ஜலியான்வாலா பாக்
ஜலியான்வாலா பாக் | |
---|---|
ஜாலியன்வாலா பாக் நினைவுச் சின்னம், அமிர்தசரஸ் | |
அமைவிடம் | அமிர்தசரஸ், அமிர்தசரஸ் மாவட்டம், பஞ்சாப் |
ஜலியான்வாலா பாக் (Jallianwala Bagh) (இந்தி: जलियांवाला बाग) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத் தலைமையிட நகரமான அமிர்தசரஸ் - பொற்கோயிலுக்கு மிக அருகே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜாலியன்வாலா பாக் பொதுத் தோட்டம் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]பஞ்சாப் மன்னரான மகாராஜா ரஞ்சித்சிங்கிடம் பணிபுரிந்த சர்தார் ஹிமத்சிங் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இது. அவரது குடும்பம் 'ஜல்லா' என்ற சிற்றூரில் இருந்து வந்ததால் ’ஜலியான்வாலா பாக்’ என்று பெயர் பெற்றது.[1]
13 ஏப்ரல் 1919 அன்று 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜலியான்வாலா பாக் தோட்டத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் மீது முன் அறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டையர் தலைமையிலான இராணுவத்தினர் 1650 இரவுண்டு ரவைகளை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இதனை வரலாற்றில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பர். ஜலியான்வாலாபாக் படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 1110 பேருக்கும் மேலாக படுகாயம் அடைந்தனர்.
இப்படுகொலையில் இறந்த இந்திய விடுதலை இயக்கத்தினரை நினைவு கூறும் வகையில் இத்தோட்டத்தை 1951-ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்து இறந்த தியாகிகளுக்கு இத்தோட்டத்தில் நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளது.
படக்காட்சியகம்
[தொகு]-
துப்பாக்கியால் சுடப்பட்ட இடங்கள்
-
தோட்டத்தின் சுற்றுச் சுவர்களில் சுடப்பட்ட துப்பாக்கி இரவைகளின் அடையாளம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆம்பூர் மங்கையர்கரசி (20 திசம்பர் 2017). "துயரத்தின் சாட்சி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- Text of Jalliamwala Bagh National Memorial Act, 1951 பரணிடப்பட்டது 2007-09-17 at the வந்தவழி இயந்திரம்
- Jallianwalabagh.ca பரணிடப்பட்டது 2020-08-01 at the வந்தவழி இயந்திரம்