உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பிகாபதி (1937 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அம்பிகாபதி (திரைப்படம், 1937) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அம்பிகாபதி
இயக்கம்எல்லிஸ் ஆர். டங்கன்
தயாரிப்புஎம். எஸ். தொட்டண்ணா செட்டியார்
சேலம் சங்கர் பிலிம்ஸ்
கதைஇளங்கோவன்
திரைக்கதைடி. பி. எஸ். மணி
இளங்கோவன்
இசைபாபநாசம் சிவன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
பி. வி. ரெங்காச்சாரி
செருக்களத்தூர் சாமா
என். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். பாலையா
எம். ஆர். சந்தானலட்சுமி
கொன்னப்ப பாகவதர்
டி. ஏ. மதுரம்
எஸ். எஸ். ராஜமணி
பி. ஆர். மங்களம்
பி. ஜி. வெங்கடேசன்
படத்தொகுப்புஎல்லிஸ் ஆர். டங்கன்
வெளியீடுதிசம்பர் 11, 1937
நீளம்19000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

அம்பிகாபதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த 52 வாரங்கள் ஓடிய வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். சேலம் சங்கர் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் எம். எஸ். தொட்டண்ணா செட்டியார் தயாரித்து, எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இப்படத்துக்கு இளங்கோவன் எழுதிய உரையாடல் அனைவரையும் கவரும்வகையில் அழகுத் தமிழில் இருந்தது. இது தமிழ் சினிமா உரைநடையில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டுவந்தது. இப்படம் வருவதற்கு முன்பு மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுவந்த தமிழ் சினிமாவின் உரையாடல் நல்ல தமிழுக்கு மாறத் துவங்கியது.

அம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன்

ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் வடிவில் படமாக்கினார் எல்லிஸ் டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர், கொன்னப்ப பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச்சாரி தவிர கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முக்கியமானவர். இப்படம் ஒரு ஆண்டு காலம் ஓடியது. ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் முத்தக் காட்சி இதுவாகும்.

துணுக்குகள்

[தொகு]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.
  2. "Encyclopedia of Indian Cinema". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]