உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் மனித உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக பன்னாட்டு மன்னிப்பு அவை [1] போன்ற உலகின் முக்கிய மனித உரிமைகள் நிறுவனங்களும், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களம் [2] ஐரோப்பிய ஒன்றியம் [3] போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கவலை வெளியிட்டுள்ளன. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. அமெரிக்கா இலன்கையில் நடந்த உரிமைமீறலுக்கு உள்நாட்டு விசாரணையை ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளது.[4] 2003 இல் இடம் பெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளதாக பன்னாட்டு மன்னிப்பு அவை அறிகை வெளியிட்டது.[5] ஆயினும் 2007ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையில் அதிகரிக்கும் அரசியற் கொலைகள், குழந்தை ஆட்சேர்ப்பு, ஆட்கடத்தல்கள், கிழக்கின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும் பெண்களுக் கெதிரான வன்முறகள் தூக்குத்தண்டனை, இலங்கை காவல் துறையினர் கட்டுப்பாட்டில் இருந்த கைதிகள் தாக்கப்பட்டமைப் போன்ற மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் இவ்வறிக்கை பல மீறல் சம்பவங்கள் இடம்பெற்றப் போதிலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமிடையான சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்ததாக குறிப்பிடுகிறது[6].

இலங்கையில் பேச்சுச் சுதந்திரம்

[தொகு]

பேச்சுச் சுதந்திரம் என்பது ஒரு நபர் தாம் விரும்பும் மொழியில் தமது எண்ணத்தை அல்லது எண்ணக்கருவை சுதந்திரமாக வாய்வழி பேச்சின் ஊடாக வெளிப்படுத்துதல் அல்லது உரையாடுதல் ஆகும். அதாவது தனது கருத்தை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி, எவ்வித இடையூறும் இன்றி, எவ்வித அச்சுறுத்தலும் இன்றி எந்த இடத்திலும் பேசுவதற்கான சுதந்திரமாகும். இது அடிப்படை மனிதவுரிமைகளில் ஒன்றாகும்.

இந்திய இராணுவக் கால பேச்சுச் சுதந்திர அச்சுறுத்தல்

[தொகு]

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளுக்கு வந்திருந்த காலங்களில் “புலி, தமிழீழம், எல்.டி.டி.ஈ” போன்ற சொற்கள் மக்களின் வாய்வழி பேச்சின் போது பயன் படுத்துவதனை தவிர்த்தே வந்தனர். அவ்வாறு பேசியோர் காரணம் ஆராயப்படாமல் அச்சுறுத்தல் சித்திரவதைகளுக்கு உற்படுதல் போன்ற காரணங்களால் இது போன்ற சொற்களுக்கான பேச்சு சுதந்திரம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் புலிகளை “பெருசு” என்றும் மாற்று இயக்கங்களை “சிறுசு” என்றும் பேச்சில் பயன்படுத்திக்கொண்டனர்.

இலங்கை வட கிழக்கு பகுதிகளின் பேச்சுச் சுதந்திர அச்சுறுத்தல்

[தொகு]

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் “எல்.டி.டி.ஈ, புலி, தமிழீழம்” மற்றும் போர் கருவிகள் தொடர்பானச் சொற்கள் யாருடையவாவது பேச்சின் போது பயன்படுவது இராணுவத்தினரிற்கு காதுகளுக்கு கேட்குமானால், பேசியவர் மேலதிக விசாரணை மற்றும் சித்திரவதைகளுக்கு ஆளாகும் அச்சுறுத்தல் நிலவுகின்றது.

இலங்கையில் தமிழ் பேசுவதற்கான அச்சுறுத்தல்

[தொகு]

இலங்கையில் குறிப்பாக சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் மொழியில் சுதந்திரமாக பேசுவதற்கான அச்சுறுத்தல் இருந்த வண்ணமே உள்ளது. தமிழ் மொழியில் பேசும் போது, தமிழர்களை சிங்கள பெரும்பான்மை இனத்தவர்கள் “தெமலா” என்றும் “தெமலு” என்றும் வேறு சில இழிச்சொற்களை பயன்படுத்தி அவமானப் படுத்தும் நிகழ்வுகள் நிறைய உள்ளன. குறிப்பாக சிங்களவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் பேருந்துக்களில் உட்பட தமிழர்கள் சுதந்திரமாக தமிழ் மொழியில் பேசுவதைத் தவிர்த்து அல்லது குறைத்து வருவோர் அதிகம். சிலர் அச்சத்தின் காரணமாக மெல்லியக் குரலிலேயே பேசிக்கொள்வதனையும் அவதானிக்கலாம்.

மலையக தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரம்

[தொகு]

இலங்கை மலையகம் வாழ் தமிழ் மக்கள் தமது தமிழ் மொழி உரையாடல்களை பொது இடங்களில் தவிர்த்து வருவதனை அவதானிக்கலாம். அநேகமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழும் மலையகத் தமிழர்கள் தமிழில் பேசுவதை சிங்களவர் இழிவு படுத்துவதால் பொது இடங்களில் தமிழ் மொழிக்கு பதில் சிங்கள மொழியில் பேசிக்கொள்வதனையும் பல இடங்களில் அவதானிக்கலாம். பல மலையகத் தமிழர்கள் தமது குழந்தைகளுக்கு சிங்களப் பெயர்களை இடுதல், சிங்கள வழிக்கல்வியில் கற்பித்தல் போன்றவைகளும் பேச்சு சுதந்திர அச்சுறுத்தல் இழிவுப்படுத்தல் வாயிலான ஒரு காரணமாகவும் பார்க்கலாம்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்

[தொகு]

இலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. 1983–2009 காலகட்டத்தில் நடந்த போரில் இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என பல மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. 1987–90 காலகட்டத்தில் இலங்கையில் செயல்பட்ட இந்திய அமைதி காக்கும் படை மீதும் இத்தகு குற்றச்சாட்டுகள் உள்ளன. இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 20,000 வரையான பொது மக்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசாலேயே கொல்லப்பட்டனர் என்றும், முழு விசாரணை தேவை என்றும் பன்னாட்டு மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.[7] 2011 ஏப்ரலில் வெளியான இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை போரின் இறுதி கட்டத்தில் இரு தரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசு - விடுதலைப் புலிகளிடையே நடந்த போரைத் தவிர இலங்கையின் தெற்குப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய கிளர்ச்சிகளின் போதும் பல மனித இனத்திற்கெதிரான குற்றங்கள் நிகழ்ந்தன என குற்றச்சாட்டுகள் உள்ளன.

இலங்கையில் தமிழ் அகதிகள் தடுத்துவைப்பு (2008–2012)

[தொகு]

2008, 2009 காலப் பகுதி ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின் போது 3,50,000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் இலங்கைத் தரைப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கம்பிகளால் அடைக்கப்பட்டத் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த முகாம்களுக்கு ஊடகங்களோ, சமூக சேவை அமைப்புகளோ செல்லமுடியாமல் தடுக்கப்பட்டது. இது இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நடந்தாலும், பாதுகாப்புக் காரணங்கள் காட்டி அரசினால் நியாயப்படுத்தப்பட்டது. இங்கு சித்திரவதை, பாலியல் வன்முறை எனப் பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்தாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த முகாம்களின் சூழ்நிலைமைகளும் மிக மோசமானவையாக இருந்தன.

அனைத்துல சமூகத்தின் எதிர்ப்பு, 2008

[தொகு]

இலங்கையில் அதீதமாக இடம்பெற்றுவருவதாக கருதப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நாடுகள் இலங்கை அரசு மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

அமெரிக்க நிலைப்பாடு

[தொகு]

ஐக்கிய அமெரிக்கா, இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை முற்றிலும் நிறுத்தியுள்ளது. அத்தோடு அமெரிக்க நிறுவனங்கள் இலங்கை அரசுக்கு இராணுவ தளபாடங்களை விற்பதற்கும் தடை விதித்துள்ளது. மேலும், இலரி கிளின்டன், பராக் ஒபாமா போன்ற முன்னணி அரசியல்வாதிகள் இலங்கை இனப்பிரச்சினையை வெறும் பயங்கரவாத பிரச்சினையாக அணுகுவதை தவிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஐக்கிய இராச்சிய நிலைப்பாடு

[தொகு]

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல தரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அந்த ஐக்கிய இராச்சியம் மேற்கொள்ளும் பல தரப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் விபரிக்கப்பட்டன.

  • debt relief முழுமையாக கிடைக்காமல் தடை
  • போர் தீர்வு அல்ல என்பதை இலங்கை அரசுக்கு தெளிவாக்கல்.
  • aid அரசுக்கு ஆதரவு தராமல், அனைத்து மக்களுக்கு சென்றடவதை உறுதி செய்தல்.
  • நோர்வேக்கு உதவுதல்
  • ஐநா மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுமதிக்க கோருதல்
  • தமிழர் தரப்புடன் பேசுவதற்கு அழுத்தம் தருதல்
  • புலிகளின் தடையை நீக்குவது தொடர்பான விவாதம்

கனேடிய நிலைப்பாடு

[தொகு]

கனேடிய அரசு பல தரப்பட்ட வழிகளில் (எ.கா: Forum of Federations, Canadian International Development Agency, Foreign Affairs and International Trade Canada) இலங்கையில் அரசியல் தீர்க்வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. குறிப்பாக நோர்வேயின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது.

தரவுகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Amnesty International". Archived from the original on 2005-12-13. பார்க்கப்பட்ட நாள் 2005-12-13.
  2. http://www.state.gov/g/drl/rls/hrrpt/2000/sa/index.cfm?docid=704
  3. http://ec.europa.eu/external_relations/sri_lanka/intro/index.htm#hr
  4. உரிமை மீறல்கள்: இலங்கையின் உள்நாட்டு விசாரணையை ஆதரிப்போம் - அமெரிக்கா அறிவிப்பால் பரபரப்பு[தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து தமிழ் 30 செப்டம்பர் 2015
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-06-04. பார்க்கப்பட்ட நாள் 2003-06-04.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-02-11.
  7. "Rights Group Asks UN to Speak Out on Sri Lanka 'Bloodbath'". Archived from the original on 2009-05-31. பார்க்கப்பட்ட நாள் 2009-05-31.

வெளி இணைப்புகள்

[தொகு]