கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயில்
Appearance
(ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈரோடு கோட்டை ஸ்ரீ கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில்[1] | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°20′32″N 77°43′27″E / 11.342337°N 77.724078°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | மூவேந்தர் சதுர்வேதிமங்கலம், கஸ்தூரி ரங்கபுரம் |
பெயர்: | ஈரோடு கோட்டை ஸ்ரீ கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | திருவரங்கம், ஈரோடு கோட்டைப் பகுதி |
மாவட்டம்: | ஈரோடு |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அரங்கநாதர் (மூவேந்தர் சதுர்வேதிமங்கலம் பள்ளி கொண்ட பெருமாள்) |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | ஏராளம் உண்டு |
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில் ஈரோட்டில் உள்ள வைணவத் திருத்தலம். கொங்கு நாட்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சரித்திரப் பெருமை கொண்ட திருக்கோயில்.[2]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°20'32.4"N, 77°43'26.7"E (அதாவது, 11.342337°N, 77.724078°E) ஆகும்.
தலவரலாறு
[தொகு]துர்வாச முனிவர் தாம் திருமாலைக் கோபத்தில் அவமதித்த பிழைக்காக வருந்தி கடுந்தவமிருந்து மீண்ட பொழுது ’ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் வடிவில் அமைத்த திருக்கோயில்.
ஸ்ரீ மகாலட்சுமி
[தொகு]பிருகு மகரிஷியின் பெண்ணான திருமகள் இத்திருத்தலத்தில் தலவிருட்சமாக வில்வமர வடிவில் உள்ளார்.
ஆஞ்சநேயர்
[தொகு]இத்திருத்தல ஆஞ்சநேயர் அளவற்ற சக்தி வாய்ந்தவராகக் குறிப்பிடப்படுகின்றார்.
கல்வெட்டுகள்
[தொகு]- இத்தலப்பெருமானுக்கு சேவை செய்யும் பெரியோர்களை ’ஸ்ரீவைஷ்ணவ கண்காணி செய்வார்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
- திருவேங்கடமுடையான் சந்நிதியின் நுழைவாயில் அமைத்தவர் தாயஞ்சாத்தன் எனும் செய்தி கி.பி.1265 ஆம் ஆண்டின் கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது. (மதுரை வீரபாண்டியன் காலம்)
- கல்வெட்டுகளில் ஈரோடு மூவேந்தர் சதுர்வேதிமங்கலம் என்றும் கஸ்தூரி ரங்கபுரம் என்றும் முன்பு வழங்கப்பட்டது தெரியவருகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ குமுதம் ஜோதிடம்; 7.12.2012; மாமுனிவரின் கோபத்தைத் தணித்த மாதவனின் கருணை! கட்டுரை; பக்கம் 1,2,3
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-28. பார்க்கப்பட்ட நாள் 2014-12-12.