கண் (வேற்றுமை உருபு)
Appearance
(கண், வேற்றுமை உருபு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழில் வேற்றுமை எட்டு வகைப்படும். அவற்றில் ஏழாம் வேற்றுமைப் பொருளில் உள்ள கண் இருப்பிடத்தை உணர்த்தும். இதனைத் தொல்காப்பியர் கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எனக் குறிப்பிடுகிறார். [1] [2]
பொருளோடு பொருந்தியும் சார்ந்தும் உள்ள மற்றொரு பொருளை உணர்த்துவது ஏழாம் வேற்றுமை.
- கண், கால், கடை, இடை, தலை, வாய், உள், அகம், புறம், இல் என்பன பொருளின் உறுப்பாகப் பொருளோடு பொருந்தி இருப்பவை.
- திசை, வயின், முன், சார், வலம், இடம், மேல், கீழ், புடை, முதல், பின், பாடு, அளை, தேம், உழை, வழி, உழி, உளி முதலானவை ஒரு பொருளைச் சார்ந்துள்ள மற்றொரு பொருளை உணர்த்துவன.
இந்தக் கண் என்னும் உருபு பெரும்பாலும் ஒன்றன் பண்பினை உணர்த்துவதாக வரும். [3] [4]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ ஏழாகுவதே,
`கண்' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
வினை செய் இடத்தின், நிலத்தின், காலத்தின்,
அனை வகைக் குறிப்பின் தோன்றும், அதுவே.(தொல்காப்பியம் 2-81} - ↑ கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலம் இடம் மேல்கீழ் புடைமுதல்
பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி
உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே (நன்னூல் 302) - ↑ நல்லார்கண் பட்ட வறுமை (திருக்குறள் 408)
- ↑ உண்டார்கண் அல்லது அடு நறாக், காமம் பொல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று. (திருக்குறள் 1090)