உள்ளடக்கத்துக்குச் செல்

குருதிப் புரதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரத்தப் புரதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குருதிவளிக்காவி ஒன்றின் அமைப்பு

குருதிப் புரதங்கள் அல்லது பாய்மப் புரதங்கள் எனப்படுபவை, குருதி நீர்மத்தில் காணப்படும் புரதங்கள் ஆகும். பாய்ம மொத்தப் புரதத்தின் அளவு கிட்டத்தட்ட 7g/dl ஆக இருக்கும். இப்புரதங்கள் பல்வேறு தொழில்களைச் செய்பவையாக இருக்கும்.

மின்புலத் தூள்நகர்ச்சி மூலம் பிரித்தெடுக்கப்படும் இந்த குருதிப் புரத அளவீடுகள் நோய்களைக் கண்டறியவும், மேலதிக தொடர்ந்த செய்ற்பாடுகளில் மாற்றங்களைக் கண்டறியவும் உதவும்.

பொதுவாக காணப்படும் அடிக்கடி பேசப்படும் புரதங்களாவன:

குருதிப் புரதம் சாதாரண மட்டம் % தொழில்
ஆல்புமின் 3.5-5.0 g/dl 60% சவ்வூடு பரவலுக்கான அமுக்கத்தை குருதியில் ஏற்படுத்தவும், இதர மூலக்கூறுகளின் கடத்தலுக்கும் உதவும்
இமியூனோகுளோபுலின் 1.0-1.5 g/dl 18% நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும்
நாரீனி (புரதம்) 0.2-0.45 g/dl 4% குருதி உறைதல்
alpha 1-antitrypsin சமிபாட்டுத்தொகுதியில் இருந்து திருப்சின் நொதியம் கசிந்து வரின் அதனைச் சமநிலைப்படுத்தும்.
ஒழுங்குபடுத்தும் புரதங்கள் <1% மரபணு வெளிப்பாட்டை ஒழுங்குபடுத்தும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிப்_புரதங்கள்&oldid=1472659" இலிருந்து மீள்விக்கப்பட்டது