கொரசோன் அக்கினோ
மரீயா கொரசோன் அக்கினோ Maria Corazon C. Aquino | |
---|---|
சனாதிபதி அக்கினோ, 1986 | |
பிலிப்பைன்சின் 11வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் பெப்ரவரி 25, 1986 – ஜூன் 30, 1992 | |
பிரதமர் | சல்வடோர் லோரல்[1] |
Vice President | சல்வடோர் லோரல் |
முன்னையவர் | பேர்டினண்ட் மார்க்கோஸ் |
பின்னவர் | பிடெல் ரமோஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பனிக்கி, டார்லாக், பிலிப்பைன்ஸ் | சனவரி 25, 1933
இறப்பு | ஆகத்து 1, 2009[2] மக்காட்டி, பிலிப்பைன்ஸ் | (அகவை 76)
இளைப்பாறுமிடம் | 3:15 |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி |
துணைவர்கள் | பெனினோ அக்கினோ |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி |
கையெழுத்து | |
மரீயா கொரசோன் "கோரி" அக்கினோ (Maria Corazon "Cory" Cojuangco Aquino, ஜனவரி 25, 1933 – ஆகஸ்ட் 1, 2009) என்பவர் பிலிப்பைன்சின் அரசியல்வாதியும், மக்களாட்சி, அமைதி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் பிலிப்பைன்சின் 11வது குடியரசுத் தலைவராக (சனாதிபதி) 1986 முதல் 1992 வரை பணியாற்றினார். அத்துடன் பிலிப்பைன்சின் முதலாவது பெண் சனாதிபதியும் ஆசிய நாடொன்றின் முதலாவது பெண் சனாதிபதியும் ஆவார்.
அக்கினோ செல்வச்செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஐக்கிய அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை. அப்போது பிலிப்பைன்சில் மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த[பெனினோ அக்கினோ என்பவரை திருமணம் புரிந்தார். பெனினோ சனாதிபதி பெர்டினண்ட் மார்ச்கோசின் சர்வாதிகார ஆட்சியைப் பலமாக எதிர்த்து வந்தவர்.
கணவர் பெனினோ நினோய் அகினோ நாடு கடத்தப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 இல் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கொரசோன் கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்க்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் மார்கோஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சிகள் அறிவித்ததை அடுத்து நாட்டில் மக்கள் புரட்சி இடம்பெற்றது. இதனையடுத்து மார்க்கோஸ் பதவியில் இருந்து விலகியதை அடுத்து கொரசோன் மக்கள் ஆதரவுடன் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.
சிலகாலம் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த கொரசோன் 76வது அகவையில் 2009 ஆகஸ்ட் 1 அதிகாலை இறந்தார்[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Abolished pursuant to Presidential Proclamation No. 3 on March 25, 1986.
- ↑ 2.0 2.1 Cory Aquino dies
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website of Corazon Aquino – maintained by the Benigno S. Aquino, Jr. Foundation
- President Cory's historic speech before the U.S. Congress
- Malacañang Museum Official Biography பரணிடப்பட்டது 2009-01-23 at the வந்தவழி இயந்திரம்
- Prayers for Tita Cory[தொடர்பிழந்த இணைப்பு]
- Prayers - prayforcory.com பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம்
- NYTimes obituary