செருமானியப் பேரரசு
ஜெர்மன் பேரரசு டியுச்சஸ் ரெய்க் | |
---|---|
1871–1918 | |
குறிக்கோள்: கோட் மிட் அன்ஸ்-(Gott mit uns) (ஜெர்மன்: "கடவுள் நம்முடன் இருக்கிறார்”) | |
நாட்டுப்பண்: ஏதுமில்லை பேரரசரின் பண்: ஹெய்ல் டேர் இன் சீசர்கிரான்ஸ் | |
நிலை | பேரரசு |
தலைநகரம் | பெர்லின் |
பேசப்படும் மொழிகள் | ஆட்சி மொழி: German அதிகாரபூர்மற்ற சிறுபான்மை மொழிகள்: டேனிஷ், பிரான்சு, பிரிசியன், போலிஷ், செர்பியன் |
சமயம் | லுதரன்ஸ்~60% ரோமன் கத்தோலிக்கர்~30% |
அரசாங்கம் | அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி |
பேரரசு | |
• 1871–1888 | முதலாம் வில்லியம், ஜெர்மன் பேரரசு |
• 1888 | மூன்றாம் பிரட்ரிக், ஜெர்மன் பேரரசு |
• 1888–1918 | இரண்டாம் வில்லியம், ஜெர்மன் பேரரசு |
ஜெர்மனி வேந்தர், ஜெர்மன் ரெய்க் | |
• 1871–1890 | ஒட்டோ வோன் பிஸ்மார்க் (முதல்) |
• 8–9 Nov 1918 | பிரைட்ரிச் எபர்ட் (கடைசி) |
வரலாற்று சகாப்தம் | புதிய ஏகாதிபத்தியம் |
• ஒருங்கிணைந்தபொழுது | ஜனவரி 18 1871 |
• குடியரசாக அறிவித்தபொழுது. | நவம்பர் 9 1918 |
• பதவி துறந்தபொழுது | 28 நவம்பர், 1918 |
பரப்பு | |
1910 | 540,857.54 km2 (208,826.26 sq mi) |
மக்கள் தொகை | |
• 1871 | 41058792 |
• 1890 | 49428470 |
• 1910 | 64925993 |
நாணயம் | வெரியன்ஸ் தாளர், தெற்கு ஜெர்மன் குல்டன்,பிரெமன் தாலர், அம்பர்க் மார்க், பிரஞ்சு பிராங்க் (1873 வரை, ஒன்றாயிருந்தது) ஜெர்மன் (கோல்ட்) தங்க மார்க் (1873-1914) ஜெர்மன் பேப்பிமார்க் ( 1914 க்குப் பிறகு) |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | DE |
ஜெர்மன் பேரரசு (German Empire) 1871 முதல் 1918 வரையுள்ள காலங்களில் ஜெர்மனி, 18 ம் நூற்றாண்டின் ஜெர்மன் பேரரசர் முதலாம் வியெம்மால் நிர்மாணிக்கப்பெற்ற இடங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனியை உள்ளடக்கிய பகுதிகள் ஜெர்மன் போரரசாக விளங்கியது. முதலாம் உலகப்போரினால் ஏற்பட்டத் தோல்வியாலும் பேரரசர் இரண்டாம் வியெம்மின் (நவம்பர் 28, 1918) பதவித் துறப்பாலும் இப்பேரரசு ஜெர்மன் குடியரசாக சிதறுண்டது. இந்த இடைப்பட்ட 47 வருட காலங்களில் இப்பேரரசு தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் அதீத வளர்ச்சி கண்டு ஐரோப்பிய நாடுகளிலேயே மிகச்சிறந்த நாடாக ஜெர்மன் புரட்சிகளினாலும், உலகப்போரின் தாக்கத்தினாலும் வீழும்வரைத் திகழ்ந்தது. இதன் கிழக்கு எல்லைகளாக இரஷ்யப்பேரரசும், மேற்காக பிரான்சும், தெற்காக ஆஸ்திரிய-அங்கேரி நாடுகளும் எல்லைகளாக அமைந்திருந்தன.[1][2][3]
பெயர்க் காரணம்
[தொகு]இதன் அதிகாரப்பூர்வப் பெயராக டியுச்சஸ் ரைய்க் என்று 1871 முதல் 1943 வரை அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் ஆங்கிலத்தில் ஜெர்மன் பேரரசு என்பதைக் குறிக்கும். இச்சொல்லே காலப்போக்கில் எளிமையாக ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமற்றப் பெயராக டியுச்சஸ் கெய்ஸ்ரெய்க் என்று 1871 முதல் 1918 வரையுள்ளக் காலங்களில் ஜெர்மனி என்ற பொருள்படும்படி அழைத்துவந்தனர். இதுவே பின்னாளில் ரெய்க் அல்லது ஜெர்மன் ரெய்க் ஆனது. ரெய்க் என்று அழைக்கும் முறை முதலாம் ரெய்க் ரோமப் பேரரசர் காலத்திலிருந்தே இப்படி அழைக்கப்பட்டு பின் இரண்டாம் ரெய்க் காலம் தொடர்ந்து இப்பெயர் வந்தாதாக வரலாற்றியிலாளர் ஆர்தர் மோயிலர் குறிப்பிடுகிறார். இதைப்பார்த்தே நாசிக்கள் மூன்றாம் ரெய்க் என்று அவர்கள் கொள்கைக்குப் பெயராக பயன்படுத்திக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார்.
ஜெர்மன் பேரரசில் பிஸ்மார்க்
[தொகு]1848 ல் ஜெர்மன் பேரரசு புருஷ்யப் பிரதமர் ஒட்டோ வோன் பிஸ்மார்க்கின் அதிகாரத்துக்குட்பட்டப் பேரரசராக இயங்கியது. இவர் ஆளுமையில் இந்நாட்டை கன்சர்வேட்டிவ் நாடாக மாற்றினார். புருஷ்யா மேலோங்கிய நிலையில் இருக்க ஜெர்மனியை உட்படுத்தினார். இதை சாத்தியமாக்க பிஸ்மார்க் மூன்று போர்களை ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நடத்த வேண்டியதாயிற்று. 1864 ல் டென்மார்க்குக்கு எதிரான இரண்டாம் ஷில்ஸ்விக் போர், 1866 ல் ஆஸ்திரியாவுக்கு எதிராக ஆஸ்திரியா-புருஷ்யாப் போர் மற்றும் 1870-71 ல் இரண்டாம் பிரஞ்சு பேரரசை எதிர்த்து பிராங்கோ-புருஷ்யப் போர் ஆகியப் போர்கள் நடத்தப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statement of Abdication of Wilhelm II
- ↑ Seyler, Gustav A.:Die Wappen der deutschen Landesfürsten. Reprograf. Nachdr. von Siebmacher's Wappenbuch 1. Bd., 1. Abt. 2. – 5. Teil (Nürnberg 1909 – 1929)
- ↑ Preble, George Henry, History of the Flag of the United States of America: With a Chronicle of the Symbols, Standards, Banners, and Flags of Ancient and Modern Nations, 2nd ed, p. 102; A. Williams and co, 1880