உள்ளடக்கத்துக்குச் செல்

கோ. சி. மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோ.சி.மணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோ. சி. மணி
தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர்
தொகுதிகும்பகோணம்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-09-13)செப்டம்பர் 13, 1929
மேக்கிரிமங்கலம், நாகப்பட்டினம், தமிழ்நாடு
இறப்பு(2016-12-02)திசம்பர் 2, 2016
அரசியல் கட்சிதிமுக
துணைவர்(கள்)சாவித்திரி, கிருஷ்ணவேணி
பிள்ளைகள்கோ.சி.மதியழகன்,
கோ.சி.இளங்கோவன்,
புஷ்பா,
தமிழரசி,
அன்பழகன்,
தனபால்,
சின்னதுரை,
புகழேந்தி,
அறிவழகன்
வாழிடம்ஆடுதுறை

கோ. சி. மணி (Ko.Si. Mani, செப்டம்பர் 13, 1929 - திசம்பர் 2, 2016), தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகித்தவர்.

குடும்பம்

[தொகு]

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மேக்கிரிமங்கலம் என்ற கிராமத்தில் கோவிந்தசாமி, அஞ்சலை தம்பதிக்கு மகனாகப் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் சிவசுப்பிரமணியன் ஆகும். இவருக்கு சாவித்திரி, கிருஷ்ணவேணி என்ற இருமனைவிகள். இவரது மூத்த மகன் கோ.சி.மதியழகன் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றியத் தலைவராக பணியாற்றி இவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் நவம்பர் 26, 2009ஆம் ஆண்டில் காலமானார். இவரது அடுத்த மகன் கோ.சி.இளங்கோவன் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

1948இல் பண்டாரவாடை இரயில் நிலையப் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்தைத் தார்பூசி அழித்தமைக்குக் கைது செய்யப்பட்டுத் தண்டனை பெற்றவர். இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார்.

"ஓய்வறியா சிங்கம், "சின்னக் கலைஞர்" என்றெல்லாம் காவிரி டெல்டா தி.மு.க.வினரால் செல்லமாக அழைக்கப்படும் கோ.சி. மணி, நான்கு முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1968 முதல் 1980 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் தமிழகச் சட்டமேலவை உறுப்பினராக போன்ற பதவிகளை வகித்தவர். தமிழகச் சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தவர். இவர் திசம்பர் 2, 2016 ஆம் ஆண்டு இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கோ.சி. மணியின் உடல் சொந்த ஊரில் தகனம்". பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._சி._மணி&oldid=3943530" இலிருந்து மீள்விக்கப்பட்டது