சு. முத்துசாமி
சு. முத்துசாமி | |
---|---|
வீட்டு வசதித்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
முதன்மை அமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
போக்குவரத்துத் துறை அமைச்சர் | |
பதவியில் 1980–1987 | |
முதன்மை அமைச்சர் | எம். ஜி. இராமச்சந்திரன் |
சுகாராரத்துறை அமைச்சர் | |
பதவியில் 1991–1996 | |
முதன்மை அமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நெடுங்குளம், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
சு. முத்துசாமி (S. Muthusamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் மற்றும், அமைச்சர் ஆவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரோடு தொகுதியில் இருந்து 1977, 1980, 1984 தேர்தல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] மேலும் பவானி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் எம். ஜி. இராமச்சந்திரனின் அமைச்சரவையில் எட்டு ஆண்டுகள் போக்குவரத்து அமைச்சராகவும், 1991 தேர்தலுக்குப்பின் ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
முத்துசாமி 2010 இல் திமுகவில் சேர்ந்தார், அவர் 2021 ஆம் ஆண்டில் ஈரோடு மேற்கு தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக தமிழக சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல், வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகர திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) அமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.[5]
பணிகள்
[தொகு]ஈரோட்டில் செயல்பட்ட அரசியல்வாதிகளில் ஈரோட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் முதன்மையானவர் முத்துசாமி ஆவார். மேலும் ஈரோட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பல செயல்படுத்தியும், கொங்கு நாட்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு போக்குவரத்து துறையை வளர்த்தவரும் ஆவார். முத்துசாமி பல புதிய திட்டங்களை கொங்கு நாட்டுக்கு கொண்டுவந்தவர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு பேருந்து நிலையம், IRTT தொழில்நுட்பக் கல்லூரி (IRTT), ஈரோடு, ஐ. ஆர். டி.டி மருத்துவ கல்லூரி, பவானி-ஈரோடு சாலையில் புதிய பாலம் போன்றவை இவரால் பெற்றவையாகும். முத்துசாமி 2010 ல் திமுகவில் இணைந்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த இவர்[6] தற்போது, திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.[7]
தேர்தல்கள் போட்டியிட்ட மற்றும் முடிவுகள்
[தொகு]தேர்தல்கள் | தொகுதி | முடிவு |
---|---|---|
1977 | ஈரோடு தொகுதி | வெற்றி |
1980 | ஈரோடு தொகுதி | வெற்றி |
1984 | ஈரோடு தொகுதி | வெற்றி |
1991 | பவானி தொகுதி | வெற்றி |
2011 | ஈரோடு கிழக்கு தொகுதி | தோல்வி |
2016 | ஈரோடு கிழக்கு தொகுதி | தோல்வி |
2021 | ஈரோடு மேற்கு தொகுதி | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ Scam Count
- ↑ கி.ஜெயப்பிரகாஷ் (14 ஆகத்து 2018). "போக்குவரத்து துறையை குழந்தைபோல் வளர்த்து கண்ணின் இமைபோல் காத்தவர் கருணாநிதி: முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசாமி பெருமிதம்". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2018.