ஆவான். தலையூர் காளி மன்னன் வில்லாற்றலில் கடையநெடு வேட்டுவனை நினைவுக்கு கொண்டு வருபவன். கடையநெடு வெட்டுவனின் வழித் தோன்றலே இந்த தலையூர் காளி மன்னன். இவன் தலையூரில் உள்ள பிரம்ம காளித் தேவி அம்மனை குலதெய்வமாக கொண்டவன்.

இளமை

இவனை மக்கள் தலையூரான் என விரும்பி அழைத்தனர். இவன் இளவயதிலே தனக்கென ஒரு படையை தந்தையிடம் வாதிட்டு பெற்று நிருவகித்து வந்தான். அப்படையானது தலையூரான் படை என்றும் காளி கவுண்டர் சேனை என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தது. மாட மாளிகையில் வேட்டுவக் கவுண்டர் குலத்தில் பிறந்த மாவீரன் என மக்கள் அவனை போற்றினர். ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றபொழுது இரண்டு புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டான். உடன் சென்றோரோ இளவரசன் ஆயுள் முடிந்துவிட்டது என கூறுமாறு பணியாள் ஒருவன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

இரண்டு புலிகளுக்கு நடுவே பயமறியாது பாயும் வேங்கை போல நேர்கொண்ட பார்வையுடன் புலியை எதிர்த்து நின்றான்.[சான்று தேவை] உடன் சென்றவர்கள் இதுபோன்று மனவலிமை கொண்ட ஒரு கொங்கனை கண்டதில்லை என எண்ணி வியந்து செய்வதறியாது நின்றனர். ஒரு கையில் தன் முன்னோர்களின் மிக முக்கிய ஆயுதமான தண்டெறியும் (3 முதல் 5 அடி நீளம் கொண்ட குத்து ஈட்டி) மறு கையில் கூர்மையான வாளும் கொண்டு நின்றான். வலது புறத்திலிருந்த புலி பாய்ந்து காளி முதுகை பிளக்க முயன்றது. முதுகில் புண்படுதலோ தற்கொலை செய்தலோ வீரமற்ற கோழைகளின் செயல் என்பதை நன்கு அறிந்த காளி தனது மார்பை வலப் பக்கம் திருப்பி கையொன்றில் இருந்த தண்டெறியால் புலியின் மார்பிலே குத்தி தனது கையினால் அப்புலியை தாங்கி நின்றான். மறு கையில் கொண்ட வாளால் மற்றொரு புலியை நோக்கி வீசினான். அன்று முதல் அவன் புலிக்குத்தி என்னும் பட்டத்துடன் அழைக்கப்பட்டான்.

மாசித் திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தலையூர் காளி கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மாசி திருவிழாவாக நடந்து வருகிறது. அன்றுமுதல் ஆண்டு தோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. போரில் வென்ற வெற்றியின் அடையாளமாக இவ்விழா கருதப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையூர்_காளி&oldid=2967747" இலிருந்து மீள்விக்கப்பட்டது