உள்ளடக்கத்துக்குச் செல்

சி. தண்டாயுதபாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். தண்டாயுதபாணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சி. தண்டாயுதபாணி
S. Thandayuthapani
மாகாணசபை உறுப்பினர்
இலங்கை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 மார்ச் 2015
எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண சபை
பதவியில்
28 செப்டம்பர் 2012 – 3 மார்ச் 2015
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
(திருகோணமலை)
பதவியில் உள்ளார்
பதவியில்
2012
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2014
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில்ஆசிரியர்
இனம்இலங்கைத் தமிழர்

சிங்காரவேலு தண்டாயுதபாணி (Singaravelu Thandayuthapani, பிறப்பு: 7 ஆகத்து 1950) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராகப் பதவியில் உள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

தண்டாயுதபாணி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி கற்றவர்.[1] பொருளியலில் பட்டம் பெற்ற பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்றார்.[1]

பணி

[தொகு]

தண்டாயுதபாணி பாடசாலை அதிபராகவிருந்து பின்னர் கல்வித்துறைப் பணிப்பாளரானார்.[1][2] கிழக்கு மாகாணத்துக்கான காணி, காணி அபிவிருத்தி, கல்வி, கலாசார அமைச்சின் செயலாளராக 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1]

அரசியலில்

[தொகு]

2012 இல் இடம்பெற்ற மாகாணசபைக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2012 செப்டம்பர் 28 இல் இவரை மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது.[1][4] தண்டாயுதபாணியும் அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய 10 கூட்டமைப்பு உறுப்பினர்களும் 2012 செப்டம்பர் 28 இல் கூட்டமைப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுபினருமான இரா. சம்பந்தன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.[1]

சி. தண்டாயுதபாணி 2014 ஆகத்து 28 அன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

2015 அரசுத்தலைவர் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் அனைத்துக் கட்சி தேசிய மாகாண அரசு உருவாக்கப்பட்டது.[6][7][8] தண்டாயுதபாணி கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சராக ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் 2015 மார்ச் 3 அன்று பதவியேற்றார்.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Eastern Province Chief Minister assumes duties". சண்டே டைம்சு. 30 செப்டம்பர் 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html. 
  2. Gurunathan (15 நவம்பர் 2009). 24.html "US Ambassador declares open schools rebuilt by USAID". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/091115/News/nws 24.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. 2012/Candidates/Trinco FREV.pdf "Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Satyapalan, Franklin R. (30 செப்டம்பர் 2012). cat=article-details&page=article-details&code title=62691 "Inaugural session of Eastern PC tomorrow". ஐலண்டு. http://www.island.lk/index.php?page cat=article-details&page=article-details&code title=62691. 
  5. வீரகேசரி, ஆகத்து 29, 2014
  6. Somarathna, Rasika (5 மார்ச் 2015). "'EPC power sharing similar to experimental unity govt'". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2015-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402123328/http://www.dailynews.lk/?q=local%2Fepc-power-sharing-similar-experimental-unity-govt. 
  7. Balachandran, P. K. (17 பெப்ரவரி 2015). "For The First Time in History, TNA Will Be in Eastern Province’ Board of Ministers". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/For-The-First-Time-in-History-TNA-Will-Be-in-Eastern-Province%E2%80%99-Board-of-Ministers/2015/02/17/article2673341.ece. 
  8. Thambiah, Mirudhula (24 பெப்ரவரி 2015). "SLMC - TNA marriage in the East". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227103624/http://www.ceylontoday.lk/89-85616-news-detail-slmc-tna-marriage-in-the-east.html. 
  9. Panchalingam, Ariram (3 மார்ச் 2015). "New Eastern Provincial Council Ministers sworn in". நியூஸ் பெர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 2017-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170613230617/http://newsfirst.lk/english/2015/03/just-in-new-eastern-provincial-ministers-sworn-in/81189. 
  10. "Eastern PC Ministers sworn in". Hiru News. 3 மார்ச் 2015. http://www.hirunews.lk/104692/eastern-pc-ministers-sworn-in. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._தண்டாயுதபாணி&oldid=3537839" இலிருந்து மீள்விக்கப்பட்டது