உள்ளடக்கத்துக்குச் செல்

சுமித்ரா மகஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுமித்திரா மகஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுமித்ரா மகஜன்
இந்திய மக்களவைத் தலைவர்
பதவியில்
05 ஜூன் 2014 – 17 ஜூன் 2019
முன்னையவர்மீரா குமார்
பின்னவர்ஓம் பிர்லா
நாடாளுமன்ற உறுப்பினர்
இந்தோர்
பதவியில்
1989 – 29 மே 2019
முன்னையவர்பிரகாஷ் சந்திர சேத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஏப்ரல் 1943 (1943-04-12) (அகவை 81)
சிப்லுன், ரத்னகிரி மாவட்டம்
அரசியல் கட்சிபாஜக
துணைவர்ஜயந்த் மகஜன்
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்(s)இந்தோர், மத்தியப் பிரதேசம்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

சுமித்திரா மகஜன் (Sumitra Mahajan, 12 ஏப்ரல் 1943) பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார்.[1] 2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார்.[2] மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[3] 1989ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார்.

முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை அமைச்சராக 2002 முதல் 2004 வரை இருந்துள்ளார். மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, பெட்றோலியம் துறைகளில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.[4] இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டமும் படித்துள்ளார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு". தினகரன். 6 சூன் 2014. Archived from the original on 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
  3. http://daily.bhaskar.com/article/NAT-TOP-sumitra-mahajan-is-the-lady-who-scripted-history-got-her-name-recorded-in-guinne-4616589-PHO.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-18. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_மகஜன்&oldid=3917295" இலிருந்து மீள்விக்கப்பட்டது