உள்ளடக்கத்துக்குச் செல்

சுலாவெசி கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செலேபெஸ் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுலாவெசி கடல்
Celebes Sea
சுலாவெசி கடல் Celebes Sea - சுலாவெசி கடல்
சுலாவெசி கடல்
அமைவிடம் பசிபிக் பெருங்கடல்
Basin countries இந்தோனேசியா
பிலிப்பைன்ஸ்
பரப்பளவு 2.8 மில்லியன் சதுர கிமீ

சுலாவெசி கடல் (இந்தோனேசிய மொழி: லாவுத் சுலாவெசி) (en:Celebes Sea) மேற்கு பசிபிக் பெருங்கடலில், தெற்கில் சுலாவெசி, மேற்கில் இந்தோனேசியாவில் உள்ள கலிமந்தான், கிழக்கில் சங்கிஹி தீவுச் சங்கிலி, வடக்கில் சுலு கடல், சுலு தீவுக்கூட்டம், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த மிண்டனாவோ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியாகும். இந்தக் கடலின் அதிகபட்ச ஆழம் 20.300 அடி (6,200 மீ) ஆகும். இதன் பரப்பளவு கிழக்கு மேற்காக 520 மைல் (837 கி.மீ.) எனவும், வடக்கு தெற்ககாக 420 மைல் (675 கி.மீ.) எனவும், மொத்த மேற்பரப்பு 110,000 சதுர மைல்கள் (280,000 கிமீ 2) என்று கணக்கிடப்பட்டு உள்ளது. சுலாவெசி கடல் மக்கசார் நீரிணை வழியாக தென்மேற்கு பக்கத்தில் சாவகக் கடல் பகுதியில் இணைகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Celebes Sea | sea, Pacific Ocean | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
  2. C.Michael Hogan. 2011. Celebes Sea. Encyclopedia of Earth. Eds. P.Saundry & C.J.Cleveland. National Council for Science and the Environment. Washington DC
  3. "Agreement between the Government of the Republic of the Philippines and the Government of the Republic Indonesia concerning the delimitation of the Exclusive Economic Zone boundary". Official Gazette. Republic of the Philippines. 2014-05-23. Archived from the original on 13 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2014-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலாவெசி_கடல்&oldid=4098994" இலிருந்து மீள்விக்கப்பட்டது