பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம்
பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் International Committee of the Red Cross Comité international de la Croix-Rouge | |
---|---|
துவங்கியது | 17 பெப்ரவரி 1863 |
வகை | பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்பு |
Purpose/focus | மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தலும், அவர்களுக்கு உதவி வழங்குதலும் |
தலைமையகம் | ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
ஆள்கூறுகள் | 46°13′39″N 6°08′14″E / 46.2274°N 6.1373°E |
Region served | உலகளாவியது |
தலைவர் | மிர்சானா இசுபொல்சாரிச் எகர் |
துணைத் தலைவர் | கிலெசு கார்போனியர் |
பணிப்பாளர் | இராபர்ட் மர்தீனி |
வரவுசெலவு | CHF 1576.7 மில்லியன் (2016)[1] 203.7 m for headquarters 1462.0 m for field operations |
வலைத்தளம் | www |
பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross, ICRC; பிரெஞ்சு மொழி: Comité International de la Croix-Rouge) என்பது சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு மனிதநேய அமைப்பாகும். இவ்வமைப்பு மூன்று முறை நோபல் பரிசைப் பெற்றுள்ளது. 1949 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளும், 1977 (நெறிமுறை I, நெறிமுறை II) மற்றும் 2005 இன் கூடுதல் நெறிமுறைகளும், பன்னாட்டு, உள் ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான ஆணையை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கியுள்ளன. இத்தகைய பாதிக்கப்பட்டவர்களில் போரில் காயமடைந்தவர்கள், கைதிகள், ஏதிலிகள், பொதுமக்கள் மற்றும் பிற போராளிகள் அல்லாதவர்கள் உள்ளனர்.[2]
பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், பன்னாட்டு செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம், செஞ்சிலுவை, செம்பிறை இயக்கங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு (IFRC), 191 தேசிய சங்கங்கள் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும்.[3] செஞ்சிலுவைச் சங்கம் இவ்வியக்கத்தில் உள்ள மிகப் பழமையானதும், மிகவும் மரியாதைக்குமுரிய அமைப்பாகும், அத்துடன் உலகில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றாகும். இது மூன்று அமைதிக்கான நோபல் பரிசுகளை 1917, 1944, 1963 ஆண்டுகளில் வென்றுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Annual Report 2016, Key facts and figures" (PDF).
- ↑ "Discover the ICRC". 2007. Archived from the original on 2010-04-29. பார்க்கப்பட்ட நாள் 2009-05-12. p.6.
- ↑ "National Society Directory - IFRC". பார்க்கப்பட்ட நாள் 17 April 2016.
- ↑ "Nobel Laureates Facts – Organizations". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-10-13.
வெளி இணைப்புகள்
[தொகு]- International Committee of the Red Cross (ICRC)
- Rules of war (in a nutshell)- vidéo
- Legacy Dr. Cornelio Sommaruga, President of the ICRC from 1987 to 1999, donated four hours of high-definition audiovisual life story interviews to Legacy. The ICRC audiovisual library houses copies of these interviews.
- குட்டன்பேர்க் திட்டத்தில் International Committee of the Red Cross இன் படைப்புகள்
- ஆக்கங்கள் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் இணைய ஆவணகத்தில்
- பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் on Nobelprize.org