இந்தோர் அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | அக்டோபர் 1, 1929[1] |
---|---|
அமைவிடம் | இந்தோர், மத்தியப் பிரதேசம் |
இந்தூர் அருங்காட்சியகம் (Indore Museum) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோரில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகமாகும். [2] இந்தூரில் உள்ள பொது தபால் நிலையத்திற்கு அருகில் இது அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தில் இரண்டு காட்சியகங்கள் உள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து நவீன சகாப்தம் வரையுள்ள அரிய கலைப் பொருள்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புராண சிற்பங்கள், வெவ்வேறு கால நாணயங்கள், பல்வேறு காலங்களின் ஆயுதங்கள் மற்றும் 11 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்கள் அரிய உலர்ந்த தாவரவியல் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பொருள்களில் சிலவாகும்.
வரலாறு
[தொகு]இந்தூர் அருங்காட்சியகம் 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா காலத்தில் ஓல்கர் மாநிலம் என்று அழைக்கப்பட்ட இந்தூர் பிராந்தியத்தில் இருந்த தொல்பொருட்களை சேகரித்து வைக்கவே இந்த அருங்காட்சியம் பயன்படுத்தப்பட்டது. [3] மத்திய அருங்காட்சியகம் என்றும் இவ்வருங்காட்சியகம் அழைக்கப்படுகிறது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ India Museums Review. Ministry of Scientific Research and Cultural Affairs, Government of India. 1959.
- ↑ Central Museum - Indore.indorecity.net.
- ↑ Madhya Pradesh (India) (1827). Madhya Pradesh District Gazetteers: Hoshangabad. Government Central Press. pp. 586–.
- ↑ Cynthia Packert Atherton (1997). The Sculpture of Early Medieval Rajasthan. BRILL. pp. 10–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10789-4.