சென்னை புத்தகக் காட்சி
சென்னை புத்தகக் காட்சி | |
---|---|
நிகழ்நிலை | செயல்பாட்டில் உள்ளது |
நிகழிடம் | ஒய்.எம்.சி.ஏ. மைதானம் |
அமைவிடம் | நந்தனம், சென்னை |
நாடு | இந்தியா |
முதல் நிகழ்வு | திசம்பர் 14, 1977 |
வந்தோர் எண்ணிக்கை | 600,000 ( 2007-இல்) |
இணையத்தளம் | bapasi.com |
சென்னை புத்தகக் காட்சி (Chennai Book Fair அல்லது Madras Book Fair) சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் ஓரு நூல் கண்காட்சியாகும். இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு - பொங்கல் காலத்தில், திசம்பர் கடைசி வாரத்திலிருந்து சனவரி மூன்றாம் வாரத்திற்குள், பத்து நாட்கள் நடைபெறும்.[1] இக்கண்காட்சி சென்னையின் சென்னை சங்கமம், சென்னை இசைவிழா நிகழ்ச்சிகளை ஒட்டி நடத்தப்படும் முதன்மையான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.[2]
வரலாறு[தொகு]
முதல் "சென்னை புத்தகக் காட்சி", தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் திசம்பர் 14 முதல் திசம்பர் 24 வரை 1977-இல் நடத்தப்பட்டது. தமிழ்நாடு, முக்கியமாக சென்னை, மற்றும் தென்னிந்தியாவின் பல முக்கியமான பதிப்பகங்களின் சங்கமே தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகும்.[3][4][5] முதல் கண்காட்சியில் 22 கடைகள் போடப்பட்டிருந்தன; மதரசா-இ-ஆசாம் பள்ளியில் நடத்தப்பட்டது. பி.ஐ. பதிப்பகத்தின் கே வி மாத்தியூ அவர்களின் முன்னெடுப்பில் முதல் ஆறு புத்தகக் காட்சிகள் பெரும் வெற்றி பெற்றன; அவர்தம் முயற்சியில் ஆரம்ப காலங்களில் புத்தகக் காட்சி பெரும் வளர்ச்சி பெற்றது. மேலும், மாணவ/மாணவியருக்கான புத்தகக் கண்காட்சியையும் அவர் தொடங்கினார். ஆயினும், சென்னை புத்தகக் காட்சியைப் போல மாணவ/மாணவியருக்கான புத்தகக் கண்காட்சி வெற்றியைப் பெறவில்லை.
மதரசா-இ-ஆசாம் பள்ளியில் முதல் நான்கு புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்ட பிறகு, 1981-ஆம் ஆண்டு இராயப்பேட்டை, சென்னை - இல் இருக்கும் கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (ஒய்.எம்.சி.ஏ.) மைதானத்தில் நடத்தப்பட்டது. 1982-இல் செலுத்தி-சென்று உணவருந்தும் நிலையத்தில் (Drive-in Restaurant) நடத்தப்பட்டது. புத்தகக் காட்சியின் புகழ் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருந்தது. திசம்பர் 22, 1989, முதல் சனவரி 1, 1990, வரை நடத்தப்பட்ட 12-வது புத்தகக் காட்சியில் உலக சுகாதார அமைப்பின் புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றிருந்தன.[6] சென்னை புத்தகக் காட்சியின் பெருவெற்றியின் காரணத்தினால், உதகமண்டலம், திருவனந்தபுரம், பாண்டிச்சேரி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலும் "தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால்" புத்தகக் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்ப காலங்களில் கிறித்துமசு-புத்தாண்டு விடுமுறைகளுடன் ஒத்துப்போகுமாறு திசம்பர் இறுதி வாரங்களிலிருந்து சனவரியின் ஆரம்ப வாரம் வரை புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. ஆயினும், 90-களில் பொங்கல் விடுமுறைகளுடன் ஒத்திருக்கும்படி சனவரியின் மையப் பகுதிகளில் நிகழுமாறு மாற்றப்பட்டது.
பங்கு கொள்ளும் பதிப்பகங்கள்[தொகு]
இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நூல் கண்காட்சிகளில் மிகப்பெரும் கண்காட்சிகளில் ஒன்றாக இக்கண்காட்சி விளங்குகிறது. நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்தும் பன்மொழிப் பதிப்பகங்களும், தமிழ்நாட்டின் முக்கியமான சில தமிழ்ப் பதிப்பகங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் பதிப்பகங்கள்[தொகு]
இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் தமிழ்மொழிப் பதிப்பகங்களில் கீழ்காணும் பதிப்பகங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
- த அல்லயன்சு
- பாரி நிலையம்
- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- வானதி பதிப்பகம்
- மணிவாசகர் பதிப்பகம்
- பிரேமா பிரசுரம்
- நர்மதா பதிப்பகம்
- நக்கீரன் பதிப்பகம்
- சுரா புக்சு
- கவிதா பதிப்பகம்
- உமா பதிப்பகம்
- தமிழ் புத்தகாலயம்
- பூங்கொடி பதிப்பகம்,
- காலச்சுவடு
- கிழக்கு பதிப்பகம்
- உயிர்மை
- பாரதி புத்தகாலயம்
- ஐந்திணை பதிப்பகம்
- கண்ணதாசன் பதிப்பகம்
- அருணோதயம்
- பழனியப்பா பப்ளிகேசன்சு
- சிறீ செண்பகா பதிப்பகம்
- பெரியார் சுயமரியாதை
- சிறீ இராமகிருட்டிணா மடம்,
- இசுகான்
- திருமகள் நிலையம்
- தாமரை நூலகம்
- யூனிவெர்சல் பப்ளிசர்சு
- கபிலன் பதிப்பகம்
பன்மொழிப் பதிப்பகங்கள்[தொகு]
இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் பன்மொழிப் பதிப்பகங்களில் கீழ்காணும் பதிப்பகங்களில் முக்கியமானவையாக உள்ளன.
- ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக அச்சகம்
- கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சகம்
- புஸ்தக் மகால்
- இக்கின்பாதம்சு
- ஓரியண்ட் லாங்மேன்சு
- மாக்மில்லன் பதிப்பகம்
- டாடா-மெக்ராஹில்
- இந்தியா புக் அவுசு
- பிரித்தானிய கௌன்சில்
- த இந்து
சிறப்பியல்புகள்[தொகு]
சென்னை புத்தகக் காட்சியானது சென்னையின் சென்னை சங்கமம், சென்னை இசைவிழா நிகழ்ச்சிகளை ஒட்டி நடத்தப்படும் முதன்மையான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.[2] புத்தகக் கடைகளைத் தவிர்த்து உணவு மற்றும் இளைப்பாறுதலுக்கான கடைகளும் கண்காட்சியரங்கில் உண்டு. விவாதங்கள், போட்டிகள் மற்றும் முக்கிய நபர்களின் உரைகளும் அரங்கில் நடைபெறும். சமீப காலங்களில், உலகத் திரைப்படங்களின் குறு-காணொலிகளும் காண்பிக்கப்படுகின்றன. சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பதிப்பகத்தார் ஆகிய விருதுகளும் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்படுகின்றன.[7]
கண்காட்சிகள்[தொகு]
- 2015ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சி 2015 சென்னையில் சனவரி 9-21 தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
- 2014ஆம் ஆண்டு 37-வது புத்தகக் காட்சி சென்னையில் சனவரி 10-22 தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.[8]
- 2012-ஆம் ஆண்டு 35-வது புத்தகக் காட்சியும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனவரி 5 முதல் 17 வரை நடைபெற்றது.
- 2011ஆம் ஆண்டு 34வது புத்தகக் காட்சி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே செயிண்ட் ஜோர்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 666 காட்சிக்கூடங்களுடன் சனவரி 4-17 தேதிகளில் நடைபெற்றது.[9]
- ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் சென்னை மெட்ரோ திட்டப் பணிகளின் காரணமாக 36-வது புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனவரி 11 முதல் 23 வரை நடைபெற்றது. 1,80,000 சதுர அடிகளில் 747 கடைகளுடன் 10 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கண்காட்சியில் விற்பனைக்கு இடம்பெற்றன.[10][11]
ஆண்டு | பதிப்பு | இடம் | கடைகளின் எண்ணிக்கை | பார்வையாளர்கள் | நடைபெற்ற நாட்கள் | வருமானம் |
---|---|---|---|---|---|---|
2001 | 24 | காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி | 11 நாட்கள் | |||
2002 | 25 | காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி | 15 நாட்கள் | |||
2003 | 26 | காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி | 272 | 300,000 | 9–19 சனவரி
(11 நாட்கள்) |
ரூ.6 கோடி |
2004 | 27 | காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி | 310 | 540,000 | 9–19 சனவரி
(11 நாட்கள்) |
|
2005 | 28 | காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி | 700,000 | 7–17 சனவரி
(11 நாட்கள்) |
ரூ.6 கோடி | |
2006 | 29 | காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி | 375 | 6–16 சனவரி
(11 நாட்கள்) |
||
2007 | 30 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் | 474 | 600,000 | ||
2008 | 31 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் | ||||
2009 | 32 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் | 600 | 1,000,000 | 8–17 ஜனவரி
(10 நாட்கள்) |
ரூ.7 கோடி |
2011 | 34 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் | 646 | |||
2012 | 35 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் | 687 | 5–17 ஜனவரி
(13 நாட்கள்) |
[12] | |
2013 | 36 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | 746 | 900,000 | 11–23 சனவரி
(13 நாட்கள்) |
ரூ.12 கோடி |
2014 | 37 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | 777 | 10–22 சனவரி
(13 நாட்கள்)[13] |
||
2015 | 38 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | 700 | 9–21 சனவரி
(13 நாட்கள்) |
||
2016 | 39 | தீவுத்திடல் | 700 | 1–13 சூன்
(13 நாட்கள்) |
||
2017 | 40 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் | 700 | 6–19 சனவரி
(13 நாட்கள்) |
||
2018 | 41 | செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் | 708 | 10–22 சனவரி
(13 நாட்கள்) |
[14] | |
2019 | 42 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | [15] | 4-20 சனவரி
(17 நாட்கள்) |
||
2020 | 43 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | 9 - 21 சனவரி
(13 நாட்கள்) |
|||
2021 | 44 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | 578 | 24 பிப்ரவரி - 09 மார்ச்
(14 நாட்கள்) |
8 - 12 கோடி[16][17][18] | |
2022 | 45 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | 800 | 16 பிப்ரவரி - 06 மார்ச்
(19 நாட்கள்)[19] |
ரூ 15 கோடி[20] | |
2023 | 46 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | 1000 | 6 சனவரி - 22 சனவரி
(16 நாட்கள்)[21] |
ரூ 16 கோடி[22] | |
2024 | 47 | ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் | 3 சனவரி - 21 சனவரி
(18 நாட்கள்)[23] |
இதையும் காண்க[தொகு]
- சென்னை புத்தகக் காட்சி 2014
- சென்னை புத்தகக் காட்சி 2015
- மதுரை புத்தகத் திருவிழா
- ஈரோடு புத்தகத் திருவிழா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kamath, Rina (2000). Chennai. Orient Blackswan. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125013784, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125013785.
- ↑ 2.0 2.1 Krishnamachari, Suganthy (January 17, 2002). "Volumes of wisdom and fun too". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து ஜூன் 30, 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030630034605/http://www.hindu.com/thehindu/mp/2002/01/17/stories/2002011700210400.htm.
- ↑ "25th Chennai Book Fair 2002". உலக சுகாதார அமைப்பு. Archived from the original on 2012-12-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
- ↑ "Films, fun and contests for kids at annual book fair". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. January 7, 2009 இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023005247/http://articles.timesofindia.indiatimes.com/2009-01-07/chennai/28056598_1_fair-venue-bapasi-gandhi-kannadasan.
- ↑ Muthiah, S. (November 8, 2004). "60 years midst books". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து ஜனவரி 14, 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050114204139/http://www.hindu.com/mp/2004/11/08/stories/2004110800230300.htm.
- ↑ "Health Literature and Literary Services" (PDF). WHO repository. World Health Organization. p. 5. Archived from the original (PDF) on 2011-06-13. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
- ↑ "Book extravaganza kicks off". தி இந்து (Chennai, India). January 8, 2005 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 4, 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050204110434/http://www.hindu.com/2005/01/08/stories/2005010813910300.htm.
- ↑ சென்னை புத்தகக்
- ↑ 1 கோடிக்கும் அதிகமான நூல்கள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது - தினகரன்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "BAPASI release". Archived from the original on 2012-12-31. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
- ↑ "Book fair expected to draw 10 lakh visitors". The Hindu (Chennai: The Hindu). 10 January 2013. http://www.thehindu.com/news/cities/chennai/book-fair-expected-to-draw-10-lakh-visitors/article4291492.ece. பார்த்த நாள்: 10 Jan 2013.
- ↑ "Book fair ends after stupendous sales". தி இந்து (Chennai, India). 24 January 2013. http://www.thehindu.com/news/cities/chennai/book-fair-ends-after-stupendous-sales/article4337127.ece.
- ↑ "Chennai book fair from Jan. 10 to have 777 stalls". தி இந்து (Chennai, India). 9 January 2014. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-book-fair-from-jan-10-to-have-777-stalls/article5554716.ece.
- ↑ "Chennai Book Fair from Jan. 10". Chennai, India. 6 January 2018. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-book-fair-from-jan-10/article22379738.ece.
- ↑ "Chennai Book Fair from January 4". The Hindu (Chennai, India). 30 December 2018. https://www.thehindu.com/news/cities/chennai/chennai-book-fair-from-january-4/article25862138.ece.
- ↑ "Chennai: 44th book fair registers drop in footfall amid pandemic". சென்னை. 10 மார்ச் 2021. https://indianexpress.com/article/cities/chennai/chennai-44th-book-fair-drop-footfall-pandemic-7222467.
- ↑ "Chennai book fair to be held from Feb 24". The New Indian Express (Chennai: Express Publications). 31 January 2021. https://www.newindianexpress.com/cities/chennai/2021/jan/31/chennai-book-fair-to-be-held-from-feb-24-2257411.html.
- ↑ "Despite pandemic, the 44th Chennai Book Fair witnessed good turnout" (in en-IN). The Hindu. 2021-03-10. https://www.thehindu.com/news/cities/chennai/despite-pandemic-the-44th-chennai-book-fair-witnessed-good-turnout/article34031707.ece.
- ↑ "Chennai book fair from February 16" (in en-IN). The Hindu. 2022-02-04. https://www.thehindu.com/news/cities/chennai/chennai-book-fair-from-february-16/article38373347.ece.
- ↑ 45வது புத்தகக் கண்காட்சி நிறைவு. ரூ. 15 கோடிக்கு விற்பனை. தினமலர், தஞ்சாவூர் பதிப்பு. 07.03.2022. பக்கம் 3
- ↑ "சென்னை புத்தகக் கண்காட்சி 2023: எத்தனை நாட்கள்? என்னென்ன சிறப்புகள்?". https://tamil.samayam.com/latest-news/chennai-news/all-you-need-to-know-about-bapasi-chennai-book-fair-2023/articleshow/96730538.cms.
- ↑ "46வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு: இந்தாண்டு விற்பனை எப்படி?". https://tamil.news18.com/news/tamil-nadu/bapasi-chennai-46th-book-fair-ends-today-876923.html.
- ↑ "47-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடக்கம் - பபாஸி அறிவிப்பு". indianexpress. https://tamil.indianexpress.com/tamilnadu/the-47th-chennai-book-fair-will-begin-on-january-3rd-2024-2034578.
உசாத்துணைகள்[தொகு]
- "History of BAPASI". BAPASI. Archived from the original on 2009-10-03. பார்க்கப்பட்ட நாள் 2011-01-06.
வெளியிணைப்புகள்[தொகு]
- அலுவல்முறை இணையதளம் பரணிடப்பட்டது 2008-01-12 at the வந்தவழி இயந்திரம்