உள்ளடக்கத்துக்குச் செல்

எல் காஸ்ட்டீயோ பிரமிட்

ஆள்கூறுகள்: 20°40′58.4″N 88°34′7.0″W / 20.682889°N 88.568611°W / 20.682889; -88.568611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எல் காஸ்ட்டிலோ பிரமிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குக்குல்கான் பிரமிது
El Castillo, Chichen Itza
பிரமிதின் வட-மேற்குப் பகுதி
பண்டைய பெயர்குக்குல்கான்
கட்டப்பட்டதுகிபி 8-12 ஆம் நூற்றாண்டு
வகைஇடை அமெரிக்கப் படிக்கட்டுப் பிரமிது
பொருள்சுண்ணக்கல்
உயரம்24 மீ, கோவில் தவிர்த்து
30மீ, கோவிலுடன்
6மீ, கோவில் மட்டும்
தளம்55.3 மீ
சரிவு37°29'44" (விளிம்புகள்)
47º19'50" (பக்கங்கள்)
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அமைவிடம்தினூம் மாநகராட்சி, மெக்சிக்கோ
பகுதிசிச்சென் இட்சா
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (i), (ii), (iii)
உசாத்துணை483
பதிவு1988 (12-ஆம் அமர்வு)
ஆள்கூறுகள்20°40′58.4″N 88°34′7.0″W / 20.682889°N 88.568611°W / 20.682889; -88.568611
எல் காஸ்ட்டீயோ பிரமிட் is located in மெக்சிக்கோ
எல் காஸ்ட்டீயோ பிரமிட்

முப்பரிமாண மாதிரி (தொடர்புக்கு அழுத்தவும்)

எல் காஸ்ட்டீயோ (El Castillo) என அழைக்கப்படும் குக்குல்கான் பிரமிது (Kukulcan Pyramid) அல்லது குக்குல்கான் கோவில் (Temple of Kukulcan) என்பது மெக்சிக்கோவின் யுகட்டான் மாநிலத்தில் உள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இடை அமெரிக்கப் படிக்கட்டுப் பிரமிது ஆகும். எல் காஸ்ட்டீயோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் எசுப்பானிய மொழிச் சொல்லாகும். கோவில் கட்டிடம் தொல்பொருள் ஆய்வாளர்களால் சிச்சென் இட்சா கட்டமைப்பு 5பி18 (Structure 5B18) என முறையாக நியமிக்கப்பட்டுள்ளது.

கிபி 8-12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், முன்-கொலம்பியக் காலத்திற்கு முந்தைய மாயா நாகரிகத்தால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், குக்குல்கான் என்ற கடவுளுக்கு ஒரு கோவிலாக செயல்பட்டது. குக்குல்கான் யுக்காடெக் மாயா இறகுகள் கொண்ட பாம்பு தெய்வம், ஆசுடெக்குகள் மற்றும் பிற மத்திய மெக்சிக்க கலாச்சாரங்களுக்கு தெரிந்த கிட்சால்குவாடலியுடன் நெருங்கிய தொடர்புடையது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதே நோக்கத்திற்காக கட்டப்பட்ட ஒரு உட்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

கோவிலுக்கு நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் கொண்ட சதுரமான மொட்டை மாடிகள் உள்ளன. பாம்புகளின் சிற்பங்கள் வடக்குக் கைப்பிடிச் சுவர்களின் ஓரங்களில் ஓடுகின்றன. வசந்த கால மற்றும் இலையுதிர்கால சம இரவுக் காலங்களின் போது, ​​பிற்பகுதிச் சூரியன் கோவிலின் வடமேற்கு மூலையைத் தாக்கி, வடமேற்குக் கைப்பிடிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான முக்கோண நிழல்களை வீசுகிறது, இதன்போது இறகுகள் கொண்ட பாம்பு கோயிலின் கீழே "தவழும்" மாயையை உருவாக்குகிறது. தற்காலப் பார்வையாளர்களுக்கு, இந்த நிகழ்வு மிகவும் பிரபலமாக உள்ளது. வசந்த சமவிரவுக் காலங்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை கண்டுகளிக்கின்றனர். ஆனால் இந்த நிகழ்வு ஒரு நோக்கத்துடன் கூடிய வடிவமைப்பின் விளைவாக இருந்ததா என்பது தெரியவில்லை, ஏனெனில் ஒளி மற்றும் நிழல் விளைவை சமவிரவுக்கு அருகில் பல வாரங்கள் பெரிய மாற்றங்கள் இல்லாமல் காணலாம்.[1]

1998 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள், மனிதர்கள் அதைச் சுற்றிக் கைதட்டும்போது குவெட்சால் பறவையின் ஒலியைப் பிரதிபலிப்பதாகக் கூறுகிறது. இந்த நிகழ்வு தற்செயலானது அல்ல என்று ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர், இந்தக் கோவிலைக் கட்டியவர்கள் இந்தக் கட்டமைப்பின் எதிரொலி விளைவால் தெய்வீக வெகுமதியை உணர்ந்தனர். தொழில்நுட்ப ரீதியாக, கைதட்டல் சத்தம் கோவிலின் உயரமான மற்றும் குறுகலான சுண்ணாம்புப் படிகளுக்கு எதிராகச் சிதறி, அதிர்வெண்ணில் குறையும் ஒரு குற்றொலி போன்ற தொனியை உருவாக்குகிறது.[2][3]

கோவிலின் நான்கு பக்கங்களிலும் தோராயமாக 91 படிகள் உள்ளன, அவை ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, இறுதிப் "படியாக" மேலே உள்ள கோவில் மேடையையும் சேர்த்து, மொத்தம் 365 படிகளை உருவாக்கலாம் (கோயிலின் தென்புறத்தில் உள்ள படிகள் அரிப்புற்றதாகக் காணப்படுகின்றன). அந்த எண்ணிக்கை மாயா ஹாப்' ஆண்டின் நாட்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும், அத்துடன் இது மாயா நாகரீக சடங்குகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.[4]

இந்த அமைப்பு 24 மீ (79 அடி) உயரம் கொண்டது, உச்சியில் உள்ள கோயிலுக்கு கூடுதலாக 6 மீ (20 அடி) உள்ளது. சதுர அடித்தளம் 55.3 மீ (181 அடி) குறுக்கே உள்ளது.

பிரமிதின் அமைப்பு

[தொகு]

இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிடுகளாக உருவாக்குவது இடை அமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிடுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிடின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிடில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குக்குல்கான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் சந்திர கால அட்டவணையான புதிய பிரமிடை உள்ளடக்கிய சூரிய கால அட்டவணையாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது.

மறுகட்டமைப்பு

[தொகு]

இதன் கட்டமைப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது பாழடைந்த நிலையிலிருந்து அறைகுறையாக மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இதன் இரு பக்கங்கள் வாஷிங்டன் நகரிலுள்ள கார்னெகி கல்வி நிறுவனத்தின் 17 ஆண்டுகால பெருமுயற்சியால் ஏறத்தாழ முழுமையுமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது. நன்கறிந்த மாயன் நாகரீக நிபுணர் சில்வேனஸ் ஜி. மார்லே என்பவரது தலைமையில் 1920களின் கடைக்காலத்தில் தொடங்கிய இந்த மறுகட்டுமானப்பணி 1940 ஆம் ஆண்டு நிறைவேறியது. இந்த கோயில் மெக்சிகோவின் புகழ்வாய்ந்த சின்னமாக மாறியது. மற்ற இரு பக்கங்களை மெக்சிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் புனர்நிர்மாணம் செய்தனர்.

பிரமிடின் வெளிப்பகுதி

[தொகு]

நான்கு பக்கதிலும் படிக்கட்டுகளை உடைய இக்கட்டிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டும் 91 படிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மேல்தளத்தையும் ஒரு படியாகக் கணக்கிட்டால் மொத்தம் 365 படிகள். ஒவ்வொரு படியும் ஹாப் என்னும் மாயன் நாகரீக கால அட்டவணையின் ஒரு நாளை குறிக்கிறது. இந்த கட்டிடத்தின் உயரம் மேல்தளம் வரை 24 மீட்டர், கூடுதலாக மேலுள்ள கோயில் ஒரு 6 மீட்டர். சதுரமான கீழ்த்தளம் குறுக்கில் 55.3 மீட்டராக உள்ளது.

பிரமிட்டின் வெளிமுனையிலுள்ள பெரிய படிகள் ஒன்பதும் சூரியக் குடும்பத்தின் ஒன்பது கோள்களை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

ஸ்பெயினின் யுகாட்டன் ஆக்கிரமிப்புக் காலமான 1530-களில் ஆக்கிரமிப்பு அரசர் இளைய ஃப்ரான்சிஸ்கோ-டி-மான்டியோ இந்த கட்டிடத்தின் மேல் பீரங்கி பொருத்தி கோட்டையாக பயன்படுத்தினார்.

இன்று 'எல் காஸ்ட்டிலோ' மிகப்புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோவின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று.

காட்சியகம்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Šprajc, Ivan; Sánchez Nava, Pedro Francisco (2018). "El Sol en Chichén Itzá y Dzibilchaltún: la supuesta importancia de los equinoccios en Mesoamérica". Arqueología Mexicana XXV (149): 26–31. 
  2. Jennie Cohen, Did the Maya Build Chirping Pyramids?, History.com, 17 November 2010
  3. David Lubman, Archaeological acoustic study of chirped echo from the Mayan temple at Chichen Itza, in the Yucatan Region of Mexico ... Is this the world's oldest known sound recording?, Acoustics.org, 13 October 1998
  4. Milbrath 1989: 66

உசாத்துணைகள்

[தொகு]
  • Coe, Michael D. (1999). The Maya. Ancient peoples and places series (6th, fully revised and expanded ed.). London and New York: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-28066-5. இணையக் கணினி நூலக மைய எண் 59432778.
  • Milbrath, Susan (1999). Star Gods of the Maya: Astronomy in Art, Folklore, and Calendars. The Linda Schele series in Maya and pre-Columbian studies. Austin: University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-75225-3. இணையக் கணினி நூலக மைய எண் 40848420.
  • Šprajc, Ivan, and Pedro Francisco Sánchez Nava (2013). Astronomía en la arquitectura de Chichén Itzá: una reevaluación. Estudios de Cultura Maya XLI: p. 31–60.
  • Willard, T.A. (1941). Kukulcan, the Bearded Conqueror : New Mayan Discoveries. Hollywood, CA: Murray and Gee. இணையக் கணினி நூலக மைய எண் 3491500.
  • Gray, Richard. "Sacred Sinkhole Discovered 1,000-year-old-Mayan-Temple-Eventually-Destroy-Pyramid." Science & tech August 17, 2015. Dailymail. Web. August 17, 2015.
  • Justice, Adam. "Scientists discover sacred sinkhole cave under Chichen Itza pyramid." Science (2015). Ibtimes. Web. August 14, 2015.
  • Juárez-Rodríguez, O., Argote-Espino D., Santos-Ramírez, M., & López-García, P. (2017). Portable XRF analysis for the identification of raw materials of the Red Jaguar sculpture in Chichén Itzá, Mexico. Quaternary International, Quaternary International.
  • Tejero-Andrade, A., Argote-Espino, D., Cifuentes-Nava, G., Hernández-Quintero, E., Chávez, R.E., & García-Serrano, A. (2018). ‘Illuminating’ the interior of Kukulkan's Pyramid, Chichén Itzá, Mexico, by means of a non-conventional ERT geophysical survey. Journal of Archaeological Science, 90, 1-11.
  • Wren, L., Kristan-Graham, C., Nygard, T., & Spencer, K. R. (2018). Landscapes of the Itza : Archaeology and art history at Chichen Itza and neighboring sites. Gainesville: University Press of Florida.

20°40′58″N 88°34′07″W / 20.6828°N 88.5686°W / 20.6828; -88.5686

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்_காஸ்ட்டீயோ_பிரமிட்&oldid=4098065" இலிருந்து மீள்விக்கப்பட்டது