உள்ளடக்கத்துக்குச் செல்

தியேகோ கார்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டியேகோ கார்சியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தியேகோ கார்சியா
தியேகோ கார்சியா is located in Indian Ocean
தியேகோ கார்சியா
தியேகோ கார்சியா
தியேகோ கார்சியாவின் அமைவிடம்
புவியியல்
தீவுக்கூட்டம்சாகோஸ் தீவுக்கூட்டம்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை4,239[1]
கடற்படைக்கான உதவித் தளம்
தியேகோ கார்சியா
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைகடற்படை வான் தளம்
உரிமையாளர்பாதுகாப்பு அமைச்சு (ஐ.இ)
இயக்குனர்ஐக்கிய அமெரிக்கக் கடற்படை
அமைவிடம்தியேகோ கார்சியா, பிரித்தானிய இந்தியப்
பெருங்கடல் மண்டலம்
கட்டியது1971–1976; முக்கிய விஸ்தரிப்புகள் 1982–1986
பயன்பாடு1971–இன்று
உயரம் AMSL9 ft / 3 m
ஆள்கூறுகள்7°18′48″S 72°24′40″E / 7.31333°S 72.41111°E / -7.31333; 72.41111
நிலப்படம்
தியேகோ கார்சியா is located in Indian Ocean
தியேகோ கார்சியா
தியேகோ கார்சியா
இந்தியப் பெருங்கடலில் தியேகோ கார்சியாவின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
13/31 12,003 3,659 பைஞ்சுதை

தியேகோ கார்சியா (Diego Garcia) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் நிலநடுக் கோட்டிற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு பவளத் தீவு ஆகும். இது பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் ஒரு பகுதியும், இம்மண்டலத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளில் ஒன்றும் ஆகும். 1814 ஆம் ஆண்டில் பிரித்தானியா இத்தீவுகளை உரிமை கோரியது. பின்னர் 1965 ஆம் ஆண்டில் இவற்றைப் பிரித்தானிய தனது பிராந்தியமாக இணைத்துக் கொண்டது. இத்தீவுகளில் தியேகோ கார்சியா மிகப் பெரியதும், குடிமக்கள் அற்ற ஒரேயொரு தீவுமாகும்.

தியேகோ கார்சியா தான்சானியா கரையின் கிழக்கே 3,535 கிமீ (2,197 மைல்) தூரத்திலும், இந்தியாவின் தென்முனையில் (கன்னியாகுமரியில்) இருந்து தென்-தென்மேற்கே 1,796 கிமீ (1,116 மைல்) தூரத்திலும், ஆத்திரேலியாவின் மேற்குக் கரையில் இருந்து 4,723 கிமீ (2,935 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. தியேகோ கார்சியா சாகோசு தீவுக் கூட்டத்தில் சார்கோசு-இலட்சத்தீவு குன்றின் தென்கோடியில் உள்ளது. உள்ளூர் நேரம் ஆண்டு முழுவதும் ஒசநே+06:00]] ஆகும்.[2]

தியேகோ கார்சியாவில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை தனது தேவைக்கான உதவித் தளத்தை இங்கு வைத்துள்ளது. பெரும் கடற்படைக் கப்பல் மற்றும் நீர்மூழ்கி உதவித் தளம், படைத்துறைத் தேவைக்கான வான்படைத் தளம், தகவல் தொடர்பு, விண்வெளித் தொடர்புத் தளம் அகியவை இங்கு பேணப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Country Profile: British Indian Ocean Territory (British Overseas Territory)". Fco.gov.uk. 2012-04-12. Archived from the original on 2012-06-20. Retrieved 2012-06-21.
  2. "World Time Chart" (PDF). US Navy. Archived from the original (PDF) on 2012-01-26. Retrieved 2012-08-07.
  3. Natural Resources Management Plan (2005), paragraph 2.4.3.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியேகோ_கார்சியா&oldid=3558011" இலிருந்து மீள்விக்கப்பட்டது