சோலார் பேருந்து நிலையம், ஈரோடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோலார் பேருந்து நிலையம் ஆனது ஈரோடு மாநகரில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பேருந்து நிலையம் ஆகும்.
ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் உள்ள வெள்ளிவிழா மத்திய பேருந்து நிலையத்தின் நெரிசலையும் நகரின் நெரிசலையும் குறைக்கும் பொருட்டு இரண்டு புதிய புறநகர் பேருந்து நிலையங்களை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஈரோடு மாநகரின் தென்கிழக்கில் கரூர் பிரதான சாலையை ஒட்டி தெற்கு வெளிவட்ட சாலை அருகில் சோலார் பகுதியில் ஒன்றும் மற்றும் நகரின் வடமேற்கு பகுதியில் சத்தி சாலையை ஒட்டியுள்ள பெரியசேமூர் குளம் பகுதியில் ஒரு பேருந்து நிலையமும் உருவாக்கப்பட்டு வருகிறது.
அமைவிடம்
[தொகு]சோலார் பேருந்து நிலையமானது மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 24 ஏக்கர் பரப்பளவு இடத்தில் சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரே நேரத்தில் 65 புறநகர் பேருந்துகள் நிறுத்தி கையாளும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இது தென் மற்றும் மத்திய தமிழகம் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை கையாளும் விதத்தில் அமைகிறது.
நிரந்தர கட்டுமானங்கள் நிறைவடையும் வரை பயணிகள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஈரோடு மத்திய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும், ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மேலும் பார்க்க