ஓதப் பூட்டல்
ஓதப் பூட்டல் (Tidal locking), அல்லது ஈர்ப்பு விசைப் பூட்டல் (gravitational locking) என்பது ஓர் வானியல்சார் பொருள் மற்றொரு வானியல்சார் பொருளைச் சுற்றிவரும்போது ஈர்ப்புச் சரிவினால் விண்வெளிப்பொருளின் ஒரு பக்கம் மட்டுமே மற்றதை நோக்கி இருக்குமாறு அமைவதாகும். இந்த விளைவு ஒத்தியங்கு சுழற்சி என்றும் குறிப்பிடப்படுகின்றது. காட்டாக, எப்போதும் நிலவின் ஒரே பக்கம் புவியை நோக்கி உள்ளது. ஓதப் பூட்டிய பொருள் தனது அச்சில் சுழலும் நேரமும் தனது கூட்டாளிப் பொருளை சுற்றுகின்ற நேரமும் ஒன்றாக உள்ளது. இதனால் ஒரு அரைக்கோளம் நிரந்தரமாக தனது கூட்டாளிப் பொருளை நோக்கி உள்ளது. பொதுவாக பெரிய விண்பொருளுடன் துணைக்கோள் ஓதப்பூட்டப்படும். பெரிய பொருளை பூட்டுவதற்கு நிறைய நேரமெடுக்கும் என்பதால் இவ்வாறு நிகழ்கிறது. போதுமான நேரம் கொடுக்கப்பட்டால் முடிவில் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று ஓதப்பூட்டப்பட்டிருக்கும். இரண்டுக்குமிடையே உள்ள திண்ம வேறுபாடும் இடைத்தொலைவும் குறைந்திருந்தால் விரைவில் நிகழும். இத்தகைய விளைவினை புளூட்டோவிற்கும் இதன் துணைக்கோளான சரோனுக்குமிடையேக் காணலாம். ஓதப் பூட்டல் நிகழ எத்தனைக் காலமெடுக்கும் என்பதை கணக்கிட இயலும்.[1]
இந்த விளைவு சில செயற்கைக் கோள்களை நிலைப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது.
ஈர்ப்புவிசையால் பூட்டப்பட்ட வானியல்சார் பொருட்களின் பட்டியல்
[தொகு]சூரியக் குடும்பம்
[தொகு]புவியுடன் பூட்டப்பட்டது
செவ்வாயுடன் பூட்டப்பட்டது
வியாழனுடன் பூட்டப்பட்டது
சனியுடன் பூட்டப்பட்டது
யுரேனசு பூட்டப்பட்டது
நெப்டியூன் பூட்டப்பட்டது
புளூட்டோ பூட்டப்பட்டது
- சரோன் (புளூட்டோவே சரோனுடன் பூட்டப்பட்டுள்ளது)
சூரியனுக்கு வெளியே
[தொகு]- டௌ பூடிசு தன் அண்மையில் சுற்றும் பெருங்கோள் டௌ பூடிசு பி உடன் பூட்டப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது..[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ S.J. Peale, Rotation histories of the natural satellites, in J.A. Burns, ed. 1977. Planetary satellites. Tucson: University of Arizona Press, pp. 87–112.
- ↑ SPACE.com - Role reversal: Planet controls a star