உள்ளடக்கத்துக்குச் செல்

இர்பான் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இர்ஃபான் கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இர்பான் கான்
Irfan Khan
2015 ஆம் ஆண்டில் இர்பான் கான்
பிறப்புசகாப்சாத் இர்பான் அலி கான்[1]
(1967-01-07)7 சனவரி 1967
செய்ப்பூர், இராசத்தான், இந்தியா
இறப்பு29 ஏப்ரல் 2020(2020-04-29) (அகவை 53)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
பெருங்குடல் தொற்று
படித்த கல்வி நிறுவனங்கள்நாடகத் தேசியப் பள்ளி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–2020
வாழ்க்கைத்
துணை
சுதப்பா சிக்தர் (தி. 1995)
பிள்ளைகள்2
புகழ்ப்பட்டம்பத்மசிறீ (2011)

இர்பான் கான் (Irrfan Khan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகராவார். 1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இர்பான் அலி கான் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இந்தி மொழித் திரைப்படங்களில் மட்டுமல்லாது பிரித்தானிய, அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். உலகத் திரைப்படத்துறையினரால் சிறந்த நடிகர்களில் ஒருவராகப் புகழப்படுகிறார்.[2][3] 30 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். தேசிய திரைப்பட விருது, ஆசியத் திரைப்பட விருது, நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்படப் பல விருதுகளை வென்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[4] 2021 ஆம் ஆண்டில், இவருக்கு மரணத்திற்குப் பின் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சலாம் பாம்பே என்ற திரைப்படத்தில் (1988) ஒரு சிறிய வேடத்தில் இர்பான் கான் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகள் இவரின் போராட்டங்கள் தொடர்ந்தன. சந்தீப்பு சட்டோபாத்யாய் இயக்கிய ரெக்கனைசன்சு (1990) போன்ற இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர் படங்களில் இவர் நடித்தார்.[5][6] பிரித்தானியத் திரைப்படமான தி வாரியர் (2001) திரைப்படத்தில் நடித்த பிறகு, ஆசில் (2003) மற்றும் மக்பூல் (2004) ஆகிய நாடகங்களில் நடித்ததன் மூலமும் இவர் ஒரு திருப்புமுனையைப் பெற்றார். இர்பான் கான் தி நேம்சேக் (2006) என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். இதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றார். லைஃப் இன் எ... மெட்ரோ (2007), பான் சிங் தோமர் (2011) ஆகிய திரைப்படங்களில் நடித்தற்காக இவர் பரிந்துரைக்கப்பட்டார். இவற்றில் பான் சிங் தோமர் கதாபாத்திரத்தை சித்தரித்ததற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். மேலும் தி லஞ்ச்பாக்சு (2013), பிகு (2015), மற்றும் தல்வார் (2015) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தொடர்ந்து வெற்றி பெற்றார். மேலும் ஆலிவுட்டு படங்களான தி அமேசிங் சிபைடர் மேன் (2012), லைஃப் ஆஃப் பை (2012),[7] சுராசிக் வேர்ல்ட்டு (2015), மற்றும் இன்ஃபெர்னோ (2016) [8][9] ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார். இவரது மற்ற குறிப்பிடத்தக்க வேடங்கள் சிலம்டாக் மில்லியனர் (2008), நியூயார்க் (2009), ஐதர் (2014), மற்றும் குண்டே (2014), மற்றும் தொலைக்காட்சித் தொடர் இன் டிரீட்மென்ட் (2010) ஆகியவையாகும்.[10][11] இவரது அதிக வசூல் செய்த இந்தி திரைப்பட வெளியீடு நகைச்சுவை-நாடகமான இந்தி மீடியம் (2017) மூலம் வந்தது.[12] மேலும் இவரது இறுதித் திரைப்படத் தோற்றம் அதன் தொடர்ச்சியான ஆங்ரேசி மீடியம் (2020) ஆகும். இவை இரண்டும் அவருக்கு 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தன.[13]

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவரது படங்கள் உலகளாவிய அளவில் $3.643 பில்லியனை (₹237 பில்லியன்) வசூலித்தன. 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இர்பான்கான் நியூரோ எண்டோகிரைன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று இறந்தார்.[14][15] 93 ஆவது அகாடமி விருதுகளின் போது 'நினைவுப்பூர்வமானவர்கள்' பிரிவில் இவர் கௌரவிக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இர்பான் கான், இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூரில் ஒரு இசுலாமிய நவாப் குடும்பத்தில் பிறந்தார். கானின் தாயாரான சாய்தா பேகம், டோங்கு அக்கிம் குடும்பத்தில் இருந்து வந்தவராவார். இர்பான் கானின் காலம் சென்ற தந்தையான யாசின் கான், டோங்கு மாவட்டத்திற்கு அருகிலுள்ள கச்சூரியா கிராமத்தின் சகிர்தார் ஆவார்.[16][17] 1984 ஆம் ஆண்டில் புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியில் படிப்பதற்கு உதவித் தொகை கிடைத்த போது, இர்பான்கான் முதுகலை பல்கலைக்கழகப் பட்டத்திற்காக படித்துக்கொண்டிருந்தார்.

தனது குழந்தைப் பருவத்தை டோங்கிலும், பின்னர் ஜெய்ப்பூரிலும் இர்பான் கழித்தார். இர்ஃபான் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்கினார். 23 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான சி.கே. நாயுடு கோப்பை போட்டியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டி இந்தியாவில் முதல் தர கிரிக்கெட்டுக்கான ஒரு படிக்கல்லாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பயணச் செலவுகளைச் செலுத்த முடியாததால் இவர் அப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை.[18]

சோத்பூரில் நாடகக் கலைஞராக இருந்த தனது தாய்மாமனின் செல்வாக்கின் கீழ் இர்பான் கான் நடிப்பில் ஆர்வம் காட்டினார்.[19] ஜெய்ப்பூரில், கான் பிரபல நாடகக் கலைஞர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் நகரத்தில் பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, 1984 ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் நடிப்பு பயிலச் சேர்ந்தார்.[20][21] மும்பையில் தனது ஆரம்ப நாட்களில், இவர் ஒரு குளிரூட்டி பழுதுபார்க்கும் பணியாளராக ஒரு வேலையை ஏற்றுக்கொண்டார்.[22]

சொந்த வாழ்க்கை

[தொகு]

தனிப்பட்ட வாழ்க்கை 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதியன்று இர்பான் கான் எழுத்தாளரும் சக தேசிய நாடகப் பள்ளி பட்டதாரியுமான சுதபா சிக்தரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பாபில் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.[23]

2012 ஆம் ஆண்டில், இவர் தனது பெயரின் எழுத்துப்பிழையை "இர்ஃபான்" என்பதிலிருந்து "இர்ர்ஃபான்" என்று மாற்றினார்; தனது பெயரில் உள்ள கூடுதல் "ர்" இன் ஒலி தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறினார்.[24] பின்னர் இவர் தனது பெயரிலிருந்து "கான்" என்ற வார்த்தையையும் நீக்கிவிட்டார். ஏனெனில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நேர்காணலில், தனது பரம்பரை வரையறுப்பதை விட தனது படைப்புகள் தன்னை வரையறுக்க வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிவித்தார்.[25]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
  • 2003: பிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது - ஆசில்
  • 2007: பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகர் விருது - லைஃப் இன் எ மெட்ரோ
  • 2007: இண்டிபெண்டண்டு சிபிரிட்டு விருது: சிறந்த துணைப் பாத்திரம் - த நேம்சேக் : பரிந்துரை
  • 2008: மோசன் பிச்சரில் நடிகராக மிகச்சிறப்பாக நடித்ததற்கு சிக்ரீன் ஆக்டர்சு கில்ட் விருது - சிலம்டாக் மில்லியனர்
  • 2008: ஐஐஎபே விருது: ஐஐஎபே சிறந்த துணை நடிகர் - லைஃப் இன் எ மெட்ரோ
  • 2012: சிறந்த நடிகருக்கான தேசிய விருது - பான் சிங் டோமர்

இறப்பு

[தொகு]

2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இவருக்கு நியூரோயெண்டோகிரைன் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.[26] ஒரு வருடம் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியா திரும்பினார்.[27] கான் ஏப்ரல் 28, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவர் நோயால் ஏற்பட்ட பெருங்குடல் தொற்றுக்கு சிகிச்சை பெறத் தொடங்கினார். மறுநாள், 53 வயதில் இர்பான் கான் இறந்தார். இர்பான் கான் மும்பையில் உள்ள வெர்சோவா கப்ரிசுதானில் அடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Irrfan Khan, Indian Actor in 'Life of Pi', Dies of Cancer Aged 54". The New York Times. 29 April 2020. https://www.nytimes.com/reuters/2020/04/29/arts/29reuters-india-obituary-irrfankhan.html. பார்த்த நாள்: 29 April 2020. 
  2. Anderson, Ariston (10 December 2014). "'Jurassic World' Actor Irfan Khan on Upcoming Film: "It Will Be Like a Scary Adventure"". The Hollywood Reporter. Archived from the original on 8 October 2015. Retrieved 28 October 2015.
  3. Iqbal, Nosheen (25 July 2013). "Irrfan Khan: 'I object to the term Bollywood'". the Guardian இம் மூலத்தில் இருந்து 9 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151009211929/http://www.theguardian.com/film/2013/jul/25/irrfan-khan-bollywood-d-day. 
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.
  5. Das, Samarpita (30 April 2020). "Watch: Irrfan's first film from FTII will give you the rush" (in en). IB Times இம் மூலத்தில் இருந்து 25 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210525000618/https://www.ibtimes.co.in/watch-irrfans-first-film-ftii-will-give-you-rush-818749. 
  6. Debnath, Shanoli (1 May 2020). "প্রকাশ্যে ইরফানের তরুণ বয়সের অপ্রকাশিত শর্ট ফিল্ম, রইল লিঙ্ক" (in bn-IN). Indian Express Bangla இம் மூலத்தில் இருந்து 16 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116035037/https://bengali.indianexpress.com/entertainment/sandeep-chatterjees-ftii-diploma-film-reconnaissance-starring-irrfan-khan-anita-kanwar-surfaces-online-217529/. 
  7. "On Irrfan Khan's birth anniversary, son Babil shares unseen video footage and remembers actor's 'tech-challenged moments'". The Economic Times. 7 January 2021 இம் மூலத்தில் இருந்து 10 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210110075407/https://economictimes.indiatimes.com/magazines/panache/on-irrfan-khans-birth-anniversary-son-babil-shares-unseen-video-footage-and-remembers-actors-tech-challenged-moments/articleshow/80149574.cms. 
  8. "Irrfan Khan, 'Life of Pi,' and 'Slumdog Millionaire' Star Dies at 53". Variety. 28 April 2020 இம் மூலத்தில் இருந்து 29 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200429174611/https://variety.com/2020/film/asia/irrfan-khan-dead-dies-indian-actor-life-of-pi-1234592705/. 
  9. Bradshaw, Peter (29 April 2020). "Irrfan Khan: a seductive actor capable of exquisite gentleness". The Guardian இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011145034/https://www.theguardian.com/film/2020/apr/29/irrfan-khan-a-sensitive-and-seductive-actor-lunchbox-peter-bradshaw. 
  10. Chhabra, Aseem (29 April 2020). "Excerpt: Irrfan Khan; The Man, The Dreamer, The Star by Aseem Chhabra". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011145034/https://www.hindustantimes.com/books/excerpt-irrfan-khan-the-man-the-dreamer-the-star-by-aseem-chhabra/story-P9mcVEhTnHSWCxD3fGo3eK.html. 
  11. "Irrfan Khan: Top Indian Footfalls". Box Office India. Archived from the original on 2 November 2020. Retrieved 29 April 2020.
  12. "I'm sorry for not keeping in touch with Irfan Khan, says Saba Qamar". Lahore Herald. 10 March 2022. Archived from the original on 11 February 2023. Retrieved 11 February 2023.
  13. "Re-watching Irrfan: From Salaam Bombay to Angrezi Medium". India Today. 29 April 2020 இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011145034/https://www.indiatoday.in/movies/bollywood/story/re-watching-irrfan-from-salaam-bombay-to-angrezi-medium-1672387-2020-04-29. 
  14. France, Lisa Respers. "'Life of Pi' star Irrfan Khan reveals he has a rare tumor". CNN இம் மூலத்தில் இருந்து 16 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316162432/https://edition.cnn.com/2018/03/16/entertainment/irrfan-khan-tumor/index.html. 
  15. "Life of Pi actor has rare tumour" (in en-GB). BBC News. 16 March 2018 இம் மூலத்தில் இருந்து 13 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180613093743/https://www.bbc.com/news/world-asia-india-43426481. 
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-21. Retrieved 2010-08-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  17. http://www.irrfan.com/rev_one_india_interview.html
  18. Abish Mathew (10 November 2017), Son Of Abish feat. Vir Das & Irrfan Khan, archived from the original on 11 October 2020, retrieved 29 June 2018
  19. "Uncle who gave Irrfan Khan his first acting lessons heartbroken at Bollywood star's death". The New Indian Express. 29 April 2020. Archived from the original on 11 October 2020. Retrieved 30 April 2020.
  20. "Irrfan Khan's fond memoir from National School of Drama" (in en) இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011145043/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Irrfan-Khans-fond-memoir-from-National-School-of-Drama/articleshow/50740210.cms. 
  21. "Together after 22 years". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 6 February 2010. Archived from the original on 25 February 2019. Retrieved 29 April 2020.
  22. "Irrfan Khan Biography: Early Life, Death, Family, Education, Films, Awards, Unknown Facts, Controversies and More". Archived from the original on 11 October 2020. Retrieved 30 April 2020.
  23. "Irrfan Khan's Wife Sutapa Sikdar was His Reason to Live, Here's a Look Back at Their Love Story". News18. 29 April 2020. Archived from the original on 29 April 2020. Retrieved 29 April 2020.
  24. "Paan Singh Tomar has become a symbol: Irrfan". IBN Live. 4 March 2012 இம் மூலத்தில் இருந்து 7 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120307131416/http://ibnlive.in.com/news/paan-singh-tomar-has-become-a-symbol-irrfan/235989-8-66.html. 
  25. "Why Irrfan Khan dropped Khan from his name" இம் மூலத்தில் இருந்து 5 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200505035601/https://www.indiatoday.in/amp/movies/celebrities/story/why-irrfan-dropped-khan-from-his-name-1672447-2020-04-29. 
  26. "Irrfan Khan has neuroendocrine tumour, is travelling abroad for treatment" (in en). Hindustan Times. 16 March 2018 இம் மூலத்தில் இருந்து 26 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180326202427/https://www.hindustantimes.com/bollywood/irrfan-khan-says-he-has-neuroendocrine-tumour-is-travelling-abroad-for-treatment/story-o9jW5Zjy5bECRlrws7rcaI.html. 
  27. "Irrfan Khan admitted to ICU at Mumbai's Kokilaben hospital". Hindustan Times. 28 April 2020 இம் மூலத்தில் இருந்து 3 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200503133026/https://www.hindustantimes.com/bollywood/irrfan-khan-undergoing-treatment-at-kokilaben-hospital/story-Z90Hlkjnb5oreUcUjDNyMI.html. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்பான்_கான்&oldid=4229181" இலிருந்து மீள்விக்கப்பட்டது