உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலிய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆஸ்திரேலிய வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்கள் மிகத் தொன்மையான வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர். இதுவரை பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெஜெமுங்கோ (Laje Mungo) எனும் இடத்தில், 40,000 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாழ்ந்து உள்ளனர். அதற்கானச் சான்றுகள் கிடைத்து உள்ளன.

இருப்பினும், வேறு ஓர் ஆய்வும் செய்யப்பட்டு உள்ளது. 60,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆதி மனிதர்கள் இங்கு வாழ்ந்து இருக்கின்றார்கள்.[1]. இந்தப் பழங்குடிகளின் உறவும், தொடர்பும் பிற நாட்டு மக்களின் மரபணு, மொழி அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட முடியவில்லை. கதைகள், நம்பிக்கைகள், பாட்டுக்கள் மூலமாகவே தெரிய வருகின்றன.

புதிய ஒல்லாந்து, 1644ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வரைபடம்

ஆஸ்திரேலியாவின் எழுதப்பட்ட வரலாறு 1606 ஆம் ஆண்டிலிருந்தே கிடைக்கின்றன. அவ்வாண்டு எசுப்பானிய அரசு கப்பலில் பெட்ரோ பெர்னாண்டசு தெ க்யூரோசு என்ற போர்த்துகீசிய மாலுமி இங்கு வந்தார்.அவரே இதனை La Australia del Espiritu Santo (இப்போதைய வனுவாட்டு) என அழைத்தார்[2]. அந்தக் கப்பல் பயணத்தில் வந்த ஒரு நாவாய் வழிதவறி டொரெஸ் நீரிணை வழியாகச் செல்லும்போது ஆஸதிரேலியாவின் வட கடற்கரையை கண்டிருக்கலாம் என கருதப்படுகிறது[3]. இந்த கண்டுபிடிப்புகள் பல கடல் மாலுமிகளின் ஆர்வத்தைத் தூண்ட நெதர்லாந்தைச் சேர்ந்த ஏபெல் டாஸ்மான் உட்பட பலர் இந்தப் பகுதியை ஆராய வந்தனர்.

1642-ஆம் ஆண்டு வந்த டாஸ்மான் இன்றைய டாஸ்மானியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜி தீவுகளை கண்டறிந்ததோடன்றி ஆஸ்திரேலியாவின் முழுமையான நிலவரைப்பட தயாரிப்பிற்கு பெருதும் பங்காற்றியவர். 1644-ஆம் ஆண்டு மூன்று கப்பல்களுடன் வந்த அவர் நியூ கினியின் தெற்கு கடற்கரையிலிருந்து மேற்காகச் சென்றார். நியூ கினியையும் ஆஸ்திரேலியாவையும் பிரிக்கும் டொரெஸ் நீரிணையை தவறவிட்டவர், தொடர்ந்து சென்று ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையை முழுவதுமாக கண்டறிந்ததுடன் அங்குள்ள நிலம் மற்றும் மக்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதினார்[4].

இவ்வாறான கடற்பயணங்களுக்குப் பிறகும் ஆங்கிலேயர்களின் வரவு வரை பிற ஐரோப்பியர்கள் பெரிதும் வரவில்லை. 1769-ஆம் ஆண்டு, ஜேம்ஸ் குக் டெஹீட்டியின் தெற்கு மற்றும் மேற்கேயுள்ள தெற்கு கண்டத்தை கண்டறிய தமது எச்.எம்.எஸ். என்டவர் கப்பலில் வந்தவர் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பிரதேசங்களை கண்டறிந்தார்[5]. 1770-இல் பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியாவினை பற்றி அறிந்து கொண்டார்கள்.

ஆஸ்திரேலியாவின் வரலாறு பிரித்தானிய குடியேற்றம் மற்றும் பழங்குடிகளை எதிர்கொண்ட முறை குறித்து சார்புள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தவிர, ஐரோப்பியர்கள் இங்கு வரும் முன்னரே சீனத்தின் புகழ்பெற்ற கடற்தளபதி செய்ங் ஹெயின் கடற்படை பதினைந்தாம் நூற்றாண்டிலேயே இங்கு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது[6]. ஆனால் இவற்றை பல வரலாற்றியலாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை[7][8][9][10].

ஆஸ்திரேலிய பழங்குடியினர்

[தொகு]
30,000 ஆண்டு பழமைவாய்ந்த ககாடு தோசியப்பூங்காவில் உள்ள பாறை ஓவியம்

ஆஸ்திரேலிய பழங்குடியினர் ஆஸ்திரேலியாவை 40,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது 70,000 ஆண்டுகளுக்கு முன்னரோகூட வந்தடைந்திருக்கலாம்.[11][12] இவர்கள் ஒரு காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்து, ஆன்மீக மற்றும் கலை மரபுகள் பலவற்றை நிறுவினர். இவர்கள் கற்கால நுட்பங்களை பயன்படுத்தினர். இவர்களின் மக்கட்தொகை ஐரோப்பாவுடன் முதன் முதலில் தொடர்பு ஏற்பட்டபோது ஏறத்தாழ 350,000 என இருந்திருக்கக்கூடும்[13][14] ஆயினும் அண்மைய தொல்பொருள் ஆராய்ச்சி 750,000 மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என கூறுகின்றன.[15] 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். பனிக்காலத்தின்போது நியூ கினி மற்றும் தாசுமேனியா இக்கண்டத்தோடு ஒட்டியிருந்தபோது மக்கள் இங்கே குடியேறியிருக்கலாம். எவ்வாறாக இருப்பினும் சிறிது தூரமேனும் கடல் பயணம் அவசியமாதலால், இவர்களே உலகின் முதல் கப்பற்பயனியர் எனலாம்.[16]

கொலாயியா மனிதர் தீ விழாவின் போது அணியும் தலை பாகையோடு, பாரஸ்ட் நதி, மேற்கு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் இவ்வகை சமய முறைகளை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றன.
லுரிட்ஜா மனிதர் ஒருவர் கவசம் அணிதவாறு Boomerang கொண்டு தாக்கும் முறையை விளக்கும் காட்சி (1920).

1788இன் முடிவில், மக்கள் பலர் ஒருவரோடு ஒருவர் கூட்டுறவில் இருக்கும், 250 தனி நாடுகளாக இருந்தனர். ஒவ்வொரு நாட்டும் 30 அல்லது 40 அல்லது ஐந்து அல்லது ஆறு குடும்பங்களாக இருந்ததர். ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சொந்த மொழி இருந்தது. ஆனாலும் இருந்த 250 மொழிகளில் 200க்கும் மேற்பட்டவை இப்போது வழகொழிந்து போயின. இவர்களிடம் இருந்த பழக்க வழக்கங்களாலும், உள்நாட்டு விவகாரங்களை நிர்வகிக்கும் முறையாலும், சமய சடங்குகள் மூலமாகவும் இவர்களுக்கிடையே சுமூக உறவு நிலவியது.[17]

நிரந்தர ஐரோப்பிய குடியேற்றம் 1788ல் சிட்னி வந்து. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் இவர்கள் கண்டத்தின் பெரும்பகுதியினை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 1984இல் கண்டுபிடிக்கப்பட்ட பின்துபி இனமக்களே ஆஸ்திரேலிய பழங்குடியினருள் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள்.[18][18]

பிரித்தானிய குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்

[தொகு]

குடியேற்ற தன்னாட்சி மற்றும் தங்க வேட்டை

[தொகு]

இருபதாம் நூற்றாண்டு

[தொகு]

முதல் உலகப் போர்

[தொகு]

பெரும் பொருளியல் வீழ்ச்சி

[தொகு]

இரண்டாம் உலகப் போர்

[தொகு]

போருக்குப் பின்னர்

[தொகு]

21 ஆம் நூற்றாண்டில்

[தொகு]
ஜூலியா கிலார்ட், ஆஸ்திரேலிய வரலாற்றின் முதல் பெண் பிரதமர்

தொழிற் கட்சியின் கெவின் ரட் ஹவார்டினை 2007இல் தோற்கடித்து 2010 ஜூன் வரை ஆஸ்திரேலிய பிரதமராக இருந்தார். கியோட்டோ நெறிமுறையினை அமலுக்கு கொண்டுவந்தவரும், திருடப்பட்ட தலைமுறைகளுக்காக அரசு முறையில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக மின்னிப்புக்கோரியவரும் இவரே. உலகப் பொருளாதார நெருக்கடியின் துவக்க காலத்தில் இவர் பதவிஏற்றார் என்பது குறிக்கத்தக்கது.[19]

2010இல் இவருக்கு பின் பதவி ஏற்ற ஜூலியா கிலார்ட், ஆஸ்திரேலிய வரலாற்றின் முதல் பெண் பிரதமர் ஆவார்.[20] கெவின் ரட் 27 ஜூன் 2013இல் மீண்டும் பிரதமரானார்.[21]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. CLIA-UNL வலைப்பதிவு[தொடர்பிழந்த இணைப்பு]
  2. José Toribio Medina, El Piloto Juan Fernandez, Santiago de Chile, 1918, reprinted by Gabriela Mistral, 1974, pp. 136, 246.
  3. "Prado's account can be read online". Archived from the original on 2008-01-22. பார்க்கப்பட்ட நாள் 2009-12-04.
  4. *வார்ப்புரு:Dictionary of Australian Biography
  5. Andrew Cook, Introduction to An account of the discoveries made in the South Pacifick Ocean / by Alexander Dalrymple ; first printed in 1767, reissued with a foreword by Kevin Fewster and an essay by Andrew Cook, Potts Point (NSW), Hordern House Rare Books for the Australian National Maritime Museum, 1996, pp. 38–9.
  6. http://www.nla.gov.au/pub/gateways/issues/83/story01.html
  7. "The 1421 myth exposed". Archived from the original on 2007-03-28. பார்க்கப்பட்ட நாள் 2007-03-22.
  8. "Zheng He in the Americas and Other Unlikely Tales of Exploration and Discovery". பார்க்கப்பட்ட நாள் 2007-03-22.
  9. "1421: The Year China Discovered the World by Gavin Menzies". Archived from the original on 2003-07-05. பார்க்கப்பட்ட நாள் 2007-03-22.
  10. Finlay, Robert (2004). "How Not to (Re)Write World History: Gavin Menzies and the Chinese Discovery of America". Journal of World History 15 (2). 
  11. Peter Hiscock (2008). Archaeology of Ancient Australia. Routledge: London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-33811-5
  12. John Mulvaney and Johan Kamminga (1999). Prehistory of Australia. Allen and Unwin, Sydney. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86448-950-2
  13. L. Smith (1980), The Aboriginal Population of Australia, ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் Press, Canberra.
  14. Geoffrey Blainey (1975) Triumph of the Nomads: A history of Ancient Australia. p. 92 Sun Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7251-0240-3.
  15. 1301.0 – Year Book Australia, 2002 Australian Bureau of Statistics 25 January 2002
  16. Ron Laidlaw "Aboriginal Society before European settlement" in Tim Gurry (ed) (1984) The European Occupation. Heinemann Educational Australia, Richmond. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85859-250-9
  17. Richard Broome (1991) "Aboriginal People of Victoria", p. 7 in Aboriginal Australia, produced by Aboriginal and Torres Strait Islander Commission (ATSIC) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-920750-00-2
  18. 18.0 18.1 "Central Art Store: The Lost Nomads". aboriginalartstore.com.au.
  19. "Primeministers.naa.gov.au". Primeministers.naa.gov.au. Archived from the original on 2010-11-29. பார்க்கப்பட்ட நாள் 2011-07-14.
  20. "Voters leave Australia hanging" ABC News, 21 August 2010
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-27. பார்க்கப்பட்ட நாள் 2013-09-04.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திரேலிய_வரலாறு&oldid=3938239" இலிருந்து மீள்விக்கப்பட்டது