உள்ளடக்கத்துக்குச் செல்

தக்கலை பீர் முகம்மது அப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தக்கலை பீர் முகமது அப்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தக்கலை பீர் முகம்மது அப்பா காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர் ஆவார். அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டார். சிறந்த இறைநேசச் செல்வர். திருக்குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். இவருடைய பாடல்கள் யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எளிமையானவை. பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது நபிப் பெருமகனாரின் திருப்பெயர். சூபி கவிஞரான பீரப்பாவின் நினைவு நாள் விழா இஸ்லாமிய மாதம் ரஜப் 14ம் நாள் வருகின்றது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.[1]

பிறப்பு

[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கணிகபுரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் சிறுமலுக்கர்.[2][3] தாயார் ஆமீனா. இவரின் காலத்தைப் பற்றிய சரியான தடங்கள் இல்லை. கிபி 10, 13ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம். இசுலாமிய ஆண்டு ஹிஜ்ரி 800 க்கும் 1100 க்கும் இடைப்பட்டது.[4] 108 சித்தர்களின் வரிசையில் அப்பா அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.[சான்று தேவை] சமசுகிருத மருத்துவ நூல்கள் இவரை சித்த நாகார்ஜுனர் என்றே குறிப்பிடுகின்றன.

இளமைக்காலம்

[தொகு]

சூழல்

[தொகு]

தென்காசியில் சைவ சமயம் எழுச்சி பெற்று நின்றது. சைவ வெள்ளாளர்களும்/ பாளையப்பட்டு மறவர்களும்/, பட்டு நூல் நெசவாளர்களும் கலந்த வாழ்ந்த நகரில் இசுலாமியர்களும் இருந்தனர். அங்கு விசுவநாத சாமி கோவில் என்ற பிரமாண்ட கோவில் ஒன்று இருந்தது. அந்த கோயிலின் தர்மகர்த்தவான திரு. பெஸ்கட் ராம சாஸ்திரி, பீர்முகம்மதின் அப்பா சிறுமலுக்கருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். எனவே, இருவீட்டுப் பிள்ளைகளும் நெருங்கி பழகுவர். விளையாடுவர். இருப்பினும்,ளமை காலத்தில் பீர்முகம்மது உலக நடப்புகள் எவற்றின் மீதும் ஆர்வம் காட்டாத மனம் படைத்தவராக இருந்தார். அதுவே அச்சூழலுக்கு அவருக்கு பொருத்தமாகவே இருந்தது.

வாழிட மாற்ற நிகழ்வு

[தொகு]

அக்காலத்தில், அக்கோவில் குளத்தில் சைவர்கள் மட்டுமே குளிக்க அனுமதிப்பர். அச்சூழலில் பீர் முகம்மது என்ற இசுலாமியச்சிறுவன் குளித்ததால், பீர் முகம்மதுவின் அப்பாவுக்கும், கோவில் தர்மகத்தாவுக்கும் மனப்பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. அன்றைய நாட்களில் தக்கலையானது நெசவாளர்களை அதிகம் கொண்ட இடமாக செயல்பட்டது. எனவே, தக்கலைக்கு தமது வாழிடத்தை மாற்றி, அங்கு முஹைதீன் பிள்ளை என்பவருடைய வீட்டில் தங்கினர். அங்கு அவரது குடும்பத்தார், நெசவுத் தொழிலை மேற்கொண்டனர். அன்று தக்கலை, திருவாங்கூர் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. திருவாங்கூரின் தலைநகராக அதன் அடுத்த ஊரான பத்மநாபபுரம் விளங்கியது. தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.

தக்கலை பீர் முகமது அப்பாவின் சிறப்பு

[தொகு]
"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான்" (ஞானப் புகழ்ச்சி)
"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்புடைய பீர்முகம்மது" (ஞானக் குறம்)

பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானப்புகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை பீர் முகம்மது ஒலியுல்லா தர்காவில் அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.[5]

அப்பா அவர்கள் பிறந்த ஆண்டு இன்னும் கணிக்க முடியாமலே இருக்கிறது. இளமையிலேயே ஞானக் கருத்துக்களில் ஈடுபாடு உடையவராய் விளங்கிய அவர், தென்காசியைச் சேர்ந்தவராயிருப்பினும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.

இவரின் நூல்கள்

[தொகு]
  • திருமெய்ஞானச் சர நூல்
  • ஞான மலை வளம்,
  • ஞான ரத்தினக் குறவஞ்சி,
  • ஞான மணி மாலை
  • ஞானப் புகழ்ச்சி
  • ஞானப்பால்
  • ஞானப்பூட்டு
  • ஞானக்குறம்
  • ஞான ஆனந்தகளிப்பு
  • ஞான நடனம்
  • ஞான மூச்சுடர் பதிகங்கள்
  • ஞான விகட சமர்த்து
  • ஞானத் திறவு கோல்
  • ஞான தித்தி
  • அவரின் படைப்புக்களை வைத்து அவர் கிபி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவும் கருதுகின்றனர்.

சில நூற்கீற்றுகள்

[தொகு]
  • தக்கலையில் வாழ்ந்த நாட்களில் தன் புகழ்பெற்ற நூலான ஞானப் புகழ்ச்சியை இயற்றினார்.

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான்" (ஞானப் புகழ்ச்சி)

"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்புடைய பீர்முகம்மது" (ஞானக் குறம்)

இவரின் சிறப்பு

[தொகு]
  • பீர்முகம்மது தக்கலையில் நெசவுத் தொழில் செய்து கொண்டே, பல்வேறு விதமான இலக்கிய செயற்பாட்டுக்குள்ளும் இறங்கினார்.
  • தென்காசியில் இருந்ததால், அவரிடம் சைவ சமய தாக்கம் இருந்தது. அவருடைய பாடல்கள் பலவற்றில் சைவ சமய கூறுகள் உள்ளன.
  • இவர் நிகழ்த்தியதாக சொல்லப்படும் பல்வேறு அற்புதங்கள் செவிவழி கதைகளாக இப்பகுதியில் வலம் வருகின்றன.
  • சித்தர்களின் தியான கலை/ மூச்சுகலை போன்றவற்றை பயின்றார்.
  • தமிழ் சித்தர்களின் மூச்சுக் கலையை அடிப்படையாக கொண்ட பல்வேறு வித புலன் செயல்பாடுகள் இவரிடத்திலும் இருந்ததாகக் கருதப்படுகிறது.

இறப்பு

[தொகு]

அப்பா அவர்கள் நீண்ட காலம் தங்கியிருந்த கேரளத்தின் ஒரு இடத்திற்கு இன்னமும் பீர்மேடு (இடுக்கி மாவட்டம்) எனும் பெயர் நிலவுகிறது.[6] இறுதியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதிக்கு வந்து சிலகாலம் இருந்து ஞானம் உபதேசித்தார்; பின்னர் இறுதி நாளும் தக்கலையிலேயே முடிந்தது. இவருடைய தர்கா, பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா தக்கலையில் இருக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. குமரி தகவல் பெட்டகம், தினகரன், நாகர்கோவில் பதிப்பு, 2017. பக்கம் 51
  2. இச் சம்பவத்தை அப்பா அவர்கள் தங்களுடைய ' ஞானப்புகழ்ச்சி ' நூலில் 23வது பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர் தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம் சுக்கோ சிவனிருப்பன் சோணிதமோ வல்லவிஞ்சி ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்"
  3. அப்பா அவர்களின் ' திருமெய்ஞான சரநூல் ' 30வது பாடலில் " வேதகுல வாவாஞ்சிப் பேரனான வேந்தரெனும் சிறுமலுக்க ரீன்றபாலன் " என்றும் குறிப்பிடுகின்றார்.
  4. அப்பா அவர்கள் தன்னுடைய "திருநெறிநீதம்" பாடல் தொகுப்பை ஹிஜ்ரி 1022 ல் யாத்ததாக "குருநபி ஹிஜ்ரத் தாகி குவலயத் தாயிரத்தின் இருபத்தி ரண்டா மாண்டி லியம்பிடும் ரபியு லாஹிர் கருமமென் றிருப தன்று காரண வெள்ளி நாளில் திருநெறி நீதம் பாடத் திருவருள் பெருகத் தானே" என்று குறிப்பிடுகின்றார்.
  5. "ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 03 மார்ச் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. "தமிழ் இணையக் கல்விக் கழகப்பாடப்பகுதி". tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012.
  • மெய்ஞானப் பாடல்கள் - தொகுப்பு: அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோஸியேஷன், தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம்.

வெளி இணைப்பு

[தொகு]