நீர்நில வாழ்வன
நீர்நில வாழ்வன புதைப்படிவ காலம்:பிந்தை தெவோனிய ஊழி–முதல், | |
---|---|
மேலிருந்து, வலஞ்சுழியாக: செய்மவுரியா, மெக்சிகோவின் வளைவாழ் குருட்டுப் புழுக்கள், கீழை நியூட், இலைப்பச்சை நிற மரத்தவளை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
உட்குழுக்கள் | |
|
நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (இருவாழ்விகள் அல்லது நீர்நிலவாழ்வன; இலங்கை வழக்கு - ஈரூடகவாழிகள்; Amphibian) எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். தவளை, தேரை, குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும்.
இவை குளிர் குருதி வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகள். தற்பொழுது வாழும் இருவாழ்விகள் அனைத்தும் இலிசாம்பிபியா எனும் உள்வகுப்பைச் சார்ந்தனவாகும். இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன. இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்குகின்றன. சில இருவாழ்விகள் இக்கட்டத்தைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளவுயிரிகள் நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. இவை துணை மூச்சுயிர்க்கும் பரப்பாகத் தோலைப் பயன்படுத்துகின்றன. சில தரைவாழ் சலமாண்டர்களும் தவளைகளும் நுரையிரல் இல்லாமலே தம் தோலால் மட்டுமே மூச்சுயிர்க்கின்றன. இவை புறவடிவில் பல்லிகளைப் போலவுள்ளன என்றாலும், இவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போல முட்டையிடும் விலங்குகளாகும். எனவே, இனப்பெருக்கத்துக்காக நீரூடகம் ஏதும் தேவையற்றவை. இவற்றின் சிக்கலான இனப்பெருக்கத் தேவையும் புரையுள்ள தோலும் இவற்றைச் சூழல்நிலைகாட்டிகளாக ஆக்குகின்றன; அண்மைப் பத்தாண்டுகளில் உலகெங்கும் இருவாழி இனங்களின் தொகை அருகிவருகிறது.
மிகப் பழைய தொடக்கநிலை இருவாழிகள் நுரையீரலும் என்புமுள்ளால் ஆன துடுப்பும் அமைந்த இதழ்த்துடுப்பு மீன்களில் இருந்து தோன்றிப் படிமலர்ந்தனவாகும். இந்தக் கூறுபாடுகள் நில வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புக்கு உதவின. இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தன; ஆனால், பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன. இப்போது இலிசாம்பிபியா உள்வகுப்பு சார்ந்த இருவாழிகள் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளன.
புத்தியல்கால இருவாழிகள் மூன்று வரிசைகளில் அடங்குகின்றன; அவை தவளைகளும் தலைப்பிரட்டைகளும் அடங்கிய அனுரா வரிசை, சலமாண்டர்கள் அடங்கிய உரோடெலா வரிசை குருட்டுப்புழுக்கள் அடங்கிய அப்போடா வரிசை என்பனவாகும். இருவாழ்விகளில் தோராயமாக 7,000 இனங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தவளை இனங்கள் மட்டுமே 90% அளவுக்கு அமைந்துள்ளன. உலகிலேயே மிகச் சிறிய இருவாழியும் முதுகெலும்பியுமான பயெடோபிரிய்னே அமுவென்சிசு (Paedophryne amauensis) எனும் தவளை இனம் நியூகினியாவில் வாழ்கிறது. இதன் நீளம் 7.7 மிமீ ஆகும். மிக நீண்ட வாழும் இருவாழ்வியாக ஆந்திரியாசு தேவிதியானசு (Andrias davidianus) எனும் சீனப் பெருஞ்சலமாண்டர் அமைகிறது. இதன் நீளம் 1.8 மீ ஆகும். இதுவும் 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு (Prionosuchus) எனும் பிரேசில் நாட்டில் இடைநிலைப் பெர்மியக் காலத்தில் வாழ்ந்த இருவாழியின் குறுவடிவமே ஆகும்.
இருவாழிகளின் உடல், தலை, உடம்பு எனும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் இதயம் மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்டுள்ளது.
வகைபாடு
[தொகு]பண்டைய கிரேக்க வார்த்தையான ἀμφίβιος (amphíbios) என்ற சொல்லிலிருந்து "ஆம்ஃபிபியன்" என்ற ஆங்கிலச் சொல் வந்தது. "இதன் பொருள் இரு வகையான வாழ்க்கை" என்பதாகும். முதலில் நிலத்திலும் அல்லது தண்ணீரிலும் வாழக்கூடிய விலங்குகளுக்கு ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக நிலநீர் வாழ்விகள் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. இவற்றில் சீல்களும் நீர் நாய்களும் அடங்கும். [1]இவற்றில் நான்கு கால்கள் கொண்ட முட்டையிடாத விலங்குகள் எல்லாம் அடங்கும். அதன் பரந்த பொருளில் (சன்சு லாடோ) எனப்பட்ட, நிலநீர் வாழிகள் மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு உட்பிரிவுகள் அழிந்துவிட்டன.[2].
- உள்வகுப்பு இலெபோசுபாண்டிலி (Lepospondyli) (சிறிய தொல்லுயிரிக் குழு, இவை தற்கால இருவாழ்விகளை விட அம்னியோட்டுகளுக்கு மிகவும் நெருங்கியவை)
- உள்வகுப்பு டெர்ம்னோசுபாண்டிலி (Temnospondyli) (பல்வகை தொல்லுயிரி, இடையுயிரித் தரவகையின)
- உள்வகுப்பு இலிசாம்பிபியா (Lissamphibia) (தவளைகள், தேரைகல், சலமாண்டர்கள், நியூட்டுகள், குருட்டுப்புழுக்கள் அடங்கிய அனைத்து தற்கால இருவாழிகள்)
- வாலிலிகள் (Salientia) (தவளைகள், தேரைகள் அவற்றின் உறவினங்களும்): சுராசிக் முதல் அண்மைவரை—6,200 நடப்பு இனங்கள், 53 குடும்பங்கள்
- வாலமைவிகள் (Caudata) (சலமாண்டர்கள், நியூட்டுகள் அவற்றின் உறவினங்கள்): சுராசிக் முதல் அண்மைவரை—652 நடப்பு உயிரினங்கள், 9 குடும்பங்கள்
- காலிலிகள் (Gymnophiona) (குருட்டுப்புழுகளும் அவற்றின் உறவினங்களும்): சுராசிக் முதல் அண்மைவரை—192 நடப்பு உயிரினங்கள், 10 குடும்பங்கள்
இருவாழ்விகளின் ஒவ்வொரு குழுவிலும் அமையும் இனங்களின் எண்ணிக்கை பின்பற்றும் வகைபாட்டுமுறையைச் சார்ந்துள்ளது. மிகப் பரவலாகப் பின்பற்றும் இரண்டு பொது வகைபாட்டு முறைகளாக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இருவாழ்வி வலைத்தளம் ஏற்றுள்ள வகைபாட்டு முறையும் நீர்நில வாழ்வன, ஊர்வன உயிரியலாளராகிய டேரல் பிராசுட்டின் வகைபாட்டு முறையும் ஆகும். பின்னது அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியக முறையும் ஆகும். இம்முறை "உலகின் இருவாழ்வி இனங்கள்" எனும் இணையத் தரவுத்தளத்தில் உள்ளது.[3] பிராசுட்டு வகைபாட்டின்படியான இருவாழ்விகளின் இனங்கள் 7000 ஆகும். இவற்றில் தவளைசார் இனங்கள் மட்டுமே 90% ஆக அமைகின்றன.[4]
தொகுதி மரபியல் வகைபாட்டின்படி, இலேபிரிந்தொடோன்சியா (Labyrinthodontia) எனும் வகையன் (taxon) இணைதொகுதி மரபுக் குழுவாதலாலும் தொடக்கநிலைப் பான்மைகளைப் பகிர்தல் அன்றி, தனித்த வரையறைக்குட்பட்ட கூறுபாடுகள் ஏதும் கொண்டிராததாலும் நீக்கப்படுகிறது. ஆசிரியரின் தன்விருப்பம். கவைபிரிவியலின் மூன்று வரையறைகளில் கணுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா அல்லது தண்டுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா என்பதைப் பொறுத்து வகைபாடு மாறுபடும். மரபாக, இருவாழ்விகள் எனும் வகுப்பு, நான்குகாலும் இளவுயிரிக் கட்டமும் அமைந்தனவாகவும், வாழும் தவளைகள், சலமாண்டர்கள், குருட்டுப்புழுக்கள் ஆகிய அனைத்து இருவாழ்விகளின் பொது மூதாதையர்களை உள்ளடக்கும் குழுவாகவும் வரையறுக்கப்படுகிறது. இவற்றின் அனைத்து கால்வழி உயிரிகளும் இலிசாம்பிபியா (Lissamphibia) வகுப்பில் அமைகின்றன. தொல்லுயிரிக் கட்ட இருவாழ்விகளின் தொகுதி மரபியல் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை; இலிசாம்பிபிய வகுப்பு, அழிந்துவிட்ட இருவாழ்விக் குழுக்களையும் உள்ளடக்கலாம். அதாவது, மரபாக இலேபிரிந்தோடோன்சியா உள்வகுப்பாக அமைந்த டெர்ம்னோசுபாண்டிலி அல்லது இலெபோசுபாண்டிலி குழுக்களையும் உள்ளடக்கலாம். சில பகுப்பாய்வுகள் பனிக்குடமுடையனவற்றையும் (அம்னியோட்டுகளையும்) உள்ளடக்குகின்றன. இலின்னேய வகைபாட்டில் முன்பு வைக்கப்பட்டிருந்த தெவோனிய, கரியூழிக் கால இருவாழ்விகள் சார்ந்த நான்குகால் குழுக்களில் பலவற்றை தொகுதிமரபு வகைபாட்டியலாளர்கள் நீக்கிவிடுகின்றனர்; அவற்றை கவைபிரிவு வகைபாட்டில் வேறு இடத்தில் வைக்கின்றனர்.[5] இருவாழ்வி வகுப்பில் இருவாழ்விகளுக்கும் பனிக்குடமுடையனவற்றுக்கும் பொதுவாக அமையும் மூதாதையர்களை உள்ளடக்கினால், அக்குழு இணைதொகுதி மரபுக் குழுவாகி விடுகிறது.[6]
அனைத்து தற்கால இருவாழ்விகளும் இலிசாம்பிபியா உள்வகுப்பில் அடக்கப்படுகின்றன. இது பொது மூதாதையரில் இருந்து படிமலர்ந்த இன்ங்களின் குழுவாக அதாவது கவையாக வழக்கமாகக் கொள்ளப்படுகிறது. இவற்றின் தற்கால வரிசைகளாக, வாலிலிகள் (Anura)(தவளைகளும் தேரைகளும்), வாலமைவிகள் (Caudata அல்லது Urodela) (சலமாண்டர்கள்), காலிலிகள் (Gymnophiona அல்லது Apoda) (குருட்டுப்புழுக்கள்) ஆகியன அமைகின்றன.[7] சலமாண்டர்கள் டெர்ம்னோசுபாண்டில் வகை முதாதையில் இருந்து தனியாகத் தோன்றியதாகவும், குருட்டுப்புழுக்கள் மிக முன்னேறிய ஊர்வன வடிவ இருவாழ்விகளின் இருந்து தோன்றிய துணைக்குழுவாகவும் முன்மொழியப்படுகிறது. எனவே இவை பனிக்குடமுடையனவாகவும் கருதப்படுகின்றன.[8] தொடக்கநிலைப் பான்மைகளைக் கொண்ட பலவகை மிகப் பழைய முதனிலைத் தவளைகளின் புதைபடிவங்கள் கிடைத்திருந்தாலும், மிகப் பழைய உண்மையான தவளையாக அரிசோனாவில் தொடக்க சுராசிக் காலம் சார்ந்த கயெண்டா உருவாக்கத்தில் கிடைத்த புரோசாலிரசு பிட்டிசு (Prosalirus bitis) தான் கருதப்படுகிறது. இது உடற்கூற்றியலாக தற்காலத் தவளைகளை ஒத்துள்ளது.[9] மிகப் பழைய குருட்டுப்புழுவாக, அரிசோனாவில் கிடைத்த தொடக்க சுராசிக் கால உயிரியான யோக்கெசிலியா மைக்ரோபீடியா (Eocaecilia micropodia) கருதப்படுகிறது.[10] மிகப் பழைய சலமாண்டராக, வடகிழக்குச் சீனாவில்கிடைத்த பிந்தைய சுராசிக் கால பெயானெர்பெட்டான் சியான்பிஞ்செனிசிசு (Beiyanerpeton jianpingensis) கருதப்படுகிறது.[11]
சாலியென்சியா, வாலிலி வகுப்பை உள்ளடக்கும் உயர்வரிசையா அல்லது சாலியென்சியா வகுப்பில் வாலிலி உள்வகுப்பாகுமா என்பதில் கருத்தொருமை ஏற்படாமலே உள்ளது. மரபாக, இலிசாம்பிபியா மூன்று வரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன; ஆனால், இப்போது அழிந்துவிட்ட சலமாண்டர்வகைக் குடும்பமாகிய அல்பனெர்பெட்டோண்டிடே (Albanerpetontidae) குடும்பமும் இலிசாம்பிபியா (Lissamphibia)வில் உயர்வரிசையான சாலியென்சியாவும் பகுதிகளாகச் சேர்க்கப்படுகின்றன. மேலும், சாலியென்சியாவில், அண்மைய மூன்று வரிசைகளும் டிரையாசிக் முதனிலைத் தவளையான டிரையாடோபட்ராச்சசு (Triadobatrachus) வும் சேர்க்கப்படுகின்றன.[12]
படிமலர்ச்சி வரலாறு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Skeat, Walter W. (1897). A Concise Etymological Dictionary of the English Language. Clarendon Press. p. 39.
- ↑ Baird, Donald (May 1965). "Paleozoic lepospondyl amphibians". Integrative and Comparative Biology 5 (2): 287–294. doi:10.1093/icb/5.2.287. https://archive.org/details/sim_integrative-and-comparative-biology_1965-05_5_2/page/287.
- ↑ Frost, Darrel (2013). "American Museum of Natural History: Amphibian Species of the World 5.6, an Online Reference". The American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் October 24, 2013.
- ↑ Crump, Martha L. (2009). "Amphibian diversity and life history". Amphibian Ecology and Conservation. A Handbook of Techniques: 3–20 இம் மூலத்தில் இருந்து July 15, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110715022035/http://fds.oup.com/www.oup.com/pdf/13/9780199541188_chapter1.pdf.
- ↑ Blackburn, D. C.; Wake, D. B. (2011). "Class Amphibia Gray, 1825. In: Zhang, Z.-Q. (Ed.) Animal biodiversity: An outline of higher-level classification and survey of taxonomic richness". Zootaxa 3148: 39–55. http://mapress.com/zootaxa/2011/f/zt03148p055.pdf.
- ↑ Speer, B. W.; Waggoner, Ben (1995). "Amphibia: Systematics". University of California Museum of Paleontology. பார்க்கப்பட்ட நாள் December 13, 2012.
- ↑ Stebbins & Cohen 1995, ப. 3.
- ↑ Anderson, J.; Reisz, R.; Scott, D.; Fröbisch, N.; Sumida, S. (2008). "A stem batrachian from the Early Permian of Texas and the origin of frogs and salamanders". Nature 453 (7194): 515–518. doi:10.1038/nature06865. பப்மெட்:18497824. Bibcode: 2008Natur.453..515A. https://www.academia.edu/13288317.
- ↑ Roček, Z. (2000). "14. Mesozoic Amphibians". In Heatwole, H.; Carroll, R. L. (eds.). Amphibian Biology: Paleontology: The Evolutionary History of Amphibians (PDF). Vol. 4. Surrey Beatty & Sons. pp. 1295–1331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-949324-87-0.
- ↑ Jenkins, Farish A. Jr.; Walsh, Denis M.; Carroll, Robert L. (2007). "Anatomy of Eocaecilia micropodia, a limbed caecilian of the Early Jurassic". Bulletin of the Museum of Comparative Zoology 158 (6): 285–365. doi:10.3099/0027-4100(2007)158[285:AOEMAL]2.0.CO;2.
- ↑ Gaoa, Ke-Qin; Shubin, Neil H. (2012). "Late Jurassic salamandroid from western Liaoning, China". Proceedings of the National Academy of Sciences of the United States of America 109 (15): 5767–5772. doi:10.1073/pnas.1009828109. பப்மெட்:22411790. Bibcode: 2012PNAS..109.5767G.
- ↑ Cannatella, David (2008). "Salientia". Tree of Life Web Project. Archived from the original on ஏப்ரல் 22, 2019. பார்க்கப்பட்ட நாள் August 31, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
பாடநூல்கள்
[தொகு]- Dorit, R. L.; Walker, W. F.; Barnes, R. D. (1991). Zoology. Saunders College Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-03-030504-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stebbins, Robert C.; Cohen, Nathan W. (1995). A Natural History of Amphibians. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-03281-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
மேலும் படிக்க
[தொகு]- Carroll, Robert L. (1988). Vertebrate Paleontology and Evolution. W. H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7167-1822-2.
- Carroll, Robert L. (2009). The Rise of Amphibians: 365 Million Years of Evolution. Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9140-3.
- Duellman, William E.; Linda Trueb (1994). Biology of Amphibians. Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-4780-6.
- Frost, Darrel R.; Grant, Taran; Faivovich, Julián; Bain, Raoul H.; Haas, Alexander; Haddad, Célio F.B.; De Sá, Rafael O.; Channing, Alan et al. (2006). "The Amphibian Tree of Life". Bulletin of the American Museum of Natural History 297: 1–291. doi:10.1206/0003-0090(2006)297[0001:TATOL]2.0.CO;2. https://www.researchgate.net/publication/213771051.
- Pounds, J. Alan; Bustamante, Martín R.; Coloma, Luis A.; Consuegra, Jamie A.; Fogden, Michael P. L.; Foster, Pru N.; La Marca, Enrique; Masters, Karen L. et al. (2006). "Widespread amphibian extinctions from epidemic disease driven by global warming". Nature 439 (7073): 161–167. doi:10.1038/nature04246. பப்மெட்:16407945. Bibcode: 2006Natur.439..161A. https://www.academia.edu/13811723.
- Stuart, Simon N.; Chanson, Janice S.; Cox, Neil A.; Young, Bruce E.; Rodrigues, Ana S. L.; Fischman, Debra L.; Waller, Robert W. (2004). "Status and trends of amphibian declines and extinctions worldwide". Science 306 (5702): 1783–1786. doi:10.1126/science.1103538. பப்மெட்:15486254. Bibcode: 2004Sci...306.1783S.
- Stuart, S. N.; Hoffmann, M.; Chanson, J. S.; Cox, N. A.; Berridge, R. J.; Ramani, P.; Young, B. E., eds. (2008). Threatened Amphibians of the World. Published by Lynx Edicions, in association with IUCN-The World Conservation Union, Conservation International and NatureServe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-41-5. Archived from the original on 2014-10-30. பார்க்கப்பட்ட நாள் 2017-09-27.
வெளி இணைப்புகள்
[தொகு]- Amphibians – AnimalSpot.net
- ArchéoZooThèque : Amphibians skeletons drawings பரணிடப்பட்டது 2013-07-26 at the வந்தவழி இயந்திரம் : available in vector, image and PDF formats
- Amphibian Specialist Group
- Amphibian Ark
- AmphibiaWeb
- Global Amphibian Assessment பரணிடப்பட்டது 2011-04-12 at the வந்தவழி இயந்திரம்
- Amphibian vocalisations on Archival Sound Recordings