உள்ளடக்கத்துக்குச் செல்

உந்துப் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உந்துப்பொறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆத்திரேலியாவில் இயக்கப்பட்ட தொடர்வண்டி உந்துப் பொறிகள்.
நீராவியால் இயங்கிய ஆத்திரேலிய விக்டோரியன் இரயில்வேயின் உந்துப்பொறி
2006இல் சுவீடனில் இயங்கிய மின் உந்துப்பொறி.

உந்துப் பொறி (locomotive) அல்லது தொடருந்துப் பொறி ஒரு தொடர்வண்டிக்கு நகரும் ஆற்றலை வழங்குகின்ற ஓர் உந்து ஆகும். ஆங்கிலச் சொல்லான லோகோமோடிவ் என்பது இலத்தீன மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.[1] 19ஆம் நூற்றாண்டில் இயக்கப்பட்ட நிலைத்த நீராவி பொறிகளிலிருந்து நகரும் தன்மையுடைய இத்தகைய பொறிகளை வேறுபடுத்த பயன்படுத்தப்பட்டது.

உந்துப் பொறிக்கு தானாகவே ஏற்றிச் செல்லும் சுமை எதுவும் கிடையாது. இதன் ஒரே செயல்பாடு இருப்புப் பாதைகளில் தொடர்வண்டிகளை இழுத்துச் செல்வதாகும். மாறாக சில இருப்புப் பாதை வண்டிகள் சுமைகளை ஏற்றுவதோடு தங்களை தாங்களே இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன. இவை பொதுவாக உந்துப் பொறிகள் என அழைக்கப்படுவதில்லை; பல்லுறுப்பு தொடர்வண்டி, இயக்கி வண்டி அல்லது தண்டு தானுந்து எனப்படுகின்றன. இவை மாநகரப் போக்குவரத்திற்கும் அலுவலர் ஆய்வுகளுக்கும் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. சரக்குகளை இவை பொதுவாக ஏற்றிச்செல்வதில்லை.

வழமையாக, உந்துப் பொறிகள் தொடர்வண்டியை முன்னாலிருந்து இழுக்கின்றன. கூடுதல் பளுவைச் சுமக்க சரக்கத் தொடர்வண்டிகளில் இரண்டு உந்துப் பொறிகள் இணைக்கப்பட்டு முன்னால் உள்ளது இழுக்க பின்னால் உள்ளது தள்ள இயக்கப்படுகிறது. இவை இழு-தள்ளு வண்டிகள் எனப்படுகிறன.

காட்சிக் கூடம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Locomotive". (etymology). Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்துப்_பொறி&oldid=3711443" இலிருந்து மீள்விக்கப்பட்டது