தமிழகத்தில் இடைக்கற்காலம்
தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது தமிழகத்தில் குறுனிக்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000 வரை நிலவியது.[2] குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் பகுதியில் இக்கால ஆயுதங்கள் அதிகம் காணப்படுகின்றன.[1]
தேரி
[தொகு]தற்போதும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன.[3] இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன.[2] இத்தேரியில் இடைக்கற்கால ஆயுதங்கள் சிலவற்றிலும், இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகளும் சேர்ந்தும் காணப்படுகின்றன.[1]
பரவல்
[தொகு]இவ்வாயுதங்கள் மேலும் தமிழகத்தில் சில இடங்களில் காணப்படுகின்றன.
- திருச்சி மாவட்டம்[4]
- மதுரை மாவட்டம் - மதுரை, திருமங்கலம்[5], போடிநாயக்கனூர், கொல்லம்பட்டறை, தாதனோடை மேடு, பெரியகுளம், கல்லுப்பட்டி, சிவரக்கோட்டை, கருவேலம்பட்டி, சென்னப்பட்டி.[6]
- தஞ்சாவூர் மாவட்டம்[4]
இந்த ஆயுதங்கள் வடதமிழகத்தில் அதிகம் காணப்படுவதில்லை.
ஓடைகளிலும் இடைக்கற்காலப் பரவல்
[தொகு]தென்காசி நகராட்சியிலுள்ள சிற்றாற்றின் துணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், இடைக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.[7] இதை வைத்து இடைக்கற்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் சிறிய ஓடைகளைச் சுற்றியும் கூட தங்கள் நாகரிகத்தைப் பரவ விட்டிருந்தனர் எனக் கொள்ளலாம்.
இன்று
[தொகு]இன்றும் இக்கால மக்கள் வேடர் (தமிழகம் மற்றும் ஈழம்), இருளர், காடர், காணிக்கார், பழையர், மலைப்பண்டாரம் போன்ற மக்களுள் கலந்து வாழ்கின்றனர் என்பது ஆராய்ச்சியாளர் கூற்று.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 F B Zuener and Allchin B (1964). Madras State in Ancient India Vol 12. pp. pp 4 - 20.
{{cite book}}
:|pages=
has extra text (help) - ↑ 2.0 2.1 Sankalia HD (1974). Pre- and Proto-History of India and pakistan. Poona University.
- ↑ Allchin B and Allchin F R (1982). The Rise of Civilization in India and Pakistan. Cambridge University.
- ↑ 4.0 4.1 Raman K V (1969). Pre and Proto Historic Culture Of Tamilnadu. pp. pp 137-142.
{{cite book}}
:|pages=
has extra text (help) - ↑ Raman K V (1970). Distribution Pattern of Cultural Traits in the Pre and Proto Historic times in Madurai Region. pp. pp 499 - 599.
{{cite book}}
:|pages=
has extra text (help) - ↑ குருமூர்த்தி (1974). தொல்பொருளியலும் தமிழர் பண்பாடும். சென்னை.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ இந்திய தொல்லியல் துறை. "இந்திய தொல்லியல் துறை வெளியீடு 1988-89". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: மே 17, 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original on 2012-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)