சீக்கியப் படைப்பிரிவு
Appearance
(சீக்கிய படைப்பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீக்கியப் படைப்பிரிவு | |
---|---|
செயற் காலம் | 1 ஆகஸ்டு 1846 முதல் தற்போது வரை |
நாடு | இந்தியா |
கிளை | இந்தியத் தரைப்படை |
வகை | Line Infantry |
பொறுப்பு | காலாட் படை |
அளவு | 19 படையணிகள் |
குறிக்கோள்(கள்) | Nischay Kar Apni Jeet Karon (With determination, I will be triumphant). |
War Cry | போலே சோ நிகால், சத் ஸ்ரீ அகால் (Victory belong to those; Who recite the name of God with a true Heart) |
ஆண்டு விழாக்கள் | செப்டம்பர் 12, 1897 |
பதக்கம் | 21 இந்தியன் ஆர்டர் ஆப் மெரிட் 14 விக்டோரியா கிராஸ் விருதுகள் 2 பரம வீர சக்கரம் 2 அசோகச் சக்கரம் 14 மகாவீர சக்கரம் 14 கீர்த்தி சக்கரம் 64 வீரச் சக்கரம் 15 சௌரியச் சக்கரம் 75 சேனா விருதுகள் 25 விசிஷ்ட் சேவா விருதுகள் |
படைத்துறைச் சின்னங்கள் | |
Regimental Insignia | சிங்கத்துடன் கூடிய சின்னம். |
சீக்கிய படைப்பிரிவு (Sikh Regiment), பிரித்தானிய ராஜ் ஆட்சியின் போது 1 ஆகஸ்டு 1846-இல் துவக்கப்பட்டது. இந்தியத் தரைப்படையில், சீக்கிய காலாட் படை தற்போது 19 படையணிகளைக் கொண்டுள்ளது. இச்சீக்கியப் படைப்பிரிவிற்கு சீக்கியர்களை மட்டுமே தெரிவு செய்யப்படுகிறது. இந்த சீக்கியப் படைபிரிவின் தலைமையகம், ராஞ்சியிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராம்கர் பாசாறை, ராம்கர் மாவட்டம், ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்படுகிறது.
போர்களில்
[தொகு]- வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சராகர்கி எனுமிடத்தில் பிரித்தானிய இந்தியப் படைகளுக்கும், ஆப்கானிய பஷ்தூன் பழங்குடி வீரர்களுக்கும் இடையே, 12 செப்டம்பர் 1897-இல் நடந்த போரில் சீக்கியப் படைப்பிரிவினர், ஆப்கானிய வீர்ரகளை வென்றனர்.[1]
- முதலாம் உலகப் போரில், பிரான்சு நாட்டில் சீக்கியப் படைப்பிரிவு களமிறங்கி ஜெர்மனை எதிர்த்து போரிட்டது.
- 1999 கார்கில் போரின் போது, கார்கில் பகுதியின் புலி மலையில் சிறப்பாகச் செயல்பட்ட இச்சீக்கிய படைப்பிரிவின் எட்டாவது படையணிக்கு, காலட் படையின் தலைமை கட்டளை அதிகாரியால் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
விருதுகள்
[தொகு]இச்சீக்கியப் படைபிரிவு பிரித்தானியப் பேரரசின் 21 இந்தியன் ஆர்டர் ஆப் மெரிட், 14 விக்டோரியா கிராஸ் விருதுகளும், இந்திய அரசின் 2 பரம வீர சக்கரம், 2 அசோகச் சக்கரம், 14 மகாவீர சக்கரம், 14 கீர்த்தி சக்கரம், 64 வீரச் சக்கரம், 15 சௌரியச் சக்கரம், 75 சேனா விருதுகள், 25 விசிஷ்ட் சேவா விருதுகளையும் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Where Valour is a Tradition". Archived from the original on 2016-07-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-24.